லண்டனில் தமிழர்கள் தமிழர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி முதிய தமிழ் தம்பதியர் வீட்டை இழக்கும் அபாயம்!!!

லண்டன் குரொய்டனில் தங்கள் சொந்த வீட்டில் வாழும் முதிய தம்பதியினர் தங்கள் வீட்டை பறிகொடுக்கும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 200,000 பவுண்களை (6.6 கோடி ரூபாய்) முதலீட்டுக்காகப் பெற்றுக் கொண்ட தமிழர் ஒருவரால் நடத்தப்படும் நிறுவனம் ரெய்டன் – Raidenn Limited அவர்களை நடுத்தெருவில் விட்டுள்ளது. ரகு லோகன் என அறியப்பட்ட ராகுலன் லோகநாதன் (43) என்பவரினால்; கொம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்நிறுவனத்திற்கே இத்தம்பதியினர் முதலீட்டுக்காக 200,000 பவுண்களை வழங்கி இருந்தனர். தற்போது இந்நிறுவனம் அவர்களுடனான சகல தொடர்புகளையும் துண்டித்துக்கொண்டுள்ளது. அந்நிறுவனத்தின் கட்டிடம் இருக்கின்றதேயொழிய அங்குள்ள யாருடனும் தொடர்புகொள்ள முடியவில்லை.

ஹரோ பகுதியில் வாழும் எஸ் செந்தூரன் எனத் தன்னை அறிமுகப்படுத்தியவர் தேசம்நெற்க்கு தெரிவிக்கையில் தானும் ஒரே கல்லூரியிலேயே கல்விகற்றதாகவும், தாங்கள் சில சமயம் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவதாகவும் தானும் இவ்வாறான ஒரிரு சம்பவங்கள் பற்றிக் கேள்விப்பட்டதாகவும் தெரிவித்தார். இதற்கு மேல் தன்னால் எதுவும் தெரிவிக்க முடியாது என்று மேலதிக தகவல்களைத் தர மறுத்துவிட்டார்.

அப்பகுதியில் நீண்ட காலமாக நிதி ஆலோசகராக வீடு வாங்குவதற்கான ஆலோசணைகளை வழங்குவது மோற்கேஜ் பெற்றுக்கொடுப்பது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவர் தேசம்நெற் க்கு தெரிவிக்கையில் அபி என்றொரு பெண் ரீமோட்கேஜ் இன்வெஸ்ற்மன்ற் என்று செயற்பட்டதாகவும் இதனால் சிலர் பாதிக்கப்பட்டதாக தனக்கு தெரியவந்ததாகத் தெரிவித்தார். இப்போதெல்லாம் ஊரை கொள்ளையடித்து ஏப்பம் விடும் சிலரும் மோட்கேஜ் செய்து தருகின்றோம் என்று கடைவிரிக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

ராகுலன் லோகநாதன், அபி கணேசலிங்கம் (படங்கள்) ஆகிய இருவரும் ரீமோட்கேஜ் எடுத்து முதலீடுகளை மேற்கொண்டு லாபமீட்ட முடியும் என ஆசை வார்த்தைகளைக் கூறி நம்பிக்கையூட்டி இந்த வயோதிபத் தம்பதிகள் உட்பட சிலரை அவ்வாறு செய்ய வைத்துள்ளனர். ஆனால் முதலீட்டில் இருந்து வருமானம் ஈட்டுவது என்பது பல்வேறு புறச் சூழல்களிலும் தங்கியுள்ளது. ஆனால் இந்த முதலீட்டை மேற்கொண்டவர்களுக்கு இதன் ஆபத்துக்கள் பற்றி சொல்லப்பட்டதா என்பதோ சம்பந்தப்பட்ட இருவருமே நிதி ஆலோசணைகளை வழங்கத் தகுதி உடையவர்களா என்பதும் உறுதிபடத் தெரியவில்லை.

ஆனால் இவ்விருவரும் ஒரு மேட்டுக்குடித்தன வாழ்க்கையை வாழ்ந்துள்ளனர். ராகுலன் லோகநாதன் பிரித்தானியாவின் மட்டுமல்ல உலகெங்கும் அறியப்பட்ட உதைபந்தாட்ட விளையாட்டு பிரமுகர் டேவிட் பெக்கத்துடன் நின்று எடுத்த புகைப்படங்களை எல்லாம் தன் முகநூலில் பரிமாறியிருந்தார்.

