மான்செஸ்டரில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியான வாழ்வாசாவா? போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து தலைவர் மோர்கன் முதலில் துடுப்பெடுத்தாட முடிவெடுத்தார்.
இங்கிலாந்து ஆட்டத்தை படுமோசமாகத் தொடங்கியது, மிட்செல் ஸ்டார்க் முதல் 2 பந்துகளில் ஜேசன் ராய், ஜோ ரூட்டை டக்கில் வெளியேற்றினார். இந்நிலையில் மோர்கன், பேர்ஸ்டோ இணைந்து எதிர்த்தாக்குதலில் இறங்கி 3வது விக்கெட்டுக்காக 67 ரன்களைச் சேர்த்தனர். ஆனால் ஆடம் ஸாம்ப்பா தனது சிறந்த பந்து வீச்சை மீண்டும் வெளிப்படுத்த மோர்கன் 23, பட்லர் 8, வெளியேற்ற 19வது ஓவரில் இங்கிலாந்து 96/4 என்று சரிந்தது.
ஆனால் பேர்ஸ்டோ, பில்லிங்ஸ் இணைந்து மேலும் 114 ஓட்டங்களைச் சேர்த்தனர். பேர்ஸ்டோ மிக சரளமாக ஆடி தன் 10வது ஒருநாள் சதத்தை 116 பந்துகளில் எடுத்தார், அதுவும் கமின்ஸ் பந்தை பிரமாதமாக ஸ்கொயர் லெக் மேல் சிக்சர் அடித்து கம்பீரமாக தன் சதத்தை எடுத்தார்.
ஆனால் கமின்ஸ் பந்துக்கு பேர்ஸ்டோ ஆட்டமிழக்க 41வது பந்துப்பறிமாற்றத்தில் இங்கிலாந்து 220/6 என்று இருந்தது. தொடர்ந்து வோக்ஸ் 39 பந்துகளில் அதிரடி அரைசதம் அடிக்க குர்ரன் 19 ஓட்டங்கள் எடுக்க ரஷீத் 22 பந்துகளில் 36 ரன்கள் விளாச இங்கிலாந்து கடைசி 5பந்துப்பறிமாற்றங்களில் 53 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து சவாலான 302 ரன்களை எடுத்தது. ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை 74 ஓட்டங்களுக்கும் ஸாம்ப்பா 3 விக்கெட்டுகளை 51 ஓட்டங்களுக்கும் கைப்பற்றினர்.

தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியாவின் வார்னர் (24), பிஞ்ச் (12), ஸ்டாய்னிஸ் (4), லபுஷேன் (20) மிட்செல் மார்ஷ் (2) என்று வோக்ஸ், ஜோ ரூட்டிடம் ஆட்டமிழந்து வெளியேற 73/5 என்று 17வது பந்துப்பறிமாற்றத்தில் இருந்தது. அதன் பிறகு நம்ப முடியாத அளவுக்கு ஆடிய கிளென் மெக்ஸ்வெல் 108ஓட்டங்கள் (90 பந்துகளில் 4 பவுண்டரி 7 சிக்சர்கள்), அலெக்ஸ் கேரி (106 ஓட்டங்கள், 114 பந்து 7 பவுண்டரி 2 சிக்சர்) சேர்ந்து சுமார் 31 பந்துப்பறிமாற்றங்களில் 212 ஓட்டங்களை 6வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். கடைசியில் இருவரும் ஆட்டமிழக்க கடைசி பந்துப்பறிமாற்றத்தில் 10 ஓட்டங்கள் தேவைப்பட்டது, ரஷீத் இறுதிப்பந்து பறிமாற்றத்தை வீசினார். அதனை எதிர்கொண்ட மிட்செல் ஸ்டார்க் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்து வெற்றியோடு முடித்து வைத்தார்.
கடைசி பந்துப்பறிமாற்றத்தில் ஆவுஸ்ரேலியா வெற்றிக்கு 10 ஓட்டங்கள் தேவைப்பட 2 பந்துகள் மீதமிருக்கையில் 305/7 என்று அபார வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 2-1 கைப்பற்றியது.
இதன் மூலம் 2015-க்குப் பிறகு இங்கிலாந்து தன் மண்ணில் முதன் முதலாக ஒருநாள் தொடரை இழந்தது.
ஆட்ட நாயகன், தொடர் நாயகன் இரண்டுமே கிளென் மேக்ஸ்வெல் கைகளுக்குச் சென்றது.
