கடந்த மாதம் எம்.வி. சன். சீ கப்பல் மூலம் கனடாவை சென்றடைந்த அகதிகளின் விபரங்கள் களவாடப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான விசாரணைகளை ரொரன்டோ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
கனேடிய தமிழர் பேரவையின் அலுவலகத்தில் இருந்த கணனி ஒன்றும் களவாடப்பட்ட நிலையிலேயே எம்.வி. சன். சீ கப்பலில் கனடாவை வந்தடைந்திருக்கும் 492 இலங்கைத் தமிழர்கள் தொடர்பான விபரங்கள் திருடப்பட்டுள்ளதாக அப்பேரவை குற்றஞ்சாட்டி உள்ளது. இத்திருட்டு சனிக்கிழமை இரவு இடம்பெற்றிருக்கின்றது என்றும் இத்தமிழர்கள் குறித்த ஆவணங்கள் மாத்திரமே திருடப்பட்டிருக்கின்றன என்றும் இது ஒரு திட்டமிட்ட திருட்டு வேலை என்றும் பேரவையின் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை தெரிவித்தார்.