தீர்வுக்கு முன் தமிழ்க் கட்சிகள் மத்தியில் கருத்தொருமைப்பாடு ஏற்படவேண்டும் – ஜனாதிபதி

president.jpgஇனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு முன்னராக தமிழ்க் கட்சிகள் மத்தியில் கருத்தொருமைப்பாடு ஏற்பட வேண்டும் என்பதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதியாகத் தெரிவித்திருக்கிறார்.”சில (தமிழ்) அரசியல் கட்சிகள் ஏற்கனவே சாதகமான முறையில் பதிலளித்துள்ளன. தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகளவு கட்சிகள் உள்ளன. அவற்றின் மத்தியில் கருத்தொருமைப்பாட்டை நாம் எதிர்பார்க்கின்றோம். விசேடமாக அபிவிருத்தி தொடர்பான விடயங்களில் கருத்தொற்றுமையை எதிர்பார்ப்பதாக நேற்று முன்தினம் மாலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.

அதேசமயம், தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதை தாம் எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் தூதுக்குழுவானது பிரிட்டிஷ் தொழிற்கட்சி எம்.பி. போல் மேர்பி தலைமையில் ஜனாதிபதியைச் சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வட மாகாணசபை நிர்வாகம் தொடர்பான கேள்வியின் போது உள்ளூராட்சி சபைத் தேர்தல்களுக்கே முதலாவதாக முன்னுரிமை அளிக்கப்படுமென பிரிட்டனின் பொதுநலவாய பாராளுமன்றசங்கத் தூதுக்குழுவிற்கு கூறப்பட்டதாக அவுட்லுக் இணையத்தளம் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. உள்ளூராட்சிசபைத் தேர்தல்களின் பின்னர் வட மாகாண சபைக்கு தேர்தல்கள் இடம்பெறும். கிழக்கில் பின்பற்றப்பட்ட நடைமுறை அங்கும் மேற்கொள்ளப்படும். பயங்கரவாதத்தைத் தோற்கடித்த பின்னர் கிழக்கில் அரசியல் ரீதியான நடவடிக்கைகள் முன்னேற்றமடைந்ததாகவும் அங்கு தேர்தல்கள் திருப்திகரமானதாக நடத்தப்பட்டதாகவும் ஜனாதிபதி தூதுக்குழுவிடம் கூறியுள்ளார்.

இதேவேளை, விடுதலைப்புலிகளைத் தோற்கடிப்பது தொடர்பாக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டிருந்த முயற்சிகளை மேர்பி பாராட்டியுள்ளார். ஐக்கிய இராச்சியத்தின் சகல கட்சிகளும் உங்களின் நிலைப்பாட்டில் உள்ளன. இன்று இலங்கைக்கு உதவுவதற்குத் தயாராக அவை உள்ளன என்று மேர்பி கூறியுள்ளார்.இந்தத் தீவிலிருந்து பயங்கரவாதம் இல்லாமல் போய்விட்டதையிட்டு நாம் மகிழ்ச்சியடைந்துள்ளோம். இன்று புனர்நிர்மாணம், நல்லிணக்கம் அன்றாட நடவடிக்கையாக மாறியுள்ளதென்று மேர்பி கூறியுள்ளார்.