இத்தம்பதியினரின் சில படங்களும் அவர்களின் டாம்பீகமான வாழ்க்கையை வெளிப்படுத்தி நின்றன. ஆனால் இவர்களை நம்பி முதலீட்டை மேற்கொண்டவர்களின் நிலைமை தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. இவர்களை நம்பி முதலிட்டவர்களுடனான சகல தொடர்புகளையும் ரகு – அபி தம்பதியினர் துண்டித்துள்ளதைத் தொடர்ந்தே இவ்விடயம் பொதுத் தளத்திற்கு வந்துள்ளது.

பிரித்தானியா குறிப்பாக லண்டன் சுதந்திரமான செயற்பாட்டுக்கான களமாக இருந்தாலும் இந்தச் சுதந்திரம் என்பது மோசடிகளுக்கான சுதந்திரமாகவும் இருக்கின்றது. இந்த மோசடிகளுக்கு நடைமுறை விதி முறைகளில் உள்ள ஓட்டைகளும் உதவுகின்றன. இதனால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர். லண்டன் உலகின் நிதிப்பரிவர்த்தனையின் தலைநகரமாக இருக்கின்ற அதே நேரம் நிதி மோசடியாளர்களின் கூடாரமாகவும் இருக்கின்றது. உலக மோசடியாளர்கள் பலரதும் வாழ்விடமாகவும் லண்டன் இருப்பது ஒன்றும்; இரகசியமானது அல்ல. அவர்களுக்கு எதிராக பிரித்தானிய அரசும் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றது. ரஷ்யாவின் பெரும் பணமுதலைகள் கூட பிரித்தானியாவிலேயே ஒழிந்து கொண்டுள்ளனர். பிரித்தானிய பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த மத்திய கிழக்கு பணமுதலைகளுக்கு லண்டனில் கோடிக்கணக்கில் சொத்துப் பத்துக்கள் உள்ளன. தற்போது பிரதமர் பொறிஸ் ஜோன்சனே தவறான வழிகளில் தனது வீட்டைத் திருத்துவதற்கான செலவை செலுத்த முற்பட்டு அம்பலப்பட்டு உள்ளார். இந்தப் பின்னணியிலேயே லண்டனின் மோசடிகளை அணுக வேண்டியுள்ளது. லண்டனில் மோசடிகள் இடம்பெறுவது ஒன்றும் புதிதல்ல. தமிழர்கள் மத்தியிலும் இம்மோசடிகள் நிறைந்துள்ளது.

“வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்” என்ற பழமொழி; ஒரு மனிதனின் வாழ்வில் வீட்டைக் கட்டுவது அல்லது வாங்குவது திருமணம் செய்து கொள்வது என்ற இரு விடயங்களுமே மிக முக்கிய அம்சங்களாக கணிக்கப்படுவதை குறித்து நிற்கின்றது. அப்படியான கஸ்டங்களுக்கு மத்தியில் வாங்கிய வீட்டை முதுமைiயில் பறிகொடுப்பது என்பது மிகக் கொடுமையானது. அவ்வாறான ஒரு நெருக்கடியில் தமது முதுமையில் கணவன் அல்ஸ்மியர் என்ற மறதி நோய்க்கு ஆளாகிய நிலையில் வீட்டையும் இழக்கும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளனர். லண்டன் குரொய்டனில் வாழும் இத்தம்பதியினரை நேரடியாகச் சந்தித்து அவர்கள் சேகரித்து இருந்த கட்டு ஆவனங்களையும் தேசம்நெற் பார்வையிட்டு இருந்தது.

