சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் , தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.53 கோடியைத் தாண்டியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 2.66 கோடியைக் கடந்தது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 66 ஆயிரத்து 400-க்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 10.41 லட்சத்தைக் கடந்துள்ளது.
ஐக்கிய அமெரிக்காவில் கொரோனா தொற்று உறுதியானோர் எண்ணிக்கை 76 லட்சத்தைத் தாண்டியுள்ளது. மேலும், அங்கு கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 14 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கொரோனாவில் இருந்து விடுபட்டோர் எண்ணிக்கை 48 லட்சத்தைக் கடந்துள்ளது இதே நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66 லட்சத்தை தாண்டி உள்ளது. மொத்த பாதிப்பு 66,23,816 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 74,442 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 903 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இந்தியாவில் 1,02,685 ஆக உயர்ந்துள்ளது.