இலங்கைக்கு தான் முன்னர் மேற்கொண்டிருந்த விஜயத்தை அவர் நினைவுகூர்ந்தார். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் கிளிநொச்சி இருந்த சமயத்தில் அவர் அங்கு சென்றிருந்தார். இப்போது இங்குள்ள சூழ்நிலையானது பிரிட்டனின் நிலைமையை ஒத்ததாகவுள்ளது. சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக வட அயர்லாந்தில் யுத்தத்தில் பிரிட்டன் வெற்றிபெற்றிருந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடபகுதி மக்களில் அநேகமானோர் தற்போது தண்ணீர், மின்சாரம், பாடசாலைகள், சுகாதாரசேவைகள், கல்வி என்பனவற்றையே விரும்புவதாக தூதுக்குழுவிடம் ஜனாதிபதி விபரித்திருப்பதாக உத்தியோகபூர்வ அறிக்கை தெரிவித்தது. தமிழ் மக்கள் மத்தியில் அபிவிருத்தி தொடர்பான கோரிக்கையே உள்ளது. சமாதானமின்றி அபிவிருத்தியில்லை. அபிவிருத்தியின்றி சமாதானமில்லையென ஜனாதிபதி கூறியுள்ளார். நல்லிணக்கம் தொடர்பான முயற்சிகள் குறித்து தூதுக்குழுவிடம் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, நான்காவது ஈழப்போரின் இறுதிக்கட்டம் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு அப்பணியை மேற்கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக சாட்சியமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டபோதும் சர்வதேச மன்னிப்புச்சபை,மனித உரிமைகள் கண்காணிப்பகம்,சர்வதேச நெருக்கடிக்குழு போன்ற அமைப்புகள் அதனை நிராகரித்தமையை இட்டு ஜனாதிபதி தாம் கவலையடைந்திருப்பதாகக் கூறியுள்ளார். ஐ.நா. உட்பட சகலரையும் உள்ளடக்கியது இவ் ஆணைக்குழு எனவும் உள்நாட்டில் ஏற்படுகின்ற தீர்வே இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துமெனவும் வட அயர்லாந்திலிருந்தோ அல்லது வேறெங்கிலிருந்தோ அதனை கொண்டுவர முடியாதெனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

எமது சொந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டதாக தீர்வு அமைய வேண்டும். அதேசமயம், ஏனையோரின் அனுபவத்தை கற்றுக்கொள்ள நாம் தயாராகவிருக்கின்றோம் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.மேலும், சிறுவர் போராளிகளினதும் இளைஞர்களினதும் புனர்வாழ்வில் துரிதமான முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி அதிகாரப்பகிர்வு தொடர்பாகக் கூறுகையில், மக்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்வே அவசியமென்று கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகள் விரும்பியிருந்ததை கொடுக்க முடியாது என ராஜபக்ஷ அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் அதிகாரப்பகிர்வு தொடர்பான ஏதாவது நியாயபூர்வமான விடயங்களில் சகல கட்சிகளினதும் கருத்தொருமைப்பாடு அவசியமெனவும் அதனை பாராளுமன்றத்தின் மூலம் வழங்க முடியுமெனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். சகல கட்சிகளையும் இணக்கப்பாட்டுக்கு வருமாறு தான் ஊக்குவிக்க முடியுமெனவும் பாராளுமன்றமே இறுதியான தீர்மானத்தை மேற்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி: thinakkural. 20.01.2010

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 Comments

  • அப்பாவி
    அப்பாவி

    ஏதோ ஒரு காரணத்தை சொல்லி ஏமாற்றி கொண்டிருப்பார்கள்; பண்டா தொட்ங்கி இன்று வரை ஏன் இனியும் கூட… அதற்க்குள் எமக்குள் குடும்பி பிடி சண்டை. பாவம் மக்கள்.

    //இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு முன்னராக தமிழ்க் கட்சிகள் மத்தியில் கருத்தொருமைப்பாடு ஏற்பட வேண்டும் என்பதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதியாகத் தெரிவித்திருக்கிறார்.//

    அப்ப என்ன அடுத்த இனிங்ஸ் தொடங்க போகுது.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு முன்னராக தமிழ்க் கட்சிகள் மத்தியில் கருத்தொருமைப்பாடு ஏற்பட வேண்டும் என்பதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதியாகத் தெரிவித்திருக்கிறார்…//

    இவ்வளவுகாலமும் மாற்றுக்கருத்து இருக்க வேண்டும் என்றார்கள். இப்போது டக்ளஸ் இருக்கிறார்..என்ற துணிச்சலில் ‘ஒற்றுமை’ கதை விடுகிறார். இதெல்லாம் அறியாததா? திரு. சங்கரி அவர்கள் 3 மாதத்தில் எல்லாம் சரிவரும் எனச் சொல்லி ஒரு வருடம் ஆகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ்மக்கள் இந்நாட்டு மக்கள் அவர்கள் எமது சகோதரர்கள் யார் என்ன சொன்னாலும் அவர்களுக்கு எல்லாம் வழங்கப்படும், தமிழ்க்கட்சிகள் பற்றி எனக்கு அக்கறை இல்லை, எனக்கு தமிழ் பேச வரும் நான் அவர்களுடன் நேரடியாகவே பேசுவேன் என கடவுள் லெவலில் கதை விட்டார் இப்போ ….அஹா மாற்றுக்கருத்து!!!

    Reply
  • நந்தா
    நந்தா

    தமிழர்களுக்குத் “தமிழ் பிரச்சனை” என்ன என்று இன்னமும் கண்டு பிடிக்க முடியவில்லை. அதனால்த்தான் இவ்வளவு கட்சிகள். இனி ராஜபக்ஷ “தமிழர் பிரச்சனை” இதுதான் என்று கண்டு பிடித்து தீர்வும் கொடுக்க வேண்டும் என்று தமிழ் சிங்கங்கள் எதிர் பார்க்கிறார்களா?

    தமிழ் பேசும் தமிழன் களுக்கே தமிழ் பிரச்சனை தெரியவில்லை. தமிழ் கதைக்கும் ராஜபக்ஷவுக்கு மாத்திரம் எப்படித் தெரியப் போகிறது?

    Reply
  • மாயா
    மாயா

    //…இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு முன்னராக தமிழ்க் கட்சிகள் மத்தியில் கருத்தொருமைப்பாடு ஏற்பட வேண்டும் என்பதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதியாகத் தெரிவித்திருக்கிறார்…//

    ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்தைச் சொல்வதால் மகிந்தவே குழம்பிப் போயிருப்பார். எனவே , கடைசியில் நீங்கள் அனைவரும் ஒருமித்த கருத்தோடு வாருங்கள் என்பதற்கு மகிந்த இதைச் சொன்னதாகவே தோன்றுகிறது. மகிந்த என்ன சொன்னாலும் ; இப்போதைய நிலையில் சிங்களவர்கள் கேட்பார்கள். ஆனால் தமிழர்கள் இன்னமும் ஆளாளுக்கு கயிறிழுத்துக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது. இவை உடனடிய ஒரு தீர்வுக்கு வர வேண்டும். இல்லாவிட்டால் ; இந்த சந்தர்ப்பத்தையும் தமிழர் விட்டவர்களாகவே ஆகி விடுவார்கள்.

    Reply
  • palli
    palli

    ஜயா அப்ப தீர்வு கிடைக்காது என சொல்லுங்கோ; ஒற்றுமையாய் இருந்திருந்தால் எதுக்காக அழுது புலம்பி தீர்வு கேக்க வேண்டும்; தமிழரது தோல்வியும் உங்களது வெற்றியும் ஒரே காரணம் தமிழரது ஒற்றுமை இல்லாமையே, தீர்வு கிடைக்கும் ஆனால் கிடைக்காது என்பதாகவே உங்கள் அறிக்கை உள்ளது;

    Reply
  • Rohan
    Rohan

    //…இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு முன்னராக தமிழ்க் கட்சிகள் மத்தியில் கருத்தொருமைப்பாடு ஏற்பட வேண்டும் என்பதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதியாகத் தெரிவித்திருக்கிறார்…//

    இதை விட பம்மாத்துவதற்கு இலகுவான வழி என்ன? புலி இருந்த போதே, புலிப் பம்மாத்து காட்டுவதை விடுத்து என்ன தீர்வு தரப் போகிறீர்கள் என்பதைச் சொல்லுங்கள் என்றுநம்மில் பலர் கேட்டுக் கொண்டிருந்தோம். புலி விழுந்தால் எல்லாம் சரி வரும் என்று மாற்றுக்கருத்தாளர்கள் சொல்லிக் கொண்டிருந்தனர். இப்போது?

    //தமிழ் பேசும் தமிழன் களுக்கே தமிழ் பிரச்சனை தெரியவில்லை. தமிழ் கதைக்கும் ராஜபக்ஷவுக்கு மாத்திரம் எப்படித் தெரியப் போகிறது?//

    அப்படியானால் தமிழர்களின் பிரச்சனைகளுக்குத் தான் தீர்வு தருகிறேன் என்று மகிந்த சொன்னதெல்லாம் என்ன? சுதந்திரக் கட்சி தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரம் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் எங்கே?

    Reply
  • ashroffali
    ashroffali

    புலிகளுடனான யுத்தம் முடிவடைந்தவுடன் ஜனாதிபதியை நெருங்கிய யாரும் நல்லவர்கள் இல்லை.அது வரை அவருக்குள் இருந்த நல்ல உள்ளத்தைக் கெடுத்தவர்கள்.

