2019 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் ஜமைக்கா நாட்டின் பரப்பளவுக்கு இணையான அமேசான் மழைக்காட்டை பிரேசில் இழந்திருக்கிறது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரேசில் தேசிய ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “ ஆகஸ்ட் 2019 ஆம் ஆண்டு முதல் ஜூலை 2020 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் ஜமைக்கா நாட்டின் பரப்பளவுக்கு இணையான அமேசான் மழைக்காட்டை பிரேசில் இழந்திருக்கிறது . சுமார் 11,088 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அமேசானில் காடழிப்பு நடந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சோனாரோ கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டின் பொருளாதார நலனுக்காக பிரேசிலில் மழைக்காடுகள் அழிவதை தீவிரப்படுத்தி வருகிறார். இதற்கு எதிராக பிரேசில் பூர்வ பழங்குடிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக ஜெய்ர் போல்சோனரோ பெரும் விமர்சனத்துக்கு உள்ளானார், முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் காட்டுத் தீ காரணமாக அமேசானடகாடுகள் தீக்கு இரையாகின. அப்போது பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் அமேசான் காட்டுத் தீயை அணைப்பதற்கு பொருளாதார ரீதியாகவும், தொழில் நுட்ப ரீதியாகவும் உதவ தயார் என்று தெரிவித்திருந்தார்.
ஆனால் இதனை பிரேசில்ஜனாதிபதி நிராகரித்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பூமியின் நிலப்பரப்பில் 6 சதவீதத்தை கொண்டுள்ள அமேசான் காடு, பூவுலகின் தாவரங்கள், உயிரின வகைகளில் பாதியைக் கொண்டுள்ளன. உலகின் நுரையீரலாக அம்சான் காடுகள் உள்ளன .