இலங்கை அணியின் வீரர் லஹிரு திரிமன்னேவிற்கும் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிக்கி ஆர்தருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இலங்கை வரவிருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரின் சுற்றுப்பயணத்தில் பங்கேற்கத் தயாரான தற்காலிக அணியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளைத் தொடர்ந்து அவர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இலங்கை அணியின் பயிற்சியாளர்கள், ஊழியர்கள் உட்பட 36 பேர் பேருக்கு நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் தொற்று உறுதியான லஹிரு திரிமன்னே மற்றும் தலைமைப் பயிற்சியாளர் மிக்கி ஆர்தரும் அரசாங்கத்தின் கொரோனா தொற்று தொடர்பான நெறிமுறைகளை கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.