    அதற்கு மேலாக கடந்த ஜனாதிபதித் தேர்தல் பொதுத் தேர்தலில் வட-கிழக்கு மக்களில் பெரும்பான்மையானவர்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என்ற ஆதங்கம் ஜனாதிபதிக்குள் இருக்கின்றது. அந்தப் பழிவாங்கல் இனி தொடரும். யாராலும் அதை தடுக்க முடியாது.

    தமிழ் மக்களுக்கான அதிகாரப் பரவலாக்கலை அமுல்படுத்தப்போய் சிங்கள மக்கள் மத்தியில் தனக்கேற்பட்டிருக்கும் கதாநாயகன் இமேஜை கெடுத்துக் கொள்ள ஜனாதிபதி தற்போதைக்கு முன் வர மாட்டார். அப்படி வழங்கப்படும் தீர்வு கூட மாகாண சபைகளின் அதிகாரத்திலும் பாதி கொண்டதாக இருக்கும். அரைகுறைத் தீர்வாகத்தான் இருக்கும்.

    அந்த அரைகுறை தீர்வைக்கூட அடுத்த ஜனாதிபதித் தேர்தலை அண்மித்த காலப்பகுதியில் தான் பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பார்.அதன் பின் எப்போது அது அங்கீகரிக்கப்பட்டு எப்போது நடைமுறைக்கு வருமோ அதை யாரும் எதிர்வு கூற முடியாது.

    தனக்கு வாக்களிக்காத கொழும்பு வாழ் தமிழ்-முஸ்லிம் மக்களை சட்டவிரோத குடியேற்றம் மற்றும் சேரிக்குடியிருப்புகளை அகற்றல் என்ற பெயரில் கொழும்பை விடடே விரட்டியடிக்க முற்படும் ராஜபக்ஷ நாளை வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் விடயத்தில் மட்டும் நியாயமாக நடந்து கொள்வார் என்று மட்டும் எதிர்பார்க்க வேண்டாம்.அந்த வகையில் அரசியல் தீர்வென்பது இன்னும் பத்து வருடங்களுக்கு கானல் நீராகவே இருக்கும்.

    Reply
  • chandran .raja
    chandran .raja

    அஷ்ராப்! திரும்ப இணைந்து கொண்டதில் மகிழ்ச்சி. மனம் திறந்து கதையுங்கள்.
    மகிந்தா ராஜயபச்சாவை வானளவுக்கு புகழ்ந்துள்ளீர்கள். என்ன? நடந்தது. வெளிப்படுத்துங்கள். அது மக்களுக்கே போய் சேரும். முடிந்தவரை உங்களையும் உங்களின் குடும்பங்களின் உயிரையும் பாதுகாத்து கொள்ளுங்கள். முடியாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுங்கள். உடனடிப் பாதுகாப்பு இந்தியாவாகத்தான் இருக்க முடியும்.தீர்வைப்பற்றி கதைக்காதீர்கள். யார்? கொடுப்பது. யார் பெற்றுக் கொள்வது?. நகைத்சுவையாகத் தெரியவில்லையா?.
    தகுதி இருபகுதிக்கும் இல்லை போல் தெரிகிறது. இப்பொழுது திருப்திபடுவதற்கு ஒன்று தான் உள்ளது.
    விமானக் குண்டுவீச்சில்லை. இடப்பெயர்வுகள் இல்லை. ஆகமொத்தத்தில் அப்பாவிமக்ககளுக்கு அவலத்தை கொடுத்த யுத்தம் இல்லை. ஊழல் லஞ்சம் சிபார்சுகள்கள் எல்லாம் நடந்தேறிக் கொண்டேயிருக்கின்றன. இருப்பது ஒன்று மட்டும்தான் நம்பிக்கை.

    Reply
  • Kumar
    Kumar

    ஒற்றுமையாய் இருக்கோணும் எண்டு சொல்லுற எங்களுக்குள்ளயே ஒற்றுமை இல்லையே. பின்ன எப்படி அரசியல்வாதிகளை ஒற்றுமையாகச்சொல்லிக் கெட்பது.
    புலி அங்கால நாலாய்ப் பிரிஞ்சிருக்கு. மற்றவர்களும் ஆளாளுக்கு பொரிஞ்சு தள்ளுகினம். போற பொக்கில நாங்கள் ஒற்றுமையாகிறதுக்குள்ள சிறிலங்கா முழுதும் சிங்கள பெளத்த பூமியாகிவிடும். நாங்களும் சிங்களத்தமிழராகிவிடுவம். அதுக்குப்பிறகு எமக்க என்ன பிரச்சினை? நீர்கொழும்பு> சிலாபப்பக்கம் போய் பழைய தமிழ்த்தலைகளுட்டைக் கேழுங்கோ தமிழருக்கு என்ன பிரச்சினையெண்டு. ஒரு பிரச்சினையும் இல்லையெண்ணுகினம். இதிலையும் ஒரு பிரச்சினை இருக்கெல்லோ- எதையும் அவையளுட்ட சிங்களத்திலதான் கேக்கவேணும் பாருங்கோ விளங்கவேணுமெல்லே.

    Reply
  • naanee
    naanee

    எந்த ஒரு சிங்கள அரசும் தமிழனுக்கு ஒரு தீர்வையும் தரப்போவதில்லை.தமிழ் தலைமைகள் இந்தியாவின் காலில் விழுந்தோ அல்லது சர்வதேசத்திடம் கெஞ்சியோ எதுவும் பெற்றுக்கொள்ள முயலலாமே ஒழிய வேறு எதுவும் இலங்கையில் சாத்தியமில்லை.எதிர்கட்சியில் இருக்கும் போது அவர்கள் சொல்வது ஒன்று பின்னர் ஆட்சிக்கு வந்ததும் அவர்கள் நடந்து கொள்ளும் விதம் வேறு.தற்செயலாக ஒரு நேர்மையான சிங்கள தலைமை வந்தால் மாத்திரமே அது சாத்தியம்.
    தமிழனுக்கு அது பற்றி உண்மையான கவலையில்லை.சும்மா ஒரு பேச்சுக்கு கத்திக்கொண்டே இருப்பான்.புலிகள் கூட என்ன தமிழனின் விடிவிற்கா போராட்டம் நடாத்தினார்கள்.எதோ எல்லாளன்,பண்டாரவனியன் நினைப்பில் அரசாள நினைத்தார்கள்.புலம் பெயர்ந்த புண்ணாக்குகளும் எதோ சரித்திரபடம் பார்த்த மாதிரி யுத்தத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்.தமிழனுக்கு விடிவு வேண்டுமெனில் இன்றும் ஏன் கப்பலேறி இவ்வளவு பேர் நாட்டைவிட்டு ஓடுகின்றார்கள்.வெளிநாடுகளுக்கு போக முடியாது என ஒரு நிலை வந்தால் சிலவேளை தமிழன் தனது நாடு, உரிமை பற்றி சிந்திப்பான்

    Reply
  • alan
    alan

    Tamil Nadu Chief Minister Muthuwel Karunanidhi said, without granting a political settlement to the SriLankan Tamils, President Mahinda Rajapakse is continuously giving reasons. Sri Lankan President Mahinda Rajapakse’s government obtained two third majority in the parliament, hence it should immediately begin his action to provide a proper settlement to the Sri Lankan Tamils which he appealed.

    Displaced people should be immediately resettled and implementing devolution of powers in the Tamil populated areas will obtain a proper settlement to the racial crisis was mentioned by Karunanidhi.

    Meanwhile Karunanidhi requested the Indian Central government should perform its duties in the proper manner towards the Sri Lankan racial crisis issue. This is the best opportunity to process a settlement to the racial crisis, was stated by Tamil Nadu Chief Minister Karunanidhi.

    Chennai-

    Reply
  • நந்தா
    நந்தா

    ராஜபக்ஷவின் தீர்வுக்கு முதல் படியாக தமிழர்களின் பிரச்சனை என்ன என்பதை கண்டு பிடிக்க முடியாமல் உள்ளவர்கள் “தமிழ் பிரச்சனை” “தீர்வு” என்று சொல்லிக் கொண்டிருக்காமல் இருப்பது நல்லது.

    சாதாரண நடைமுறை வாழ்வில் எதிர் நோக்கும் பிரச்சனைகளை தீர்க்க “தமிழ்” கும்பல்களின் “தீர்வு” உதவுமா?