இன்றைய காலகட்டங்களில் வீடு வாங்குவது என்பது அவ்வளவு இலகுவான பொறிமுறையல்ல. பிரித்தானியா போன்ற மேற்கு நாடுகளில் மனிதர்கள் நேர்மையாக பொறுப்போடு நடந்துகொள்வார்கள் என்று நீங்கள் நம்பினால் அதற்கு பாரிய விலையை நீங்கள் செலுத்த வேண்டி இருக்கும். இந்த வீடு வாங்குவது விற்பது தொடர்பில் சற்று அசந்தாலும் பாரிய இழப்புகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். இந்த வீடு வாங்கும் விற்கும் விடயங்களில் சட்டத்தரணிகளுக்கூடாகவே நிதிப் பரிமாற்றம் நிகழும். இவ்வாறான பரிமாற்றங்களில் சட்டத்தரணிகளே நிதியை கையாடிய சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது என்கிறார் கிழக்கு லண்டனில் மோற்கேஜ் ஏற்பாடுகளைச் செய்துகொடுத்து வருபவர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் கிழக்கு லண்டனைச் சேர்ந்த ஜெயசீலன் – ராணி தம்பதியினரும் அடக்கம். இவர்கள் 100,000 பவுண்களை (3.3 கோடி ரூபாய்) சட்டத்தரணியிடம் இழந்தனர். மற்றுமொரு இளைஞர் வாங்காத வீட்டுக்காக மோற்கேஜ் கட்டிக்கொண்டுள்ளார்.

குரொய்டன் தம்பதியினரிடம் இருந்து பெற்ற 200,000 முதலீட்டுக்கான வருமானம் செப்ரம்பர் 2021இல் நின்று போனது. இது தொடர்பாக தம்பதிகள் ரெய்டன் நிறுவனத்துடன் தொடர்பு கொண்ட போது இந்தா பணத்தை போடுகின்றோம் என்று சொல்லப்பட்டதேயல்லாமல் பணம் போடப்படவில்லை. மாதாந்தம் 1500 பவுண்களும் 400 பவுண்களுமாக 1900 பவுண் பணம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தேசம்நெற்றை அத்தம்பதியினர் டிசம்பரில் தொடர்பு கொண்ட போது அத்தம்பதியினருக்கு கடந்த மூன்று மாதங்களாக அவர்களுக்கான கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டு இருந்தது. ரெய்டன் நிறுவனத்துடனனா அவர்களுடைய தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு இருந்தது. “தொலைபேசி அழைப்புகளுக்கும் பதிலில்லை. மின் அஞ்சல்கள் பதிலளிக்கப்படவில்லை. தபால்களுக்கும் பதிலில்லை. ஹரோ விலேஜ் வேயில் இருக்கும் அந்நிறுவனத்திற்கு நேரடியாகப் போனபோது அது பூட்டிக்கிடந்தது. அருகில் உள்ள பிரபலமான ரெஸ்ரோறன்ருக்கு போனால் அவர்கள் புதிய வாடிக்கையாளர்களை அங்கு வரும்படி சொல்லி சந்திப்பதாக அறிந்தோம்” என அத்தம்பதியினர் தேசம்நெற்க்கு தெரிவித்தனர்.

இந்நிலையில் தேசம்நெற் ராகுலன் லோகநாதன் மற்றும் அங்கு பணியாற்றியதாக சொல்லப்பட்ட அபி கணேசலிங்கம் ஆகியோரது தொலைபேசியூடாக தொடர்புகொள்ள முயற்சித்தோம் ஆனால் அது பலனளிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து அவர்களுடைய முகநூலூடாகவும் அவர்களுடைய நண்பர்களுடைய முகநூலூடாகவும் தொடர்புகொள்ள முயற்சித்து அபி கணேசலிங்கம் ரகு லோகநாதனை தொடர்பு கொள்ளுமாறு கேட்டிருந்தோம். அந்நிலையில் அபி கணேசலிங்கம் தேசம்நெற்றை தொடர்பு கொண்டார்.

அவரிடம், முதலீடு செய்யலாம் என்று சொல்லி ரீமோட்கேஜ் எடுத்து கொடுத்து தற்போது அவர்கள் தங்கள் முதலீட்டுக்கான வருமானம் இல்லாமல் வீட்டை இழக்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நீங்கள் இது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று தேசம்நெற் கேள்வி எழுப்பியது. அவர் உடனடியாகவே தனக்கும் ரெய்டன் நிறுவனத்துக்கும் தொடர்பில்லை என்று விட்டார். அப்படியானால் நீங்கள் எப்படி பாதிக்க்பட்ட க்ளைன்ற்றோடு தொடர்பில் இருந்தீர்கள் என்று தேசம்நெற் கேட்டபோது தான் 2013 அளவில் அதில் வேலை செய்ததாகவும் தாங்கள் ரீமோட்கேஜ் போன்றவற்றை செய்து கொடுப்பதில்லை என்றும் தெரிவித்தார்.

