”எல்ரிரிஈ இன் சரணடையும் கோரிக்கை மிகவும் காலம் தாழ்த்தியே வந்தது. முன்னரே சரணடைந்து இருந்தால் பல்லாயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கும்” எரிக் சொல்ஹைம்

Erik_Solheim_Pirabaharan_Vதமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைந்து இருந்தால் ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கும் என நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் எல்ரிரிஈக்கும் இலங்கை அரசுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் வகித்தவரான எரிக் சொல்ஹைம் தெரிவித்துள்ளார். இலங்கை சண்டே ரைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்து உள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் எல்ரிரிஈ இறுதிநேரத்தில் சரணடையும் முடிவை எடுத்தபோது அது மிகவும் காலம் தாழ்த்திய முடிவாகி இருந்தது என்று கூறினார்.

எல்ரிரிஈ தங்கள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைய வேண்டும் என்ற கோரிக்கை 2009 பெப்ரவரி முற்பகுதியிலேயே தேசம்நெற் இல் வைக்கப்பட்டது. எல்ரிரிஈ சரணடைவதன் மூலமே மனித அவலத்தை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்பதை அப்போது வலியுறுத்தி வந்தோம். 2009 பெப்ரவரி அளவில் 2000க்கு உட்பட்டவர்களே கொல்லப்பட்டனர். ஆனால் அதற்குப் பின்னைய நாட்களில் பல்லாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டு எல்ரிரிஈ இன் தலைமை கொல்லப்படுகின்ற இறுதி நேரத்திலேயே அவர்கள் சரணடைய முன்வந்திருந்தனர்.

எரிக் சொல்ஹைம் தனது நேர்காணலில் ”நாங்கள் எல்ரிரிஈ யை ஒழுங்குமுறையில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும்படி (சரணடையும்படி) கேட்டிருந்தோம். அப்படி நடந்திருந்தால் ஆயிரக்கணக்காண உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கும். இந்த யுத்தம் ஐக்கிய நாடுகள் சபை இந்தியா அமெரிக்கா மற்றும் சிலரின் கண்காணிப்புடன் நடைபெற்று இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

தான் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் தொடர்ந்தும் தொடர்பில் இருந்ததாகவும் ஐநா பிரதிநிதிகள் வே பிரபாகரனுடக் தொடர்பில் இருந்ததாகவும் அனால் இரு தரப்பும் வேறு வேறு காரணங்களுக்காக யுத்தத்தை தொடர்ந்தனர் என்றும் எரிக் சோல்ஹைம் குறிப்பிட்டு உள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் மே 17 2009ல் புலிகளுடைய தலைவர்கள் பா நடேசன் எஸ் புலித்தேவன் ஆகியோரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் அவர்கள் சரணடைவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி தன்னிடம் கேட்டதாகவும் தெரிவித்தார். எல்ரிரிஈ சரணடைவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஐசிஆர்சி ஐநா ஆகிய அமைப்புகளையும் கேட்டிருந்ததாகவும் எரிக் சொல்ஹைம் தெரிவித்தார்.

”(எல்ரிரிஈ இன் வேண்டுகோளை) நாங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தினோம். எல்ரிரிக்கு அவர்களுடைய (சரணடையும்) கோரிக்கை மிகத் தாமதமாக வந்ததைத் தெரியப்படுத்தினேன். அவர்கள் சரணடைவதாக இருந்தால் வெள்ளைக்கொடியைத் தூக்கிக் கொண்டு சென்று சரணடையும்படி கூறினேன். ஆனால் சிறிது நேரத்தின் பின் அவர்கள் இறந்துவிட்ட செய்தியைக் கேள்விப்பட்டேன்” என எரிக் சொல்ஹைம் எல்ரிரிஈ, க்கும் தனக்குமான கடைசி உரையாடல்கள் பற்றிக் குறிப்பிட்டார்.

ஆனால் எரிசொல்ஹைம் எல்ரிரிஈ சரணடைய முன்வந்துள்ளனர் என்ற தகவலை இலங்கை அரசில் உள்ள யாரிடம் தெரிவித்தார் என்பதை வெளியிட மறுத்துள்ளார். மேலும் இந்த சரணடையும் பேச்சுவார்த்தையில் வேறு சிலரும் தொடர்புபட்டு இருந்ததாகவும் கூறியுள்ள சொல்ஹைம் அவர்களின் பெயரையும் வெளியிட மறுத்துள்ளார்.

”யுத்தத்தை மீள ஆரம்பிப்பதற்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்காது. யுத்தத்தில் விருப்பம் இல்லை என்பதை புலம்பெயர் தமிழர்களுக்கு சொல்கிறேன். ஆனால் தமிழர்களின் உரிமைக்கு சர்வதேச சமூகத்திடம் பாரிய ஆதரவு உண்டு” எனவும் எரிக் சொல்ஹைம் தெரிவித்தார். இலங்கை ஊடகங்கள் தன்மீது பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளை வைத்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

‘இந்தியா இந்தோனேசியா மலேசியா நாடுகளில் உள்ள சிறுபான்மையினருக்கான உரிமைகளை இலங்கையும் வழங்க முன்வர வேண்டும்’ என்றவகையிலும் எரிக் சொல்ஹைம் கருத்து வெளியிட்டு இருந்தார். ”தென்னிந்திய மாநிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்களுக்குப் பல உரிமைகள் உள்ளது. அரசியல் உரிமைகளுக்குப் பலமான ஆதரவு உள்ளது. ஆனால் யுத்தத்தை மீய ஆரம்பிக்க ஆதரவு இல்லை. இதுவே நோர்வேயின் நிலைப்பாடு. இதுவே உலகில் உள்ள பெரும்பாலான அரசுகளின் நிலைப்பாடும்” எனவும் சொல்ஹைம் தெரிவித்தார்.

தற்போது ஜநா வினால் உருவாக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவையும் வரவேற்று எரிக் சொல்ஹைம் கருத்து வெளியிட்டார்.

இலங்கைத் தமிழர்களின் வரலாறு காணாத இந்த அழிவையும் அவலத்தையும் நிறுத்தியிருக்கக் கூடிய மட்டுப்படுத்தி இருக்கக் கூடிய வாய்ப்புகள் தமிழ் அரசியல் தலைமைகளிடமும் புலம்பெயர்ந்த தமிழ் தலைமைகளிடமும் இருந்தது. ஆனால் இவர்கள் தமிழ் மக்களின் அவலத்தை இன்னமும் தூண்டி விடுவதன் மூலம் சர்வதேச கவனத்தை திருப்பலாம் என்று வன்னி மக்கள் கொல்லப்படுவதற்கு துணை போயினர்.

இப்போது எந்த அரசாங்கத்திற்கு எதிராக இத்தலைமைகள் கடந்த 30 வருடமாக ஆயுதம் ஏந்திப் போராடினார்களோ அந்த அரசாங்கம் மனித உரிமைகளை மீறிவிட்டதாக கோசமிடுகின்றனர். ஆனால் அம்மக்களுக்கு வலிந்து தம் தலைமையைத் திணித்து இந்த அழிவை ஏற்படுத்தியதில் தமக்குள்ள பங்கு பற்றி மெளனமாகவே உள்ளனர்.

கடந்த 30 ஆண்டுகாலம் (சுதந்திரம் அடைந்தது முதல்) எதிரியாக கருதப்பட்ட வந்த அரசிடம் நியாயம் கேட்கும் தமிழ் தலைமைகள் தங்கள் தலைமைத்துவத்தின் வக்கற்ற அரசியலை தொடர்ந்தும் செய்வதற்காக தங்கள் தலைமையை தொடர்ந்தும் தக்க வைக்க இலங்கை அரசு மீது முழுப்பழியையும் போட்டுவிட்டு தாங்கள் தப்பிக்க இலங்கை அரசின் மனித உரிமை மீறலுக்குப் பின் தாங்கள் பதுங்கிக் கொள்கின்றனர்.

வெள்ளம் வருமுன் அணைகட்டப்பட வேண்டும். மனித உரிமைகள் மீறப்படமுன் அதனை தடுப்பதற்கான சூழலை உருவாக்க வேண்டும். கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் அர்த்தமற்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

33 Comments

 • BC
  BC

  சரணடைய வேண்டும் என்று நீங்கள் எழுதிய கட்டுரை நேற்று படித்த மாதிரி ஞாபகத்தில் இருக்கிறது. தலைவர் ராணுவத்தை உள்ளே வர விட்டு அடிக்கபோகிறார் என்று அடித்து கூறிய புலம்பெயர்ந்த புலி ஆதரவாளர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும். கிளிநொச்சியை ராணுவம் கைப்பற்றிவிட்டது என்ற செய்தியை சொன்ன போது புலி ஆதரவாளர் சிரித்த ஏளன சிரிப்பும் ஞாபகத்தில் இருக்கிறது.

  Reply
 • santhanam
  santhanam

  தலைமையின் கழுத்திற்கு கத்திவந்தபோதுதான் தலைமைவிழித்து உயிர்பிச்சைகேட்டது சர்வதேசத்தின் உளவு ஏவலிற்காக முள்ளிவாய்க்காலில் முடங்கிய போது யாரையும் நம்பாத தலைமை ஏன் கப்பலை பார்த்து ஏமாந்தது. முடவன் கொம்பு தேனிற்கு ஆசைபட்டது போலதான்.

  Reply
 • avanevan
  avanevan

  புலிகளின் அழிவுக்குப் பிரதான காரண கர்த்தாக்களில் ஒன்று நோர்வேயும் அதன் சமாதானத் தூதுவர் சொல்கெயும் என்பதைக் கூட இன்னும் புலி வால்களால் புரிந்து கொள்ளமுடியவில்லை. சமாதானம் என்பதை தமது பொருளியல் லாபத்திலிருந்தே கணிப்பிடும் மேற்குலகமும் இந்தியாவும் தமிழ் மக்களின் உரிமை தொடர்பாக கரிசனை காட்டுகிறது என்று நம்பிய முட்டாள்த் தனமான தலமையின் முடிவுகளே முள்ளிவாய்க்கால். ஒரு தேசிய விடுதலை இயக்கத்தை அழித்துவிட முடியும் என்று நிழரூபிக்கும் முதல் வரலாற்றை புலிகள் ஏற்படுத்திக் கொடுத்திருப்பது மிகவும் வேதனையானது.

  Reply
 • mohan
  mohan

  வெள்ளையைக் கண்டால் பல்லைக் காட்டி கை நீட்டீனீங்கள். உடன்பிறப்புகளுக்கு துவக்கை நீட்டீனீங்கள். ஒபாமா வருவார் எண்டு கொட்டாவி விட்டீங்கள். புறமுதுகு காட்டி ஓடமாட்டோம் என கதைக்கையில் ஏதோ நெஞ்சில் சூடு வாங்கும் வீர பரம்பரை எண்டமாதிரி பீலா காட்டீனீங்கள். புறமுதுகு காட்டமாட்டோம் ஆனால் வெள்ளைக் கொடியுடன் எதிரி காலில் விழலாம் எண்டு விழுந்த கேவலம் போராட்டத்துக்க மட்டுமல்ல தமிழினத்துக்கே கேவலம்

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  இந்திய இராணுவத்துடன் புலிகள் மோதிய போது தலை; தனக்கு ஏதாவது நடந்தால் தன் உடல் கூட இந்திய இராணுவத்திற்கு கிடைக்கக் கூடாதென கூறியதாகவும், அதனால் தலைக்கு பின்னால் தமிழ்ச்செல்வன் பெற்றோல் ரின்னுடன் தெரிந்ததாகவும் கதைகதையாக அளந்தார்கள். முள்ளிவாய்க்காலில் தலையில் கோடாலிக் கொத்துடன் தலை கிடந்த படத்தை பார்த்தபோது, பெற்றோல் ரின்னும் கொண்டு தெரிவதற்கு ஏற்ற ஆளும் ஒருவேளை இம்முறை கிடைக்கவில்லையோ என்ற கேள்வி தான் எனக்குள் எழுந்தது.

  Reply
 • chandran.raja
  chandran.raja

  குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்னா! . குறைந்தது நாற்பது நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்திருப்பதாக சொல்லப் படுகிறது நோர்வே மூலதத்தில் இலங்கையில். எல்லோருக்கும் உணவும் உறைவிடவும் வாழ்வு வசதிகளை கொடுக்கவேண்டுமென்று போராடுகிறது சமதர்மக்கொள்கைகள்.
  இதற்கு எதிர்ரிடையாக சவால் விடுவதே உலகத்தின் செல்வத்தையும் அதிகாரத்தையும் தன் அகத்தே கொண்டுள்ள ஏகாதிபத்திய அமைப்பு. போரில் ஈடபட்டு மரிப்பதும் உன்னுடைய மதமா? என்னுடை மதமா? பெரிய என்பதில் பிணக்குகளைvஏற்படுத்திவிடுவதில் பெரும் தொகையான பணத்தை செலவழிப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆகமொத்தில் இந்த பூமியில் பிறந்த மனிதன் தன்நிலை அடையக்கூடாது என்பதில் முதாலிளித்துவவர்க்கம் மிகவும் விழிப்புடனே செயல் படுகிறது.
  இதன் பிரகாரம் இலங்கைக்கு துடக்குகழிய தெளித்துவிட்ட மஞ்சல்தண்ணியே நோர்வே என்ற சமாதானத்திற்கு கிறித்தியம் செய்யப் அனுப்பி வைக்கப்பட்ட புரோகிதர் இதில் இருந்து தமிழ்மக்கள் மாயத்திரையைக் கிழித்து வெளிவரவேண்டும். சோழியன் குடும்மி சும்மா ஆடாது என்பார்கள். இவர்களின் தொண்டு உதவி சேவைகள் அப்பட்டமான பட்டுவாடா தவிர வேறு ஒன்றுமில்லை. நோர்வே சர்வதேசத்தின் மூலதத்தின் பிரதிநிதியே தவிர வேறு ஒன்றுமில்லை. இதை புரிந்துகொள்வதால் மட்டுமே! எம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளமுடியும்.