    உதாரணமாக யாழ்ப்பாணத்தில் 100% தமிழர்களால் நடத்தப்படும் நீதி மன்றம், பாடசாலைகள், பல்கலைக் கழகம் என்பவற்றில் நடைபெறும் போக்கிரித்தனங்கள், லஞசம், மோசடிகள் அதிகார துர்பிரயோகங்கள் என்பனவற்றை அந்த “தீர்வு” நிறுத்திவிடும் என்று சொல்லுகிறார்களா? அல்லது அவை யாவும் “சிங்கள” அரசுகளினால் நடத்தப்படுகின்றன என்று கப்ஸா விடுகிறார்களா?

    Reply
  • Rohan
    Rohan

    “உதாரணமாக யாழ்ப்பாணத்தில் 100% தமிழர்களால் நடத்தப்படும் நீதி மன்றம், பாடசாலைகள், பல்கலைக் கழகம் என்பவற்றில் நடைபெறும் போக்கிரித்தனங்கள், லஞசம், மோசடிகள் அதிகார துர்பிரயோகங்கள் என்பனவற்றை அந்த “தீர்வு” நிறுத்திவிடும் என்று சொல்லுகிறார்களா? அல்லது அவை யாவும் “சிங்கள” அரசுகளினால் நடத்தப்படுகின்றன என்று கப்ஸா விடுகிறார்களா?”…// nantha

    தமிழ் மக்கள் மற்றவர்களுக்குப் பயந்து வாழும் நிலைமை வேண்டும். தமிழனை எவரும் எப்போது வேண்டுமானாலும் அடிக்கலாம் – பெண்களை எப்போது வேண்டுமானாலும் கொத்தலாம் – என்ற நிலைமை மாற வேண்டும்.

    தமிழர் பிரதேசங்களில் கற்பதற்கும் தொழில் செய்வதற்கும் வசதிகள் அதிகரித்துத் தரப்பட வேண்டும்.

    தமிழர்களின் பிரதேசங்களில் கட்டமைப்பு வேலைகள் முன்னெடுக்கப்பட்டு, வீதிகள், மருத்துவமனைகள் போன்றவை செம்மைப்படுத்தப்பட வேண்டும்.

    யாழ் பல்கலைக்கழகம் சீர்கெட்டுப் போயிருக்கிறது என்பதற்காக தமிழர்களுக்குத் தீர்வு எதையும் தர வேண்டியதில்லை என்பது யாருக்காவது நியாயமாகப் படுகிறதா?

    இந்த சீர்கேடுகள் கூட அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்வது தானே? புலிக்குக் குடை பிடித்து வாழ்ந்த சண்கமுகலிங்கத்தார் இப்போது தோழருக்கு குடை பிடித்து வாழ்கிறார்.

    சண்முகலிங்கத்தாரின் கூட்டாளிகள் அவரது நிழலில் கும்மாளம் இடுகிறார்கள்.

    காய்தல் உவத்தல் இன்றி நீதிக்குக் கட்டுப்பட்டு எல்லோரும் நடக்கும் நிலையை ஏற்படுத்தித் தருவது கூட அரசின் கடமை அல்லவா? 10% கொமிஷன் இல்லது எதையும் செய்யாத ஒரு தம்பியையும் அடாவடியால் காரியம் பார்க்கும் இன்னொரு தம்பியையும் ரவுடித் தனமே முதலும் முடிவுமான மேர்வின் போன்ற ஒரு உற்ற தோழனையும் கொண்ட மகிந்த ஐயாவிடமா நீதியையும் நியாயத்தையும் எதிர்பார்த்து நிற்கிறோம்? சே!

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…புலிகளுடனான யுத்தம் முடிவடைந்தவுடன் ஜனாதிபதியை நெருங்கிய யாரும் நல்லவர்கள் இல்லை.அது வரை அவருக்குள் இருந்த நல்ல உள்ளத்தைக் கெடுத்தவர்கள்….//

    அஷ்ரஃப்,
    உங்கள் நிலை இப்படீ ஆச்சா? பாவம் நீங்களும் தான் என்ன செய்வீர்கள்? நாம் சொன்னதை அப்படியே திருப்பி இவ்வளவு விரைவில் ஒப்புவிப்பீர்கள் என நான் நினைத்தும் பார்க்கவில்லை!
    பாவம் நீங்கள் கடந்த வருடம் எம்மிடம் விடைபெற்றுக்கொண்டு செல்லும்போது நீங்கள் எழுதிய வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன. நீங்கள் விரைவில் மக்கள் சேவையாற்ர வடக்கு நோக்கிபோவதாகவும் சில வாரங்களில் அங்கிருப்பீர்கள் எனவும் சொல்லிச் சென்றீர்கள். ஆனால் இப்படி சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் ‘நெருங்கிய யாரும் நல்லவர்கள் இல்லை’ என சொல்லும் நிலை வந்ததே?

