மெளலவி நியாஸின் மரணம் குறித்து சர்வதேச இந்து மதபீடம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்துமத பீடத்தின் செயலாளரும் ஜனாதிபதியின் இந்து சமய விவகார ஆலோசகருமான இராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
போர்ச் சூழல் காலங்களில் மிகவும் துணிகரமாக சமாதானத்துக்காக குரல் கொடுத்த நியாஸ் மெளலவி, இஸ்லாமிய தர்மத்தின்படி ஒழுங்கி, சகல மக்களுடனும் மிகவும் அந்நியோன்யமாக வாழ்ந்தவர்.
நாடு சமாதானம் பெற்ற சூழலில் அவர் எம்மை விட்டுப் பிரிந்திருப்பது எமக்கு ஆறாத்துயரை ஏற்படுத்தியிருக்கிறது. அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.