தெபா னம, பன்னிப்பிட்டிய, சிரஸ-சக்தி நிறுவனத்தின் மீதான தாக்குதலுடன் தொடர் புடைய நபரென சந்தேகிக்கப்படும் கோட்டே நகரசபை ஐ.தே.க உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை க்குட்படுத்தப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் டிபெண்டர் வாகனமொன்றையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மஹரகம பொலிஸார் மேற்படி சந்தேக நபரை நாவல பகுதியிலிருந்து கைது செய் துள்ளனர். மேற்படி நபர் யார் என்பது பற்றி பொலிஸார் வெளியிடவில்லை. இருப்பினும் தாக்குதலுக்கு யார், யார் வந்தார்கள் என்பது பற்றி சந்தேக நபரிடம் விசாரணைகளை நடத்துவதாக பொலிஸார் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட டிபெண்டர் வாகனம் மஹரகம பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.