  Reply
 • Nathan
  Nathan

  Sorry for writing this in English as I don’t have Tamil fonts.

  When I read this article and these comments, I was shocked and thought whether these have been written by some ‘Non-Tamil’ people. I know Jeyabalan has some ‘personal issues’ with LTTE so he is trying hard to prove that Mr Pirabaharan was surrendered and then killed. However, either he or anyone couldn’t prove anything yet. It’s all Jeyabalan’s imaginations and nothing else. Anyway can Jeyabalan answer these questions?
  1. Why SL Govt didn’t issue the death certificate of Mr Pirabaharan to India yet?
  2. What happened to Potto Amman and where is his body?
  3. Even if Pirabaharan surrendered why they want to kill him in 36 hrs?
  4. Is 36 or 48 hrs enough to ask about 30 years old movement’s money dealings, arms dealing, and foreign government’s contacts?
  5. While they keep non important people like George and Thaya master, why would they kill him instantly?
  6. They could’ve kept him in a secret camp and carry out detailed interrogation. Why didn’t they do that?
  7. In SL there is no way to analyse DNA sample in two days so how come the Govt did that?

  For the comments writers…

  Whether you like it or not, LTTE was the symbol of Tamil’s power and dignity. Most of the southern Singalese had a fear so they always kept a distance with Tamils. Now even in Jaffna Singhalese tourists are rude and very demanding to the shop keepers. I witnessed one incident in Jaffna, that a group of young Sinhala men taking Mickey out of an elderly shop keeper. Even they said in Sinhala ‘Matchan give him a slap and tell him to go to LTTE and tell about this’. Thankfully they didn’t do that but even they did, neither me nor the shop keeper wouldn’t have done anything.

  Wherever you guys go in SL, you’ll be categorised as TAMILS and not pro LTTE or anti LTTE. They don’t even care about that. Fall of LTTE is shame of Tamils. If you argue it’s not, then help the rape victims and help to find people those who are missing rather than slinging mud. Jeyabalan, this is for you too. You can’t change the history. Still majority of people are supporters or sympathisers of LTTE. For example how many people would come to your ‘Thesam’ arranged meetings and how many came to ‘Maaveerar Naal’? A journalist should work FOR the people not AGAINST them. All you have written is actually down grading all the Tamils which is INCLUDING YOU!!

  Reply
 • Jeyabalan T
  Jeyabalan T

  நாதன் வன்னி யுத்தத்தின் விளிம்பில் மக்கள் மரணித்துக் கொண்டிருக்கையில் புலிகளும் அவர்களின் ஆதரவாளர்களான புலத்து தலைமைகளும் வன்னி எம்மக்களின் சொந்தமண் பூர்வீக மண் அவர்கள் அங்கிருந்து வெளியேறக் கூடாது என்றும் வெளியேறுபவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதையும் நியாயப்படுத்தினார்களே. அப்போது நான் புலிகளும் இந்த ஆதரவுத் தலைமையும் இலங்கை அரசாங்கத்திடம் கையூட்டுப் பெற்றுத்தான் எம்மினத்தை அழிக்கிறார்களோ என்றே நினைத்தது உண்டு. ஆனால் பின்னாளில் தான் அவர்கள் தங்களைக் காப்பாற்றவே தம்மினத்தை அழித்தார்கள் என்ற உண்மையை அறிந்தேன்.

  பிரபாகரன் இன்னும் இருக்கிறார் இல்லை என்பவர்கள் ஆதாரத்தை கொண்டுவாங்கோ என்று கேட்கிறீர்கள். உங்கள் கேள்விக்கான விடைகள் கடந்த ஆண்டு மே மாதத்தில் தேசம்நெற் இல் உள்ள கட்டுரைகளில் உள்ளது நீங்கள் பார்க்கலாம்.

  நீங்கள் சொல்வது போல் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவே வைத்துக் கொள்வோம். உங்களைப் போல் எனக்கு சில கேள்விகள் உள்ளது. பதில் அளிக்கிறீர்களா?

  1. தன்னை நம்பி வந்த மக்களை ஆயிரக் கணக்கில் பலிகொடுத்து இறுதியில் இவர் மட்டும் எப்படித் தப்பினார்?
  2. தன்னை நம்பி வந்து ஆயிரக் கணக்கில் உயிரிழந்த மக்களுக்கும் போராளிகளுக்கும் ஒவ்வொரு நாளுமல்ல வருடத்தில் ஒருமுறை அஞ்சலி செய்யும் மாவீரர் நாளுக்கு நேரில் வரவேண்டாம் ஒரு அஞ்சலி உரையையாவது ஒஸ்மா பின்லாடன் போல பதிவு செய்து அனுப்பி இருக்கலாமே.
  3. கருணா பிள்ளையான் கேபி இவர்கள் புலிகள் இயக்கத்தில் இருக்கவில்லை என்பது உண்மையா?
  4. பிந்திரன் வாலேயும் எம்ஜிஆர் ம் இன்னும் உயிருடன் இருப்பதாக இந்தியாவில் சிலர் கூறுகின்றனர். பிந்திரன்வாலே எம்ஜீஆர் ஆகியோரை ஒரு தடவை சந்திக்க ஏற்பாடு செய்ய முடியுமா?

  தயவு செய்து பதிலளிக்கவும்.

  LTTE was the symbol of Tamil’s power and dignity. – புலிகள் தமிழ் மக்களின் குறியீடு என்று சொல்லி இருக்கிறீர்கள். அதனால் தான் புலிகள் வன்னி மக்களை இலங்கை இராணுவத்துடன் இணைந்து கொன்று குவித்தனர்.

  LTTE was the symbol of Tamil’s power and dignity. நீங்கள் உங்கள் கருத்துடனேயெ முரண்படுகின்றீர்கள். you’ll be categorised as TAMILS and not pro LTTE or anti LTTE.

  //Fall of LTTE is shame of Tamils. If you argue it’s not, then help the rape victims and help to find people those who are missing rather than slinging mud. // நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அதனை நோக்கியே எமது செயற்பாடுகள் உள்ளது. ஆனால் சேறடிப்பது யார் என்பதை சேறடிப்பவர்களே கேட்கும் போது என்ன செய்ய முடியும்.

  //Jeyabalan, this is for you too. You can’t change the history.// சிறு திருத்தம் இதுவரை எழுதப்பட்ட வரலாற்றை மாற்ற முடியாது. தமிழீழ விடுதலைப் புலிகளும் அதன் தலைவர் பிரபாகரனும் தங்களது படுமோசமான அரசியல் இராணுவ நடவடிக்கையால் இலங்கைத் தமிழ் மக்களை வரலாறு காணாத அழிவுக்கு உட்படுத்தினார். ஆனால் இவ்வாறான ஒரு வன்முறை இயக்கமும் சர்வதிகாரத் தலைமையும் தமிழ் மக்களுக்குள் முளைவிடாது தடுக்க நாம் வழிப்பாக இருக்க வேண்டும். இனி எழுதப்படும் வரலாற்றை மாற்றி அமைக்க வேண்டும்.