    நிற்க சந்திரன் ராஜா உங்களை ஓடித்தப்பச் சொல்கிறார். புலம்பெயர்ந்தோரை ஏன் அங்கிருந்து போராடவில்லை எனக் கேட்டவர்கள் இப்போது உங்களின் பின்னாலும் வரப்போகிறார்கள் கவனம்!

    எதிரியை நம்பி மோசம்போனவர்கள் , சகோதர்களைக் அழிக்க காரணமானவர்களை வரலாறு எங்கே வைக்கும் என்பது நீங்கள் அறியாததல்ல.

    Reply
  • நந்தா
    நந்தா

    தமிழர்களின் அரசியல் “பொன்சேகா”வை ஆதரிக்கிறது. பல்கலைகழகம் தறுதலைக் கழகமாக உள்ளது. இது “கிடைத்த” சுதந்திரத்தையும் அதிகாரங்களையும் துஷ்பிரயோகம் செய்வதன் தடயங்கள். இதற்கும் அந்த”உரிமை” என்பதற்கும் சம்பந்தம் கிடையாது. அந்த உரிமைகள் “கிடைக்காமலேயே” தமிழர்களின் மீதான அட்டகாசங்கள், அடக்குமுறைகள் என்பனவற்றைச் செய்யும் தமிழர்கள் அந்த உரிமைகள் கிடைத்தால் இப்போதுள்ளதை விட பதின் மடங்கு மோசமாகநடந்து கொள்ளுவார்கள்.

    புலிகளின் வன்னி சாம்ராஜ்ய வரலாறு அதற்கு உதாரணம்.

    தமிழர்கள் லஞசம், மோசடி என்பனவற்றை எதிர்த்துப் போராடியதாக வரலாறே கிடையாது. முதலில் அதனை செய்து தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல, சிங்களவர்களுக்கும் முன்மாதிரியாக இருக்கக் காட்டுங்கள்.

    Reply
  • chandran .raja
    chandran .raja

    உயிருக்கு ஆபத்து வரப்போகிறது என தெரிந்தும் அங்கையே தங்கிருந்து நியாயம் கேளுங்கள் அஷ்ராப் அலி. அப்படியென்றால் தான் சாந்தன் போன்றோர் வாழமுடியும் இதைத்தானே! மாவீராகிக் போனவர்கள் செய்தார்கள். ஆதரவும் கொடுத்தார்கள். ஆனபடிலால் தான் “புலம்பெயர் புண்ணாக்கு மூட்டைகள்” என்றும் பெயர் எடுத்திருக்கிறார்கள். இதுதான் மற்றவர்களை மாட்டிவிட்டு இன்பம் அனுபவிப்பது என்பது. சாந்தன் இனியாவது கொஞ்சம் நல்லமாதிரி சிந்திக்கவும்.

    Reply
  • ashroffali
    ashroffali

    நண்பர் சந்திரன் ராஜாவுக்கு நன்றிகள். எனதும் என் குடும்பத்தினதும் பாதுகாப்புக் குறித்த உங்கள் அக்கறைக்கு மனமார்ந்த நன்றிகள்.

    இந்தியா கூட எனக்குப் பாதுகாப்பான இடமில்லை. ஏனெனில் என்னுடன் ஒரு காலத்தில் தொடர்பில் இருந்த அரசாங்கத்திற்கு ஆதரவான இந்திய ஊடகவியலாளரில் ஒருவர் சென்னையில் நான் தங்கியிருந்த இடத்தை அரச தரப்புக்குக் காட்டிக் கொடுத்து விட்டார். அதன் பின் சென்னையில் வைத்து குண்டார் குழுவொன்றை ஏவி என்னைக் கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதையறிந்த நான் அங்கிருந்து தப்பி விட்டேன்.

