பிரித்தானியாவில் இருந்து தொகையாக தமிழர்களைத் திருப்பி அனுப்பத் திட்டம்!!!

Stop_the_War_on_Asylumபிரித்தானியாவில் இருந்து அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்களை தொகையாகத் திருப்பி அனுப்ப பிரித்தானிய அரசு முற்பட்டு உள்ளது. ஏற்கனவே இலங்கை அரசாங்கத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டின்படி தற்போது இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவதனை பிரித்தானிய உள்துறை அமைச்சு முடுக்கிவிட்டு உள்ளது. இதன் முதற்கட்டமாக ஜனவரி 15 அன்று 50 பேர் வரை விசேடமாக பதிவு செய்யப்பட்ட விமானத்தில் இலங்கைக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.

இது தொடர்பாகவும் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் தொடர்பான விரிவான கட்டுரையும் விரைவில் வெளிவரும். அதற்கு முன்னதாக சட்டவல்லுனர் அருண் கனநாதன் அரசியல் தஞ்சம் தொடர்பான தேசம்நெற் வாசகர்களின் கேள்விக்கு பதிலளிக்க கேள்விகளுக்கு முன் வந்து உள்ளார். அரசியல் தஞ்சம் தொடர்பான உங்கள் கேள்விகளை கருத்துக் களம் பகுதியில் பதிவு செய்யவும்.

Related News:

அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்ட மறக்கப்பட்ட மக்கள் – ஒரு பார்வை : த ஜெயபாலன்

பிரித்தானியவின் தஞ்சம் வழங்கும் செயன்முறை (asylum system) மனிதத் தன்மையற்றது

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • மாற்றுகருத்துதோழர்
    மாற்றுகருத்துதோழர்

    சிங்களத்தின் வெற்(று)றி பிரச்சாரம் உயிர் காக்க பிரித்தானியா ஒடிவந்த தமிழர்களின் உயிர்களுடனும் விளையாட ஆரம்பித்து விட்டதா! எனியாவது புரிந்து கொள்ளுங்கள் புலிகளின் வெற்றிதான் தமிழர்களின் உண்மையான பாதுகாப்பு.

    Reply
  • Thaksan
    Thaksan

    அப்ப உங்கட நினைப்பு இங்க (ஈழத்தில) யாரும் இருக்க கூடாது பிரித்தானியா உள்ளிட்ட மற்ற நாடுகளில் அகதியாய் கையேந்தி கால் நக்கி வாழ வேணுமோ? இப்பதானும் விளங்குதா எங்கட இனத்தை இங்கையிருந்து ஒழிச்சது புலிகளின் பிழையான போராட்டம் தானென்று? சனத்தையெல்லாம் கலைச்சுப்போட்டு யாருக்காம் விடுதலை எடுக்க நினைச்சவை? சூனிய மனுசனை சூரிய கடவுளாக்கிய குற்றம் எங்கட இனத்தை சும்மா விடாது. தெய்வ குற்றமெல்லோ. இன்னும் சிப்பிலியாட்டும் பாருங்கோ. கொரில்லா> …. எண்டெல்லாம் தொடர புலன்பெயர்ந்தவை உடுக்கடுச்சு உடுக்கடுச்சு உசுப்பேத்துவினம். பாவம் இங்க இருக்கிற சனம். இந்த பழி சும்மா விடாது. பிள்ளை> குட்டி எண்டு தொடரும். பாத்திருக்க உங்க பண்பாடு மாறி பைத்தியம் பிடிக்க வைக்கும். போதும் இனியெண்டாலும் பிரயோசனமா ஏதாவது வழி இருக்கோவெண்டு பார்ப்பம் வாருங்க தோழரே.

    Reply
  • Constantine
    Constantine

    Glad to note Mr. Gananathans involvement. I am sure Mr. Gana will give his valuable advice.

    This is more useful than Thalith & Marxism philosophy’s that endlessly dominates thesam net.

    Constantine

    Reply
  • palli
    palli

    மாற்று கருத்து தோழர் இதை இப்படியும் சொல்லலாம். வந்த இடத்தில் அடக்கி வாசிக்காமல் புலியின் பெருமைகளை வாந்தி எடுத்தால் இப்படி மலேரியா வரதான் செய்யும். ஆக மொத்தத்தில் புலி எங்கு போனாலும் சிலரை வாழவிடாது. சிலரை வாழ வைக்கும் (பணம் சேர்க்கினம்)
    பல்லி.

    Reply