  //Still majority of people are supporters or sympathisers of LTTE. For example how many people would come to your ‘Thesam’ arranged meetings and how many came to ‘Maaveerar Naal’?// மாவீரர் நாளுக்கு ஆட்கள் போதாது என்றால் இன்னும் மூன்று லட்சம் தமிழர்கள் வன்னியில் எஞ்சி உள்ளனர். அவர்களுக்கும் சமாதிகட்டினால் மாவீரர் நாளுக்கு இன்னும் பல லட்சம் உறவுகள் வந்து மண்டபத்தை நிறைக்கும். தேசம்நெற் க்கு மரணத்தை வைத்து கூட்டம் சேர்க்க வேண்டிய தேவை இல்லை நாதன்.

  //A journalist should work FOR the people not AGAINST them. All you have written is actually down grading all the Tamils which is INCLUDING YOU!!// தவறுகளை ஏற்றுக்கொள்ளாதவரை அத்தவறைத் திருத்திக்கொள்ள முடியாது. நாதன் துரதிஸ்ட வசமாக உங்கள் போன்றவர்களின் அரசியல் முன்னெடுப்பு தமிழ் மக்களை ஆபத்திற்குள் தள்ளும் அபாயம் உண்டு. அதனை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு தேசம்நெற் போன்ற ஊடகங்களுக்கு உண்டு.

  த ஜெயபாலன்.

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  ஜெயபாலன்,

  நாதன் போன்றவர்கள் கண்ணை மூடிக் கொண்டு பால் குடிக்கும் பூனைக்கு ஒப்பானவர்கள். இவர்கள் எப்போதும் தாம் தான் உலகில் அறிவாளிகள் போலும் மற்றையவர்கள் எல்லாம் முட்டாள்களென்று தலை வழியிலேயே சிந்தித்து பதிலளிப்பவர்கள். இவர்களைத் திருத்த முடியாது, தானாகத் திருந்தினால் மட்டுமே உண்டு.

  நீங்கள் கேட்ட கேள்விகளில் முக்கியமான ஒரு கேள்வியையும் விட்டுவிட்டீர்கள். உயிரோடிருப்பதாக கதையளக்கப்படும் தலை தனது சக தளபதிகளுக்கோ அல்லது போராளிகளுக்கோ அஞ்சலி செய்யாததை விடுவோம், தனது தந்தையின் மரணத்திற்காவது வாய் திறக்க முடியாமல் போன மர்மம் என்ன ?? ஒருவேளை மேல் உலகத்தில் நேரடியாகவே அஞ்சலி செய்யலாமென்ற நம்பிக்கையில் வாய் மூடி விட்டாரா ?? கேட்பவன் கேணையன் என்றால் எருமைமாடு ஏரோப்பிளோன் ஓட்டிய கதையை நாதன் போன்றோர் நிறையவே எடுத்து விடுவார்கள்…………

  Reply
 • nantha
  nantha

  பார்த்திபன்:
  “இவ்வுலகத்துக்கும் அவ்வுலகத்துக்கும்” இதுவரையில் “மீடியா” தொடர்புகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால் “மேதகு”வின் அறிக்கை இப்போதைக்கு வெளிவராது என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன்!
  Nathan:
  Please note my point!

  Reply
 • Mohamed Nisthar
  Mohamed Nisthar

  Hi, Nathan!

  I’m sorry to poke my nose in answering to the questions put to Jayapalan. Are you still serious? I do not believe any sane person would raise those questions now. Have you ever thought of very simple question like, if Prabhaharn is alive then who is goin to care him? and why should any one care him in the first place? What’s he going to do?

  Besides,one of my relatives said that Prabhaharan will appear in 2012. She is very much confident of it. I asked her if he is coming to UK for watching Oylmpics 2012? She then became damn wild.

  Anyway Nathan can you please see my article on 26 November 2009 in Thesamnet about “IBC” radio ? and just try to find answers to my questions raised. Wake up friend.

  Reply
 • Nathan
  Nathan

  I think you misunderstood my question Jeyabalan. I NEVER said that Mr Pirabaharan is alive. All I asked you to prove that he was surrendered and then got killed. I said your article was an imagination as you have NO proof what so ever. Anybody can write with their imaginations and you call your self as journalist and not a story writer. There are fundamental differences in those as a journalist should put his/her arguments with proof.

  I don’t need to answer your questions relates to Mr Pirabaharan as you didn’t understand my point. My point was he fought till end and he killed him self. If you ask me proof, I’m not a journalist so I can’t and don’t have proof SAME AS YOU.

  People over here marched to stop the war and no one said to stay in the war zone. If you think that nearly 150,000 people marched to kill their own blood then you’re naive. Many thousands relatives of those who trapped in Wanni were also marched in London roads to STOP the war not to kill them. No one would like to encourage the fellow Tamils to die in war except some who work for the Government’s money.

  My point was, why you taking so much of time and fun to kill the dead snake. While you write this, what did you do to bring the GoSL to war crime tribunal? I don’t have problem if you bring the LTTE too but bring the common enemy (barbaric Sinhala Government) to justice. How many article have you written about SL war crime allegation? I didn’t say LTTE never committed a crime. All what I was saying bring the SL govt and punish them first. You can even bring the LTTE but even if they convicted, there is no one alive to be punished. May be KP??

  நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அதனை நோக்கியே எமது செயற்பாடுகள் உள்ளது. ஆனால் சேறடிப்பது யார் என்பதை சேறடிப்பவர்களே கேட்கும் போது என்ன செய்ய முடியும். Can you list it out please? I know so many people say so many things. You as Jeyabalan – journalist, what did you do apart from mud slinging? Please don’t talk about charities that you are named as a patent or a trusty. I and other readers like to know what you did on your own.

  மாவீரர் நாளுக்கு ஆட்கள் போதாது என்றால் இன்னும் மூன்று லட்சம் தமிழர்கள் வன்னியில் எஞ்சி உள்ளனர். அவர்களுக்கும் சமாதிகட்டினால் மாவீரர் நாளுக்கு இன்னும் பல லட்சம் உறவுகள் வந்து மண்டபத்தை நிறைக்கும். தேசம்நெற் க்கு மரணத்தை வைத்து கூட்டம் சேர்க்க வேண்டிய தேவை இல்லை நந்தன். So you’re saying, even LTTE kills their relatives in Wanni, their relatives over here go and donate money. In your world people will go and pray for their relatives with the perpetrators responsible for their death??? So still people are supporting LTTE not Thesam for any reasons.
  //Jeyabalan, this is for you too. You can’t change the history.// சிறு திருத்தம் இதுவரை எழுதப்பட்ட வரலாற்றை மாற்ற முடியாது. தமிழீழ விடுதலைப் புலிகளும் அதன் தலைவர் பிரபாகரனும் தங்களது படுமோசமான அரசியல் இராணுவ நடவடிக்கையால் இலங்கைத் தமிழ் மக்களை வரலாறு காணாத அழிவுக்கு உட்படுத்தினார். ஆனால் இவ்வாறான ஒரு வன்முறை இயக்கமும் சர்வதிகாரத் தலைமையும் தமிழ் மக்களுக்குள் முளைவிடாது தடுக்க நாம் வழிப்பாக இருக்க வேண்டும். இனி எழுதப்படும் வரலாற்றை மாற்றி அமைக்க வேண்டும். . You must be joking? Do you really think Tamils in N&E are ready for another revolution? Even if they did, would SL Govt let them go as far as they did in 1980’s??? You very well know armed movements uprising is never going to happen in SL as no one has the strength and people now have nothing to loose anymore except their soles. Most importantly we don’t have a leader like Mr Pirabaharan and may never l have in the future. Now the SL govt needs LTTE more than Tamils so they can put the all the blame. That’s why they have Col. Ram story. What you’re doing is fuelling their idea and encouraging the secret concentration cams to hold Tamil youths.
  தவறுகளை ஏற்றுக்கொள்ளாதவரை அத்தவறைத் திருத்திக்கொள்ள முடியாது. நாதன் துரதிஸ்ட வசமாக உங்கள் போன்றவர்களின் அரசியல் முன்னெடுப்பு தமிழ் மக்களை ஆபத்திற்குள் தள்ளும் அபாயம் உண்டு. அதனை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு தேசம்நெற் போன்ற ஊடகங்களுக்கு உண்டு. Now we’re on post LTTE era. There is no point talking about LTTE era and criticise. You can do all the constrictive criticism AFTER us, Tamils achieve something. Now we have nothing. Your approach is to blame LTTE for everything and not doing any thing to your own peoples’ future. OK by saying that LTTE is responsible for everything, do you think SL govt will treat the Tamils with dignity? Is it what you’re witnessing in SL now? Why a Tamil from abroad should take a MoD clearance even a year after defeating the LTTE? No Sinhalese need a clearance to go anywhere even with a foreign passport?
  You’re talking about LTTE and its politics. In recent months Methanada Theror – Leader of Shihala Urumaya spitting racial comments and did you at least say any thing about that? In BBC there was a claim of abuse of PoW and have you mentioned anywhere in your web about them? There are secret concentration camps and Govt is showing 1 ‘show off’ camp to people like you and have you ever tried to go and see other places? And did you write anything about that. Talk about those how are alive and it’s latterly no point talking about Pirabaharan as we all know he is dead.

  Parthiban,
  I don’t really want to waste my time by writing a counter comment for you as you correctly said about you on the last few lines on your comment. Well done, you know who you are.
  PS. Please read any comments BEFORE you write a comment on comment.

  Reply
 • Jeyabalan T
  Jeyabalan T

  நாதன் உங்கள் கேள்விகள் அத்தனைக்கும் ஆன பதில்களும் ஆதாரங்களும் தேசம்நெற் இல் உண்டு நீங்கள் பலவற்றையும் அறிந்து கொள்ள வேண்டும் என்று தேடலுடையவராக இருந்தால் அவற்றை வாசித்து அறிய முடியும். இல்லை குண்டுச் சட்டிக்குள் புலி ஓடுவேன் என்றால் ஒரு ஊடகவியலாளனாக என்னால் எதுவும் செய்யமுடியாது. தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரையும் திருப்திப்படுத்த நான் ஊடகவியலாளனாக வரவில்லை. பொது நோக்கின் அடிப்படையிலேயே ஊடகவியலாளனாக செயற்பட முடியும். உங்களைப் போன்ற பலரது கேள்விகளை 1997ல் ஊடகத்தை ஆரம்பித்ததில் இருந்து பார்த்து வருகின்றேன். ஆனால் எனது அரசியல் எழுத்துக்களில் நான் தவறவில்லை என்பதை காலம் உறுதிப்படுத்தி உள்ளது.

  Reply
 • sarangan
  sarangan

  அது சரி ஜெயபாலன் நீங்கள் பொதுவான தமிழர் தரப்பு ஊடகவியலாளன் என்றால் இலங்கை அரசு செய்யும் அநியாயங்களையும் எழுதினால் உங்களின் எழுத்தை நடுநிலை ஊடக பணி செய்பவர் என்போம்.

  Reply
 • Mohamed Nisthar
  Mohamed Nisthar

  சென்ற வருடம் முன்னை நாள் அமெரிக்க உதவி சட்டமா அதிபர் ப்ரூஸ்(Bருசெ) அவர்கள் இன அழிப்பு சம்பந்தமாக பேச வந்த போது நாம் ஒரு கேள்வியை முன்வைத்தோம், அதாவது உங்களுடைய இந்த முயற்சிக்கப்பால் இந்த புலம் பெயர் தழிழர் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டபோது அவர்களுக்கு (அரசியல்)அறிவூட்டுங்கள் என்றார். இதிலிருந்து நாம் அறிய வேண்டியது என்னவென்றால் நம் மக்களுக்கு அரசியல் அறிவு போதாதென்று அவர் கருதுவதாகும்.

  இப்போது சொல்லுங்கள் ஏன் மாவீரர் தினத்துக்கு கூட்டம் அதிகமாகவும் தேசம்நெற் கூட்டத்துக்கு குறைவாகவும் வருகிறார்கள் என்று. மேலும் ஊர்வலத்தில் போர் நிறுத்த கோரியோரும் இவர்

  Reply
 • Nirthanan
  Nirthanan

  //உங்களைப் போன்ற பலரது கேள்விகளை 1997ல் ஊடகத்தை ஆரம்பித்ததில் இருந்து பார்த்து வருகின்றேன். ஆனால் எனது அரசியல் எழுத்துக்களில் நான் தவறவில்லை என்பதை காலம் உறுதிப்படுத்தி உள்ளது.// jeyabalan

  என்ன சொல்ல வாறீங்கள்? இப்படி தான் பிரபாகரன், அமிர், புஷ் எல்லோரும் சொன்னவர்கள். உங்களையும் மக்கள் கேள்வி கேட்களாம் என்று நீங்கள் நம்பும் மட்டும் உங்களால் இதை விட ஒன்றும் செய்யமுடியாது. காலத்தை உறுதி படுத்துவது உங்கள் கையில் இல்லை.

  Reply
 • Jeyabalan T
  Jeyabalan T

  //நீங்கள் பொதுவான தமிழர் தரப்பு ஊடகவியலாளன் என்றால் இலங்கை அரசு செய்யும் அநியாயங்களையும் எழுதினால் உங்களின் எழுத்தை நடுநிலை ஊடக பணி செய்பவர் என்போம்.// சாரங்கன்
  நான் தமிழன் என்பதிலும் பார்க்க மனிதனாகவே முதலில் இனம் காண்கிறேன். கடமையைப் பொறுத்தவரை ஊடகவியலாளன். தமிழ் தரப்பு ஊடகவியலாளன் அல்ல. தமிழ் தரப்பு ஊடகவியலாளன் என்றால் தான் இலங்கை அரசு செய்யும் அநியாயங்களையும் எழுதலாம் என்பதே அடிப்படையில் தவறானது. அடுத்து யாருடைய சேர்ட்டிபிக்கறிக்காகவும் நான் எழுதுவதில்லை. எனக்கு தவறு என்பதைச் சுட்டிக்காட்டவும் சரியென்பதை எடுத்துக்கூறவும் எவ்வித தயக்கமும் கிடையாது. இலங்கை அரசு பற்றியும் அதன் இனவாதப் போக்குப் பற்றியும் மனித உரிமை மீறல்கள் பற்றியும் பல பதிவுகள் தேசம்நெற்றில் உள்ளது. இது உங்கள் சேட்டிபிக்கறிற்காக அல்ல தகவலுக்கு மட்டுமே.

  //உங்களையும் மக்கள் கேள்வி கேட்களாம் என்று நீங்கள் நம்பும் மட்டும் உங்களால் இதை விட ஒன்றும் செய்யமுடியாது. காலத்தை உறுதி படுத்துவது உங்கள் கையில் இல்லை.// நிர்த்தனன்
  நிர்த்தனன் நீங்கள் மக்கள் இல்லாமல் கடவுளா? தலைவரா? நீங்களே கேள்வியைக் கேட்டுவிட்டு மக்கள் கேள்வி கேட்கலாம் என்றால் என்ன அர்த்தம். இந்தக் கருத்துத்தளம் எதற்கு இருக்கு. சித்திரகுப்தன் பொழுதுபோகாவிட்டால் வந்து தலையெழுத்தை எழுதவா? இல்லலே இல்லை உங்களைப் போல் வந்து கேள்வி கேட்பதற்கே இத்தளம் இருக்கின்றது. கடந்த சில ஆண்டுகளாக அந்தக் கேள்விகளுக்கு எல்லாம் நாம் பதிலளித்து வருகின்றோம்.

  மக்கள் எங்களைக் கேள்வி கேட்டு துளைத்து எடுப்பார்கள் அப்படிச் செய்யாவிட்டால் எனக்கு தூக்கம் வராது. என்பதில் நான் மிகவும் தெளிவாகவே இருக்கிறேன். அதனால் தான் நான் இன்னமும் சரியான பாதையில் நிற்பதாக மக்கள் தளத்தில் என் கருத்தை எனது சொந்த அடையாளத்துடன் தயக்கமின்றி கடந்த 12 ஆண்டுகளாக வைத்துள்ளேன். வைத்துக்கொண்டு வருகின்றேன். இனியும் வைப்பேன்.

  காலத்தை நாங்கள் உறுதிப்படுத்துவதில்லை. அதனைக் காலமே உறுதிப்படுத்தும். நாங்கள் உறுதிப்படுத்தினால் அது எங்களுக்கு நாங்களே பட்டமளிப்பதாக அமையும். அதனால் தான் எமது கையில் இல்லாத காலத்தை எமது கருத்துக்களையும் நடவடிக்கைகளையும் உறுதிப்படுத்தவிட்டுள்ளோம்.

  பதிலை விளங்கிக் கொள்ள முடியாவிட்டால் உங்களுக்கு கேள்வி சரியாக விளங்கவில்லை அல்லது கேள்வியைத் தவறாக விளங்கிக்கொண்டு விட்டீர்கள் என்று சொல்வது ஒருமுறை, இல்லாவிட்டால் I don’t really want to waste my time by writing a counter comment for you என்றும் சொல்லலாம். நீங்கள் இந்த இரண்டையுமே கையாண்டு இருக்கிறீர்கள்.

  Reply
 • sarangan
  sarangan

  ஜெயபாலன் நான் கூறிய கருத்தினால் நீங்கள் சொல்ல வருவது புரிகிறது. உங்கள் வலி புரிகிறது. ஆனால் அனேகமான உங்கள் எழுத்துக்கள். எமது புண்பட்ட மக்களின் பால் அக்கறை உடையவராக உங்களை இனம் காட்டவில்லையே.

  Reply
 • BC
  BC

  இலங்கையில் வாழும் மக்களின் மீதான உண்மையான அக்கறையை ஜெயபாலன் எழுத்துக்கள் பிரதிபலிக்கிறது. தேசம்நெற்றின் சிறப்பே அது தான்.

  Reply
 • chandran.raja
  chandran.raja

  சாரங்கன்! இரண்டு வசனங்களில் நீங்கள் புத்திசாலி என நிறுவாதீர்கள். நேர்மையான முறையில் உமது “புண்பட்ட மனிதர்கள்” யார் என்பதை தெளிவாக இத்தளத்தில் எடுத்துரைப்பீர். அந்த கணமே நீரும் இச்சமூகத்தில் ஒரு நேர்மையான மனிதராக கணக்கெடுத்து கொள்ளப்படுவீர்.
  இல்லையேல் பழையசமூகத்தில் இடியுண்டு புதைந்து போகும் மனிதரில் ஒருவரே தாங்களும்.

  Reply
 • Nathan
  Nathan

  Jeyabalan,
  It’s obvious that you are doing a mudslinging as you never bothered to criticise the inhumanity against the Tamils by the Sinhala Government. You’re only interested and spending time when ever you can blame LTTE for any of the outcomes.

  When I was reading some of the comments, I’m really proud that readers are very open minded and committed for our own people back in SL. There are two sides on everything. For your convenience, you are taking one side and comfortably ignoring the other. Same in your article, you said Mr Pirabaharan was surrendered and then killed. Let’s say that was right, so as the army of a democratic (??) country, what should’ve done when a person surrendered. No matter what, he should’ve brought in to justice and punished if found guilty. Who gave authority to Rajapaksha and Co to decide who can live and how can’t? Isn’t that a war crime?? Isn’t a crime against human kind?? Isn’t it impunity?? So why didn’t you write anything about that? What are the steps you taken as a responsible journalist to bring this to light? Why do we have to rely on Channel 4 and Aljazeera to report on war crime allegations?

  You have no answers Jeyabalan. Unless you change your politics you’ll never work with base level people. You can proudly blow your own trumpet that you’re a journalist and directing a web site for 12 years but you’ll never win people’s heart. You only win when at least 10 people say that ‘Thesam is an unbiased media’.

  BTW, thanks for quoting my saying in one of your reply. Just to classify, I have no responsibilities to answer to comment writers and my discussions are with you only. Also, that comment writer didn’t read my points at all and wrote a comment based on your comment. This is why our people make mistakes by just following a loose end. If some one can’t read or understand the facts, I’m surely not a person to educate them. As a journalist you should educate them.

  As one of the commenter said that we need political education. My battle is, journalist like you should take an unbiased stand and educate those people politically and slinging mud.

  Reply
 • naanee
  naanee

  பிரபாகரன் சரணடந்தாரோ தெரியாது ஆனால் நடேசனும் புலித்தேவனும் சரணடைந்த்து உண்மைதானே. புலிகள் காதலிக்க கூடாது, கல்யாணம் செய்யக் கூடாது என்ற தலைவர் தனக்கு காதல் வந்ததும் சட்டத்தை மாற்றினர். அதையே தான் இங்கும் செய்தார்கள். தங்கள் உயிர் போகாப் போகின்றதென்ற நிலை வந்ததும் சரணடைவது என்று புலிகளின் அடிப்படை சட்டத்தையே மாற்றினார்கள். பின்னர் இப்போ கதைவிடுகின்றார்கள் மக்களின் அழிவை சகிக்கமுடியாமல் சரணடைதார்களாம் என்று. ஒரு ஆறு மாதத்திற்கு முன்பு இதை செய்திருந்தால் எவ்வளவு உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்.

  புலிகள் போராட்டம் தொடங்கிய காலத்தில் இருந்தே மக்களின் அழிவுதான் அவர்களின் பெரிய ஆயுதம். உலகத்திற்கு படம் காட்டுவதற்கு இலங்கை, இந்திய அரசுகளை கொண்டு எத்தனை அப்பாவி தமிழர்களின் உயிர்களை எடுத்தார்கள்.

  நாதன் போன்று சிந்திப்போர் உலகெங்கும் இருந்தபடியால் தான் புலிகளும் அதன் தலமையும் இந்த அளவிற்கு வளர்ந்தது. கருணாநிதியை துரோகி எனும் நீங்கள் கருணாநிதிக்கும் ஒரு வரலாறும் பல கோடி தமிழரின் ஆதரவு இருக்ககென்பதை எப்படி மறந்துவிடுகின்றீகள். தமிழருக்கு எம்.ஜி.ஆர், ரஜனி, பிரபாகரன், விஜய் இவர்கள்தான் தலைவர்களாவதற்கு சரியானவர்கள்.

  Reply
 • BC
  BC

  // கருணாநிதியை துரோகி எனும் நீங்கள் கருணாநிதிக்கும் ஒரு வரலாறும் பல கோடி தமிழரின் ஆதரவு இருக்ககென்பதை எப்படி மறந்துவிடுகின்றீகள்.// naanee

  கருணாநிதியை துரோகி என்று இவர்கள் திட்டி தீர்ப்பதை பார்த்தால் புலிகளின் தலைவர் கருணாநிதியா, பிரபாகரனா என்ற சந்தேகம் வருகிறது. தங்கள் தலைவர் மேல் உள்ள வெறுப்பை அவர்கள் சிந்தனை வளர்க்கபட்ட விதத்தினால் அவர் மீது காட்டமுடியாததால் அதை எல்லாம் சேர்த்து கருணாநிதியை திட்டி தீர்த்து கொள்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

  Reply
 • Nathan
  Nathan

  I don’t really like to comment on comment as this will go forever and nothing will happen by arguing like that.

  Nevertheless, I’m writing few words for this guy called ‘Naanee’ as he also misinterpret the point.

  Naanee, my point was not to gain support for LTTE and Pirabaharan from people like you. I understand there are people affected by LTTE and still absolutely hating them. However, you can’t do politics by saying பிரபாகரன் சரணடந்தாரோ தெரியாது ஆனால் நடேசனும் புலித்தேவனும் சரணடைந்த்து உண்மைதானே. புலிகள் காதலிக்க கூடாது, கல்யாணம் செய்யக் கூடாது என்ற தலைவர் தனக்கு காதல் வந்ததும் சட்டத்தை மாற்றினர். அதையே தான் இங்கும் செய்தார்கள். தங்கள் உயிர் போகாப் போகின்றதென்ற நிலை வந்ததும் சரணடைவது என்று புலிகளின் அடிப்படை சட்டத்தையே மாற்றினார்கள். It’s all history now. When you write this did you realise that NOTHING happened except you had a little satisfaction in your mind as you write something bad about LTTE and Pirabaharan. Any gain to people those who are suffering in back home? NO absolutely NO help what so ever.

  My point is we all should work to gather for Tamil people. Our common enemy is Sinhala barbaric Government. We should get justice for those 40,000 lost lives in Wanni. Those criminals responsible for this should be brought in to justice. Work to gather to bring a political solution for the voiceless people living in N&E. Once it’s been done, let’s have an open debate about Pirabahran and then we can decide whether he is a Hero or a Traitor.

  What you’re doing now is carrying out an autopsy while someone fighting for life in next room. You don’t care about saving that patient’s life, but all you care about carry out an autopsy and find out why and how this person dead here. Hope you’d understand what I’m trying to say.

  Reply
 • chandran.raja
  chandran.raja

  புலித்தலைவர் பிரபாகரனின் சம்மதம் இல்லாமல் நடேசதேவனும் புலித்தேவனும் எப்படி வெள்ளைக் கொடிகாட்டியிருக்க முடியும்?. பரிசோதனைக் கூடத்தில் முயலையும் எலியையும் சோதனைக்குட்படுத்துவது போலவே இந்த புலிகளையும் பிரபாகரன் முன்னுக்கு அனுப்பியிருக்கிறார். இலங்கையரசும் இந்தியாவும் பிரபாகரனை முழுமையாக கற்றிருந்தது. அல்பிரட் துரையப்பாவில் இருந்து ராஜீவ்காந்திவரை கும்பிட்டு மலர்செண்டு கொடுத்து தானேதமது காரியங்களை சாதித்துக் கொண்டவர்கள்.

  மாற்று இயக்கத்தலைவார்கள்களுக்கும் கூட்டணித்தலைவர் அமிர்தலிங்கத்திற்கும் இதேகதி தானே (கதைக்க வருகிறோம்) நடந்தது. புலிகள் எப்பவும் விழுந்து கும்பிட்டு காலை இழுத்து வீழ்த்துபவர்கள். தமிழ்மக்களுக்கு விட்ட புலுடாவை ராஜயதந்திரிகளுடன் விடமுடியாமல் போய்விட்டது. புலி பூணையானது முள்ளிவாய்காலில் இப்படித்தான். சிலவேளைகளில் இந்த ஆலோசனையை சோனியாகாந்தியும் மங்கையக்கரசியும் வழங்கியிருக்கலாம் ராஜயதந்திரிகளுக்கு.

  Reply
 • ரமணன்
  ரமணன்

  //For example how many people would come to your ‘Thesam’ arranged meetings and how many came to ‘Maaveerar Naal’? // nathan

  நாதன் ஜேர்மனியில் நாசிகளின் கூட்டங்களுக்கு ஒப்பாக புலிகளின் மாவீரர் நாளுக்கும் கூட்டம் கூடுகிறது. ஏன் ஹிட்லர் பேசும் போது ஏற்பட்ட கரவொலியை விட சொற்பம் குறைவாகவே பிரபாவின் மாவீரர் நாள் உரைக்கும் கைதட்டல் இருந்தது! எனவே இங்கு ஹிட்லரும் பிரபாவும் ஒன்று என்பதை ஒத்துக்கொள்வீர்கள் தானே!!

