“சண்டே லீடர்’ பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலை பற்றி புலனாய்வு செய்வதற்கு பொதுமக்களிடமிருந்து கிடைக்கும் ஒத்துழைப்பில் திருப்தியற்ற நிலை காணப்படுவதாக கடந்த வெள்ளிக்கிழமை பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் பிரதிப் பொலிஸ் மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான ரஞ்சித் குணசேகர கருத்துத் தெரிவிக்கையில்; தாக்குதலுக்கு பயன்பட்ட மோட்டார் சைக்கிளின் பதிவிலக்கத்தை அறிவதற்காக சம்பவ இடத்திலிருந்தவர்களின் சாட்சியங்களை புலனாய்வுக் குழு பதிவு செய்தது. எனினும் அவர்களின் முயற்சி பயனளிக்கவில்லை.
இக் கொலை விசாரணைகள் முன்னேற்றமடைய பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை. இந்நிலையில் விசாரணைகள் விஞ்ஞான பகுப்பாய்வு ரீதியான அறிக்கைகளிலேயே தங்கியுள்ளன. எனவே விசாரணைகளை முன்னோக்கி எடுத்துச் செல்ல நிச்சயமாக நீண்ட காலம் தேவைப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் விசாரணைகளின் போது உரிய சாட்சியங்களைப் பதிவு செய்யவேண்டும். இல்லாவிடின் பொலிஸரால் சமர்ப்பிக்கப்படும் ஆதாரங்களை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிடும்.
அத்துடன் நீதிமன்றங்களில் சாட்சியங்களை மிகவும் கவனமாக சமர்பிக்க வேண்டும். இன்னமும் 10 நாட்களில் இன்னொரு தடயம் கிடைக்கப் பெறும் என்று எதிர்பார்க்கின்றோம். என்றும் அவர் தெரிவித்தார்.
பகீ
கொலை செய்யப்பட்ட லசந்தா விக்கிரமதுங்காவின் மனைவியின் பேட்டி
http://www.youtube.com/watch?v=GApzsh_tkTA