18 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் – ஆதரவாக 161 வாக்குகள், எதிராக 17 வாக்குகள். ஐ.தே.க வாக்களிக்கவில்லை.

parliment.jpg18 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குப்பலத்துடன் சற்று முன்னர் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. திருத்தத்திற்கு ஆதரவாக 161 வாக்குகளும், எதிராக 17 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஆதரவாக வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் 8 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் செனவிரட்ன, அப்துல் காதர், மனுஷ நாணயக்கார, ஏர்ல் குணசேகர, உபேக்சா சுவர்ணமாலினி, நிமல் விஜேசிங்க,  பீ திகாம்பரம், பிரபா கணேஷன், ஜே. ஸ்ரீ ரங்கா ஆகியோர் உள்ளடங்குகின்றனர். .

இதேவேளை 18 வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் 10 பாராளுமன்ற உறுப்பினர்களும், ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் 07 பாராளுமன்ற உறுப்பினர்களுமாக மொத்தம. 17 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துள்ளனர்.ஐ.தே.க வாக்களிக்கவில்லை.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • தமிழ்வாதம்
    தமிழ்வாதம்

    ஐ.தே.க எதிர்த்தார்கள், ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து எதிராக வாக்களிக்கவில்லை. சரத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்தழிந்து போனதை, ஐ.தே.கட்சி இப்போது புரிந்து கொண்டிருக்கிறது.
    மல்வத்தை, அஷ்கிரிய பீடாதிபதிகள் இலங்கை அரசியலை அழகாக நகர்த்துகிறார்கள். சிங்கள பெளத்த பேரினவாதம் இந்தியாவிற்கும் பேரழிவைத் தரப்போகிறது, அமெரிக்கா வளர்த்த தலிபான்களைப் போல. இதற்குள் ‘இரவில் விடுதலை பெற்ற’ இந்தியா ராவ்’வுகளை அனுப்பி இராவிக் கொள்ளாது, உடனடியாக செயலில் இறங்குவது நன்று.

    Reply
  • pandithar
    pandithar

    ரங்கா மகிந்த வீட்டு பிள்ளைதானே. அவரை ஆதரிக்காமல் வேறு யாரை ரங்கா ஆதரிப்பார். எது சரியோ எது தவறோ மகிந்தவிற்கு ஒரு ஜே போடலாம். புலிகளை வைத்தே தேர்தலில் வென்று அதே புலிகளையே பின்னர் தோற்கடித்து, அழித்து இலங்கை அரசியலில் தனிக்காட்டு ராஜாவாக எழுந்திருக்கின்றார். காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளும் மகிந்தவின் தந்திரம் தமிழ் தலைமைகளுக்கு இருந்திருந்தால் எமக்கேன் இந்த நிலை?…..

    Reply