  Reply
 • thurai
  thurai

  //அதை எல்லாம் சேர்த்து கருணாநிதியை திட்டி தீர்த்து கொள்கிறார்கள் என்றே தோன்றுகிறது//BC

  பெண்டாட்டியிடமுள்ள கோபத்தை வீட்டில் சட்டி பானையில் காட்டும் கணவர்போல் தான் புலிகள். புலியின் அமைப்புக்குள் மூக்குக்கு மேல் பிரச்சைனைகழும் ஊழல்கழும் மலிந்துவிட்டன. இதனை எதிர்த்துப் பேசவோ, சுட்டிக்காட்டவோ எந்தப் புலிக்கும் துணிவேயில்லை. எல்லோருமாகச் சேர்ந்து அப்பாவிகளையும், நிராயுதபாணிகளான தமிழர்களையுமே மிரட்டி வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள்.

  இப்போ கருணாநிதி, தவறு அசின் தவறென்று இருவரையும் ஒரே கதிரையில் இருத்திப் பார்க்கின்றார்கள். இதுவே இவர்களின் அரசியல் முதிர்ச்சி. அதுமட்டுமல்ல சாதாரண ஓர் நடிகையை இந்தியாவை ஆட்டிப்படைப்போம் என்று சொன்ன புலிகளையும், அவர்களிற்காக கூலிக்கு குரல் கொடுக்கும் சீமானையும் ஏறி மிதித்து விட்டாரென்ற பெருமையையும் புலிகளே அசினிற்குக் கொடுத்து விட்டார்கள்.

  துரை

  Reply
 • thurai
  thurai

  இலங்கையில் இனப்பிரச்சினைகள் இருந்தாலும், புலத்தில் வாழும் தமிழர்கள் புலம்பெயர்நாடுகளிர்குப் பிரச்சினையாக உள்ளவர்கள்தான். 2வது உலக மகாயுத்தத்தில் அழிந்த மேற்குலகை கட்டியெழுப்ப வந்தவர்களல்ல. பலநாடுகளிலிருந்து வந்து மேற்குலகை பலநாட்டவரும் கட்டியெழுப்பி விட உல்லாச வாழ்க்கைகும் பணத்திற்கும் வந்து சேர்ந்தவர்கள்தான் நாம். இதனை மாவீரர்களிற்காகவும் புலிகளிற்காகவும் வீதியில் இறங்குவோரில் எத்தனைபேர் அறிந்தவர்களோ தெரியாது.

  இப்படியாக பழம் மணக்கும் இடத்தை தேடியும், காற்ரடிக்கும் பக்கம் அள்ழுப்பட்டுப் போகும் வெளவால்கழும், பறவைகள் போலத்தான் எமது இனத்தின் வாழ்க்கை. புல்லைத் தின்று வளர்ந்த மானை பிடித்துத் புசிக்கும் அதே காட்டுப்புலிகள் போல்தான், புலம் பெயர் நாட்டில் வாழும் தமிழர்களினால் வளர்ந்தவர்கழும் வாழ்பவர்கழும்தான் புலிகள்.

  இதனால் தான் புலிகளால் புலம்பெயர்நாடுகளில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள், இலங்கைத் தமிழரிற்கு விடுதலையைக் கொடுக்காமல் அழிவினையே கொடுத்துள்ளது. புலியினை வளர்த்தவர்கள் புலம்பெயர் தமிழர், ஈழத்தமிழரின் அழிவிற்குக் காரணம் புலிகள். இவர்களின் தமிழீழதாகம்.
  இப்போது.

  சாவிலும் வாழ்வோம்
  அழிவிலிருந்து மீழ்வோம்
  முள்ளிவாய்க்கால் முடிவல்ல ஆரம்பம்
  ஆயுதங்கள் மெளனித்தனவே தவிர சரணடையவில்லை.

  இவையெல்லாம் புலம்பெயர்தமிழர்களிற்கான் புலிகளின் விளம்பரங்களேயாகும். ஈழத்தமிழரின் விடுதலைக்கல்ல. அழிவினிற்கேயாகும்.

  துரை

  Reply
 • மாயா
  மாயா

  எல்லா புலி கோசத்தையும் அசின் இல்லாமல் செய்துவிட்டார். தமிழக கலையுலகத்தின் பார்வையையே மாற்றி விட்டார்.

  மாயா ( வன்னியிலிருந்து……. )

  Reply
 • vanthiyadevan
  vanthiyadevan

  கடந்த 30 ஆண்டுகாலம் எதிரியாக கருதப்பட்ட வந்த அரசிடம் நியாயம் கேட்கும் தமிழ் தலைமைகள் தங்கள் தலைமைத்துவத்தின் வக்கற்ற அரசியலை தொடர்ந்தும் செய்வதற்காக தங்கள் தலைமையை தொடர்ந்தும் தக்க வைக்க இலங்கை அரசு மீது முழுப்பழியையும் போட்டுவிட்டு தாங்கள் தப்பிக்க இலங்கை அரசின் மனித உரிமை மீறலுக்குப் பின் தாங்கள் பதுங்கிக் கொள்கின்றனர்.

  வெள்ளம் வருமுன் அணைகட்டப்பட வேண்டும். மனித உரிமைகள் மீறப்படமுன் அதனை தடுப்பதற்கான சூழலை உருவாக்க வேண்டும். கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் அர்த்தமற்றது.

  Reply
 • sarangan
  sarangan

  சந்திரன் ராஜா.நான் எப்போதும் மனிதருள் மனிதராக இருக்க விரும்புகிறேன். மற்றப்படி பிரபாகரன் – கருணா – டக்ளஷ் – ஆனந்த சங்கரி – மகிந்த – மன்மோகன் எல்லோரும் மனிதரே.

  Reply
 • chandran.raja
  chandran.raja

  இவர்களா? உங்கள் புண்பட்ட மனிதர்கள் சாரங்கன்??.

  Reply
 • K. Rushangan
  K. Rushangan

  நோர்வே தூதுவர் எரிக் சொல்ஹேய்ம் ஜுன் மாதம் 25ம் திகதி ஒஸ்லோவில் தம்மைச் சந்தித்த 21 இலங்கை ஊடகவியலாளர்களுடனும் பகிர்ந்துகொண்ட கருத்துக்களே இந்தச் செய்திக்கு அடிப்படை.

  எனினும், சொல்ஹேய்மின் கருத்துக்கள் ஒவ்வொரு விதமாக ஊடகவியலாளர்களால் வியாக்கியானிக்கப்பட்டுவிட்டன. சரணடையுமாறு தாம் கோரியதாக ஒருபோதும் சொல்ஹேய்ம் கூறவில்லை.

  சொல்ஹேய்ம் இதன்போது தெரிவித்த கருத்துக்கள் சிகரம் இணையத்தளத்தில் உள்ளது. இதோ அதன் இணைப்பு. வேண்டின், இந்த நேர்காணலின் ஒலி – ஒளி பதிவுகளையும் உங்களோடு பகிர்ந்துகொள்ளச் சித்தமாயுள்ளேன். sikaram.wordpress.com

  Reply