கூட இருந்து குழிபறிக்காதீர்கள்; என் கழுத்தை பிடித்து தள்ளிவிடுங்கள். தனது கட்சியிடம் காதர் எம்.பி வேண்டுகோள்

cadar.jpgஐக்கிய தேசியக்கட்சியில் நான் மிகவும் பழைமையானவன். நான் பிரயோசனமற்றவன் என்று நினைத்தால் என்னை கழுத்தை பிடித்து வெளியேற்றுங்கள். கூட இருந்தே கழுத்தை அறுக்க வேண்டாம் என கண்டி மாவட்ட ஐ. தே. க. எம். பி. ஏ. ஆர். எம். அப்துல் காதர் ஐ. தே. க விடம் கேட்டுக் கொள்வதாக நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எனக்கு இந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்ற சந்தர்ப்பம் தரவில்லை. எனக்கு பேச சந்தர்ப்பம் தரும்வரை நான் ஆசனத்தில் அமரப் போவதில்லை எனக் கூறிய காதர் எம்.பி முன் எதிர்க்கட்சி ஆசன வரிசையில் எழுந்து நின்றார்.

எனது கட்சி எனக்கு பேசுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கவில்லை. என்னுடன் கூட இருந்தே குழி பறிக்கிறார்கள் என்றார். ஆளும் தரப்பாவது எதிர்த்தரப்பாவது இவருக்கு பேசுவதற்கான நேரத்தை கொடுங்கள் என பிரதி சபாநாயகர் கேட் டுக் கொண்டதுடன் ஆளும் தரப்பிலிருந்து 5 நிமிடம் தருவதாகவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து காதர் எம். பி. பேச ஆரம்பித்தார். நான் கண்டி மாவட் டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐ. தே. க. வின் பழைமையான உறுப்பினராக உள்ளேன். கடந்த வாரம் நடைபெற்ற அமர்வுகளிலும் எனக்கு பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை.

எனினும் எனக்கு பாராளுமன்ற கட்டடத்தில் நடைபெறும் கட்சியின் கூட்டத்துக்கு 7 ஆம் திகதி வருமாறு கடிதம் அனுப்பியிருந்தார்கள். ஆனால் அவர்கள் கூட்டத்தை 6 ஆம் திகதியே நடத்தி முடித்துவிட்டார்கள். ஏன் என் கழுத்தை அறுப்பது போல நடந்து கொள்கிறார்கள். எனது தேவை அவர்களுக்கு தேவையில்லை என்று நினைத்தால், பிரயோசனமற்றவன் என்று நினைத்தால் என் கழுத்தை பிடித்து தள்ளிவிட்டால் எங்காவது போய் விடுவேன் தானே என கூறினார்.

அத்துடன் ஜனாதிபதியிடம் மற்றுமொரு கோரிக்கையை முன்வைப்பதாக கூறிய காதர் எம். பி. பாராளுமன்ற உறுப்பினர்களு க்கு வழங்கப்படும் தீர்வையற்ற வாகனங்களுக்கான பேர்மிட்டுக்களுக்கு விதி க்கப்படும் குறைந்தளவு வரியையும் நீக்கிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார். மேலும் இந்த வரவு – செலவு திட்டத்துக்கு ஆதரவாகவே வாக்களிப்பேன். வரவு – செலவு திட்டம் சிறந்தது என்றும் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *