20வது வருடத்தில் மீண்டும் துளிர்ப்போம்! – யாழ் முஸ்லீம்களின் 20 வருட அனுபவப் பகிர்வு.

Osmaniya Collegeயாழ் முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தின் 20வது வருட  நிறைவை நினைவு கூறும் நிகழ்வும், தமது தாயகம் மீளும் நிகழ்வும்

இடம்: ஒஸ்மானியா கல்லூரி, யாழ்ப்பாணம்

காலம்: 6 நவம்பர் 2010 சனி காலை 9.00 மணியிலிருந்து 12.00 மணி வரை (தொடர்ந்து மதிய போசனம்)

பிரதம விருந்தினர்: திருமதி இமெல்டா சுகுமார், யாழ் அரச அதிபர்

விசேட விருந்தினர்: வணக்கத்திற்குரிய திருமதி யோகேஸ்வரி பங்குணராஜா, யாழ் மாநகர முதல்வர்

Agenda:

Parade on the Divested Muslim Area
Theme Presented by Dr H S Hazbullah

Panel Presentation

Brief History of Jaffna Muslims up to 1990 – by Mr M M M Ajmal
Displaced Life of Jaffna Muslims – by Mrs M H Sharmila

The Practical Challenges of the resettlement

பேச்சாளர்கள் :
கலாநிதி எச்.எஸ்.ஹஸ்புல்லா
திரு எம்.எம்.எம். அஜ்மால்
திருமதி எம்.எச்.சர்மிளா
அல்ஹாஜ் எஸ்.எச்.எம்.நியாஸ்
எஸ்.ஏ.சி.முபீன்
திரு ரெங்கன் தேவராஜன், சட்டத்தரணி
திரு எம்.எம்.ரமீஸ், சட்டத்தரணி, யாழ் மாநகர சபை உறுப்பினர்
சேக் அயூப் அஸ்மின் (நலீமி)
ஏ.கே.சுவர்காகான்

Organised by:
Social Educational & Development Organisation (SEDO)
Ulema (Muslim Theologians) Association of Jaffna
Jaffna Muslim Professionals Forum (JMPF)
Jaffna Civil Society for Equality (JCSE)
Jaffna Muslim Development Committee (JMDC)
School Development Society of Osmaniya College (SDS)
Muslim Members of Jaffna Municipal Council (MMCs)
Trustees of Jaffna Mosques and
Research and Action Forum for Social Development (RAAF)

._._._._._.
 தமிழ் – முஸ்லீம் இன உறவுகள் : த ஜெயபாலன்

தமிழ் – முஸ்லீம் இன உறவுகள்’ என்ற தலைப்பில் தேசம் சஞ்சிகை 2007 மார்ச் 10ல் ஏற்பாடு செய்த கலந்துரையாடலில் வெளியிடப்பட்ட சிறப்பு மலரின் முன்னுரை இங்கு பதிவிடப்படுகிறது.

இன்று (ஒக்ரோபர் 30 2010) நடைபெறவுள்ள ‘தமிழ் – முஸ்லீம் இன உறவுகள்’ பற்றிய மேலதிக விபரங்களுக்கு: தமிழ் – முஸ்லிம் உறவுகள்: வடக்கு முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம் – 20 வருடங்களுக்குப் பின்பு! : SLIF & SLDF

._._._._._.

தமிழ் – முஸ்லீம் மக்கள் புவியியல் ரீதியாக ஒருவரோடு ஒருவர் உறவாடி வாழ வேண்டிய கட்டாயத்தில் இருந்த போதும் புறச்சூழல் அவர்களை பகைமையுடனும் சந்தேகத்துடனும் நம்பிக்கையீனத்துடனும் வாழ நிர்ப்பந்தித்து உள்ளது. தமிழ் – முஸ்லீம் இன உறவுகள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சியுடன் சிதைவடைய ஆரம்பித்துவிட்டது. காலத்திற்குக் காலம் முஸ்லீம் சமூகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட ஒடுக்குமுறைகள் எழுந்தமானமான தனி மனித தாக்குதல்களில் ஆரம்பித்து திட்டமிட்ட இன அழிப்பு, இனச் சுத்திகரிப்பு என்ற பரிமாணத்தைப் பெற்றது. இன்று தமிழ் – முஸ்லீம் இன உறவுகள் அதன் அடி நிலையிலேயே உள்ளது. இந்த நிலையை மாற்றியமைப்பது மிகவும் கடினமானதாக இருந்தாலும் இரு இனங்களினதும் எதிர்காலத்திற்கு இந்நிலை மாற்றி அமைக்கப்படுவது தவிர்க்க முடியாதது.

இந்த கடினமான பாதையை செப்பனிடுவதில் ஒரு காத்திரமான பங்களிப்பை செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலேயே ‘தமிழ் – முஸ்லீம் இன உறவுகள்’ என்ற தலைப்பிலான சந்திப்பு மார்ச் 10 2007ல் ஏற்பாடு செய்யப்பட்டது. அதையொட்டி ‘தமிழ் – முஸ்லீம் இன உறவுகள்’ என்ற இந்த சிறப்பு மலர் வெளியிடப்படுகிறது. தமிழ் – முஸ்லீம் இன உறவுகளை வலுப்படுத்துவத்கு, அதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு, அதை நோக்கிய நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு இச்சந்திப்போ இந்த சிறப்பு மலரோ உதவுமாக இருந்தால் அது ‘தேசம்’ சஞ்சிகைக்கும் அதன் வாசகர்களுக்கும் கிடைத்த வெற்றியாகவே அமையும்.

தமிழின ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுபவர்கள் தங்களுள் ஓடுக்குமுறையாளர்களாகவும் இரட்டைவேடம் போடுவது தமிழின விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தன்மையை கொச்சைப்படுத்தி உள்ளது. இதன் துரதிஸ்டம் என்னவெனில் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள், முன்னெடுப்பவர்கள் யாரும் உலக வரலாற்றில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வில்லை என்பது மட்டுமல்ல தமது சொந்த வரலாற்றில் இருந்தும் அதனைக் கற்றுக்கொள்ளத் தவறி உள்ளனர். வரலாற்று படிப்பினைகளைக் கற்று தம் போக்கை மாற்றியமைக்காத வரை வரலாறு மீளவும் அதன் ஆரம்பப் புள்ளிக்கே வரும் என்பது இயங்கியல் விதி. தமிழீழ விடுதலைப் போராட்டமும் கால் நூற்றாண்டுகளுக்குப் பின் மீண்டும் அதே இடத்தில் வந்து நிற்கிறது.

தமிழ் பேசும் மக்கள், தமிழர்கள் என்ற ஒற்றைப் பரிமாணத்திற்குள் முஸ்லீம் சமூகத்தை அடக்க, அடைக்க முற்பட்ட தமிழ் தேசியவாதம் பெரும்பாலும் தோல்வியையே சந்தித்து உள்ளது. அதன் ஆற்றாமை விஸ்வரூபம் எடுத்து தேசியவாதத்தின் உச்ச நிலைக்குச் சென்றது. தேசியவாதம் அதன் உச்ச நிலையில் பாசிச பரிமாணத்தை எடுக்கும் என்பதை தமிழ் தேசியவாதம் மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தி உள்ளது. முஸ்லீம் சமூகத்தின் மீதான படுகொலைகளும், அவர்கள் தங்களது தாயகப் பகுதிகளில் இருந்து துரத்தப்பட்டமையும் முஸ்லீம்களது துயரமான வரலாறு மட்மல்ல தமிழின வரலாற்றின் கறை படிந்த பக்கங்கள் என்பதையும் தமிழ் சமூகம் மறந்து விடக்கூடாது.

இந்த வரலாற்றுக் கறையை நீக்க மறப்போம் மன்னிப்போம் என்ற சம்பிரதாய வார்த்தை ஜாலங்கள் மட்டும் போதாது. உண்மையான, நேர்மையான, கடினமான உழைப்பின் மூலம் இரு சமூகங்களும் மற்றைய சமூகத்தினரின் இதயங்களை வென்றெடுக்க வேண்டும். முஸ்லீம் சமூகமே ஒடுக்கப்படும் சமூகமாக இருப்பதால் தமிழ் – முஸ்லீம் உறவுகளை மேம்படுத்துவதில் தமிழ் சமூகம் முன்னிலைப் பாத்திரம் எடுக்கவேண்டும். முஸ்லீம் மக்கள் மீதான சகல ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் தோளோடு தோள் நின்று தமிழ் சமூகம் போராட வேண்டும். இதன் மூலமே வரலாற்றின் தவறுகளை சீர்செய்ய முடியும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

9 Comments

 • rizviahmed
  rizviahmed

  Tamil brothers are feared to give voice when Muslims stressed by LTTE, that silence, is symbol of agree or disagree?
  Any diaspora or TGTE members not open their mouth on resettlement of north Muslims.
  We gather to fair and to demolish unfair, not against oher community.
  why Tamil MPs also silence on Muslim’s resettlement?

  Reply
 • thurai
  thurai

  இலங்கையில்ள தமிழ் அரசியல் வாதிகளோ அல்லது நாடுகடந்த தமிழீழ அரசியல் நடிகர்களோ, தமது சொந்த இனமென்று கூறுபவர்களின் மீதே அக்கறையில்லாதவர்கள். இவர்கள் தேடுவதும், போராடுவதும் தமிழினத்தை தாம் ஆழவேண்டுமென்பதற்கேயன்றி தமிழினத்தின் நன்மைக்காகவல்ல. இவர்களிற்கேற்பவே ஈழத்தமிழரும் வாழ்கின்றார்கள்- புலி ஆண்டால் புலியுடன், அரசாங்கம் ஆண்டால் அரசுடன். எந்த எதிர்ப்பும் காட்ட மாட்டார்கள்.

  முஸ்லிம்கள் விடயத்தில் இன்னமும் கவலைப்படும் தமிழர்கள் பலர் உள்ளனர். உலகமெங்கும் தலைவர்கள் தோன்றி தங்கள் வாழ்வை மக்களிற்காக அர்ப்பணிக்கின்றார்கள். ஆனால் ஈழத்தமிழர்களோ தலைவர்களிற்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டிருக்கின்றார்கள். — துரை

  Reply
 • Ajith
  Ajith

  தமிழ் முஸ்லிம் உறவுகள் சிதந்தமைக்கு தமிழ் தேசிய விடுதலையை மட்டும் குற்றம் சுமத்துவதால் மட்டும் பிரச்சினை தீர்ந்து விடாது என்பதை அறிவு கூர்ந்தவர்கள் சிந்திக்க வேண்டும். தமிழர்கள் தவறு விடவில்லை என்று யாரும் கூறிவிட முடியாது. ஆனல் கடந்த காலத்தில் முஸ்லிம் சமூகம் விட்ட தவறுகளை யாரும் மறந்துவிடல் ஆகாது. முஸ்லிம் தலைமைகளும் தமிழர்கள் மேலான சின்ஹல அடக்குமுறைக்கு சின்ஹல இனவாதத்துக்கு துணை போனதை மறந்துவிட முடியாது. தமிழ் தேசிய போராட ஆரம்பகாலத்தில் இருந்து முஸ்லிம் சமூகத்தில் பலர் சின்ஹல இராணுவத்திற்கு உதவியாக இருந்து செயற்பட்டதை யாரும் மறுக்க முடியாது. உறவுகள் பாதிகப்படதற்கு இரு பகுதியினரும் பொறுப்பு ஏற்று சின்ஹல ஏகதியபத்தின் இடமிருந்து விடுபடும்வரை தமிழ் முஸ்லிம் உறவுகள் சீர் திருந்த வாய்ப்பே இல்லை.

  இலங்கை அரசியலில் அரசியல் வாதிகள் எப்போதும் இனவாதம் என்ற தாரக மந்திரத்தை மிக சாதுர்யமாக பாவித்து வருவது மறுக்க முடியா உண்மை. இலங்கையின் பிரிட்டிஷ் ஆட்சிக்கு பின் வந்த எந்த அரசும் இனவாதத்தை கட்டவிழுது விடாமல் அரசியல் கதிரையில் ஏறியதில்லை. குடியேற்ற திட்டங்கள் மூலம் தமிழ் முஸ்லிம் நிலங்கள் பரிக்கபடது முதல், சின்ஹலம் மட்டும், தரப்படுத்தல் , இன அழிப்பு நவடிக்கைகள், தமிழ் முஸ்லிம் உறவுகளை பிரிதல் என்பன சின்ஹல இனவாதிகளின் சின்ஹல இல்லங்கை என்ற இலக்கை நோக்கிய நகர்வுகள் தமிழ் பேசும் மக்களிற்கு எதிரான திட்டமிட்ட நடவடிக்கைகள் என்பது பகிரங்க உண்மையாகும். இதற்கு துணையாக காலம காலமாக தமிழர்களில் ஒரு பகுதியினரும் முஸ்லிம்களின் ஒரு பகுதியனரும் செயற்பட்டதும் தற்போது செயற்பட்டு வருவதும் மறுக்க முடியாத உண்மைகள்.

  கடந்த கால அனுபவங்கள் மிகத் தெளிவாக ஒன்றை கட்டி நிற்கிறது. இலங்கை என்ற தீவு தமிழ், முஸ்லிம், சின்ஹல இனங்கள் சமாதானமாக வாழ வேண்டுமானால் முதலில் இந்த நாடு மூன்றாகப் பிரிகப்படவேண்டியது அவசியமானது. மூவினங்களும் இந்த நாட்டின் உண்மையான பிரையைகள் என்ற உணர்வு பூர்வமாக சிந்தப்பதற்கு ஒற்றை ஆட்சி எந்த விதத்திலும் தற்போது உதவாது. சின்ஹல இனம் ஆளும் இனமாகவும் தமிழ் முஸ்லிம் இனங்கள் ஆளப்படும் இனமாகவும் இருக்கும் வரை இந்த நாடில் இன்வன்முரைகளும் இன அழிப்புகளும் இருந்துகொண்டே இருக்கும். பெரும்பான்மை இனத்தின் ஆளுமை முறையில் மாற்றமேட்படாத வரையில் ஜனநாயகம் என்பது இனவாத நடவடிக்கைகளுக்கு துணை போவதை யாராலும் தடுக்க முடியாது. ஒற்றை ஆட்சி முறையில் எல்லா பிரையைகளும் தாம் இந்த நாட்டவர்கள் என்று உணர்வதற்கு முதலில் உண்மையான ஜனநாயகமும்,அரசியல் கலப்பற்ற நீதி, நிர்வாக, சட்ட, காவல், பாதுகாப்பு அமைப்புகள் அவசியம். பரத் தமிழோ என்று கூறுகின்ற காவல் இராணுவத்துறை இருகின்ற வரை சட்டம் ஒழங்கு
  நியமாக செயற்பட முடியுமா. சந்தர்பம் சூல்நிலமைகளுக்கு ஏற்ற வகையில் தமிழ் மக்களுக்கு எதிராக முஸ்லிம்களையும் முஸ்லிம்களுக்கு எதிராக தமிழர்களையும் சின்ஹலம் பாவித்து கொண்டே இருக்கும். இந்த உண்மையை புரிவது தான் தமிழ் முஸ்லிம் உறவுக்கு அடித்தளமாக வேண்டும். இல்லாவிடில் இரண்டு இனங்களுமே அழிவதில் இருந்து யாரும் தடுக்க முடியாது. இந்த நாட்டின் சின்ஹல இனம் உங்களை சிறுபான்மை என்ற பதத்திற்கு உள்ளே தான் வைத்திருக்க விரும்புகிறதே ஒழிய நீங்களும் இந்த நாட்டின் சம பங்காளிகள் என்று என்றுமே ஏற்றதுமில்லை, ஏற்கபோவதுமில்லை.

  Reply
 • K. மாறன்
  K. மாறன்

  you are right Thurai, only the Facist don’t have the heart to accept.

  Reply
 • thurai
  thurai

  //கடந்த கால அனுபவங்கள் மிகத் தெளிவாக ஒன்றை கட்டி நிற்கிறது. இலங்கை என்ற தீவு தமிழ், முஸ்லிம், சின்ஹல இனங்கள் சமாதானமாக வாழ வேண்டுமானால் முதலில் இந்த நாடு மூன்றாகப் பிரிகப்படவேண்டியது//அஜீத்
  தமிழர் என்று கூறும்போது மலையகத்தமிழரை மறந்து போனீர்களா? முஸ்லிம்கள் என்று கூறும்போது யாழில் இருந்து வெளியேற்ரப்பட்ட முஸ்லிம்களை மறந்து போனீர்களா?

  //ஆரம்பகாலத்தில் இருந்து முஸ்லிம் சமூகத்தில் பலர் சின்ஹல இராணுவத்திற்கு உதவியாக இருந்து செயற்பட்டதை யாரும் மறுக்க முடியாது. உறவுகள் பாதிகப்படதற்கு இரு பகுதியினரும் பொறுப்பு ஏற்று சின்ஹல ஏகதியபத்தின் இடமிருந்து விடுபடும்வரை தமிழ் முஸ்லிம் உறவுகள் சீர் திருந்த வாய்ப்பே இல்லை.// அஜீத்

  யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் பரவலாக எல்லா இடமும் வாழ தமிழர் அனுமதிக்கவில்லையென்பது தெரியாதா? அப்படியிருந்தும் 58 கலவரத்தின் போது வவுனியாவில் முஸ்லிம் வர்த்தகரே தமிழர்களை தாக்க வந்த சிங்களவர்களை திருப்பித் துரத்த துப்பாகிகளைத் கொடுத்துதவினாரென்பது உங்களிற்குத் தெரியுமா? — துரை

  Reply
 • Gaja
  Gaja

  We need to take the race issue beyond particular communities – such as Tamil v Sinhalese, to global level through common values and experiences. Towards this we need to focus through most recent experiences and convert the old – such as 1958 experiences into feelings – except for academic purposes. Otherwise we will be living in the past. We need to live in the present and use global standards and principles through which we measure each other.

  Reply
 • karuna
  karuna

  அஜித்.. நீர் ஒரு இனத்துவேசி! அவ்வளவுதான்… காரணம் முதலில் நீர் தமிழன் என்ற வெறியில் தமிழன் செய்த தவறை தட்டிக்கழிக்கறீர். புலிகள் தான் தமிழ் மக்களின் ஏகப்பபிரதிநிதிகள் .. இனச்சுத்திகரிப்பிலும் கூட… எனவே முதலில் நீர் முஸ்லீம்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு உமது கருத்தை தெரிவித்திருக்க வேண்டும். உம்முள் இருக்கும் இனவாதம் அதை தடுக்கிறது! எனவே நீர் ஒரு இனத்துவேசி என்பதை முதலில் ஒப்பக்கொண்டு பின் கருத்தெழுவது நல்லது!

  Reply
 • நந்தா
  நந்தா

  வவுனியாவில் பிறந்து வளர்ந்த எனக்கு 58 கலவரம் ஒரு புதினம். எனது அயல் கிராமத்தவர்கள் சிங்களவர்கள். அவர்களில் ஒருவரேனும் கலவரத்தில் ஈடுபட்டது கிடையாது. முஸ்லிம்கள் துவக்குக் கொடுத்த கதைகள் எனக்கு இதுவரை தெரியாது.

  வவுனியாவில் பல தமிழ் சிங்கள விவசாயிகளிடம் லைசென்ஸ் துவக்குகள் அப்போது இருந்தன. அவை யாவும் 1971 ஆம் ஆண்டு கிளர்ச்சியின் பின்னர் அரசிடம் ஒப்படைக்கப்பட்டன.

  58 இன் பின்னர் வவுனியாவில் தமிழ்- சிங்கள உறவுகள் மோசமடையவில்லை. இந்த “ஈழநாசகாரிகள்” வவுனியாவில் கால் ஊன்றிய பின்னரே அந்த உறவுகள் தலைகீழாக மாறியது.

  ஆயினும் இதுவரை எனது சிங்கள அயல் கிராமவாசிகள் தமிழர் எவரையும் கொன்றதாகத் தெரியவில்லை. புலிக் கும்பலகள் பல தமிழர்களையும், தமிழ் பெண்களையும் கொன்றிருக்கிறார்கள்.

  Reply
 • Ajith
  Ajith

  திரு கருணா அவர்களே,
  நீங்கள் என்னை இனத்துவேசி என்று அழைப்பதில் தவறில்லை. எனது இனத்தின் உரிமைக்கான நீதியை கேட்பவர்கள் எல்லாம் இனத்துவேசம் என்றால் நான் பெருமை படுவேன். நீங்கள் யார் என்பது உங்களுக்கே புரியாத ஒரு மனித இனத்தின் முன்ஓடி. நான் சொன்ன ஒரு கருத்தை கூட உங்களால் மறுதலிகவோ அல்லது எதிரான நியாயமான் கருத்துகளையோ வைக்க முடியாதவர். நீங்கள் நீதி என்றால் என்ன என்று புரியாதவர்.

  நாம் அறிந்த இலங்கை வரலாறில் சிங்கள இனத்திற்கெதிரான இனத்துவேசத்தை 1915 இல் தொடக்கி வைத்ததே இந்த முஸ்லிம் இனம் தான். தாம் வாழும் தெருகளிநூடக சென்ற பௌத்த மத ஊர்வலத்திற் சென்றவர்களை தாக்கி இனக் கலவரத்தை வெள்ளை ஆட்சியின் துணை கொண்டு நடத்தியவர்கள், சிங்கள வாக்குகளை பெறுவதிற்காக சிங்களம் மட்டும் என்று அறிமுகபடுத்தி தமிழர் மீது இன அழிப்பை தொடக்கி இனத்துவேசம் கட்டியவர்கள் சின்ஹலவர்கள். இவை எல்லாம் நீதியட்டவை என்று நீதி கேட்டல் இனத்துவேசம். என்ன அடிமை மோகம்

  Reply