    கடந்த இரண்டு மாதங்களாக எனது மகளின் படிப்பு பாழாகி விட்டது. கொழும்பில் சார்வதேசப் பாடசாலையொன்றில் கல்வி கற்ற எனது மகள் தற்போதைக்கு மற்றவார்கள் பாடசாலை செல்வதை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டு கண்ணீர் வடிக்கின்றாள்.

    கொழும்பில் இரண்டடுக்கு மாளிகையில் வாழ்ந்த நான் சென்னையில் தங்குவற்கு லொட்ஜுக்கு பணம் கட்ட வசதியின்றி கோயம்பேடு பஸ் நிலையப் படிக்கட்டுகளிலும் செங்கல்பட்டு இரயில்வே நிலையத்தின் பிளாட்பாரத்திலும் பல இரவுகளைக் கழித்துள்ளேன். பசி என்று அழும் என் பாலகனுக்கு பால் மா வாங்கிக் கொடுக்கவும் என்னிடம் வசதியில்லை. பல நாட்கள் அவனையும் பசியில் கதற விட்டு நெஞ்சத்தில் இரத்தக்கண்ணீர் வடித்துள்ளேன். கொழும்பில் இருக்கும் வரை அவனுக்கு பழச்சாறும் எஸ்.எம்.ஏ குழந்தைப் பால் மாவும் என தனியே ஒரு அலுமாரியே வைத்திருந்தேன். இங்கு ஒரு பை கூட இல்லை. இது தான் என் துரதிருஷ்ட நிலை.

    பலருக்கு உத்தரவு போட்டுப் பழகிய நான் இன்றைக்கு அடிமைப்பட்டாவது உழைத்து என் பிள்ளைகளின் வயிற்றுப் பசியைத் தணிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளேன். அதற்காக நான் வருந்தவில்லை. ஆனால் எங்கள் ஆயுள் எவ்வளவு என்பது தெரியாமல் நாளுக்கு நாள் படும் அவஸ்தைதான் எங்களை அணுவணுவாய் கொன்று கொண்டிருக்கின்றது. என் பிள்ளைகளைப்ப பார்த்துக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு ஏதாவது நேர்ந்து விடுமோ என்ற அச்சம் தான் சித்திரவதையாக இருக்கின்றது. படைவத்தவன் தான் எங்களுக்கொரு வழி காட்ட வேண்டும். மற்றபடி உதவுவதற்கு யாரும் இல்லாமல் அன்றாட தவிப்புடன் தான் எங்கள் வாழ்க்கை கழிகின்றது.

    ஏதோ என் மேல் அனுதாபம் கொண்ட ஒருவரின் அனுமதியின் பேரில் இணையத்தள வசதி எனக்குக் கிடைக்கின்றது. அந்தப் பெருந்தகைக்கு இறைவன் நல்லருள் பாலிக்கட்டும்.

    அதே நேரம் என் தோழர்கள் அனைவரிடமும் ஒரு சிறிய வினா. அது தான் நாளையே நான் யாருடைய தூண்டுதலின் பேரிலாவது கொல்லப்பட்டால் என்னையும் ஞாபகம் வைத்து நீங்கள் எல்லாம் ஒரு வரியாவது பதிவிடுவீர்களா?

    Reply
  • அப்பாவி
    அப்பாவி

    இந்த ஊடகவியலாளர்கள் Ashroff Ali இற்க்கு ஏதாவது உதவி செய்தால் என்ன?

    Reply
  • அப்பாவி
    அப்பாவி

    எல்லோருக்கும் எனது பணிவான வணக்கம்,
    முதலில் சோவனிசம் என்பதின் அடிப்படை குணாம்சம்களை புரிந்து கொள்ளுங்கள். பின்பு விவாதிக்கலாம்.-நன்றி.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….சந்திரன் ராஜா உங்களை ஓடித்தப்பச் சொல்கிறார். புலம்பெயர்ந்தோரை ஏன் அங்கிருந்து போராடவில்லை எனக் கேட்டவர்கள் இப்போது உங்களின் பின்னாலும் வரப்போகிறார்கள் கவனம்!…..//

    இந்த பதில் ஏன் எழுதப்பட்டது தெரியுமா சந்திரன் ராஜா?

    மேலே சொல்லப்பட்டவற்றை திரும்பவும் படியுங்கள்.

    Reply