அப்படியானால் பாதிக்கப்பட்டவர் எப்படி குறித்த முகவரியில் வந்து ரீமோட்கேஜ் பற்றி பேசியுள்ளார் என தேசம்நெற் கேள்வி எழுப்பியது. திரு பில்சாட் என்பவரே மோட்கேஜ் விடயங்களை கையாண்டவர் என்றார். அவரே அந்நிறுவனத்தின் பிரென்ஜைஸி எனத் தெரிவித்ததுடன் அதற்கும் தனக்கும் தொடர்பில்லை என்றார். அப்படியானால் அதன் பிரென்ஜைசர் யார் (தாய் நிறுவனத்தின் உரிமையாளர்) எனக் கேட்ட போது ராகுலன் என்றார். ராகுலன் உங்கள் கணவரா? என்று தேசம்நெற் சார்பில் கேட்கப்பட்ட போது. ‘ஓம்’ என்றார் அபி.

அப்படியானல் உங்கள் கணவருடைய நிறுவனத்தில் நீங்கள் பணியாற்றி இருக்கின்றீர்கள். பாதிக்கப்பட்டவருடைய மோட்கேஜ் விடையத்தை நீங்கள் கையாண்டு இருக்கிறீர்கள்? என்று தேசம்நெற் தனது கேள்விகளைத தொடர்ந்தது. என்னுடைய கணவருக்கு இருக்கும் வர்த்தக தொடர்புகள் பற்றி தனக்குத் தெரியாது அதனை அவரோடு தான் கதைக்க வேண்டும் என்றவர், ஆனால் தான் தனக்கு குழந்தை கிடைப்பதற்கு முன் வரை வேலை செய்ததாகவும், குழத்தைகள் பிறக்க 2013இல் வேலையை விட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். நீங்கள் உண்மையைச் சொல்கிறீர்கள் இல்லை. நீங்கள் சில மாதங்களுக்கு முன் வரை மின் அஞ்சல் தொலைபேசியூடாக தொடர்பில் இருந்துள்ளீர்கள் அதற்கான ஆதாரங்கள் தேசம்நெற் இடம் உள்ளது என்று தெரிவித்ததுடன் அவருடைய கணவரை தொடர்பு கொள்ளுமாறு தேசம்நெற் கேட்டுக்கொண்டது.

இச்செய்தி எழுதப்படும் வரை ராகுலன் லோகநாதன் தேசம்நெற்றோடு தொடர்பு கொள்ளவில்லை. அபி கணேசலிங்கம் முதலும் கடைசியுமாக அன்றைய உரையாடலின் பின் தேசம்நெற்றோடு தொடர்பு கொள்ளவில்லை. அந்த உரையாடலை அடுத்து ராகுலன் லோகநாதன் அபி கணேசலிங்கம் இருவரது முகநூல்களும் மூடப்பட்டது. அதேச சமயம் தேசம்நெற் அபி கணேசலிங்கத்துடன் உரையாடியதன் பின் பாதிக்கப்பட்ட சிலருடன் ரெய்டன் தொடர்பு கொண்டதாக தேசம்நெற்க்கு தெரியப்படுத்தப்பட்டது.

ஆபி கணேசலிங்கம் தேசம்நெற்க்கு கூறியதற்கு மாறாக அவர் பாதிக்கப்பட்ட தம்பதியரோடு யூன் 7 2021 மற்றும் ஒக்ரோபர் 4 2021 இல் தொடர்புகொண்டு பேசியுள்ளார். ஜனவரி 18 2021 காலை 8:23 மின் அஞ்சல் அனுப்பி உள்ளார். அதனால் அபி கணேசலிங்கம் 2013இற்குப் பின் வேலை செய்யவில்லை என்பது உண்மைக்குப் புறம்பானது.

கம்பனி ஹவுஸ் ஆவணங்களின் படி ரெய்டன் நிறுவனத்தின் பெறுமதி வெறும் ஒற்றைத்தான ஆயிரத்திற்குள்ளேயே இருக்கின்றது. ஆனால் பாதிக்கப்பட்ட இந்த தம்பதியினர் ரெய்டனில் வைப்பீட்டுக்கு வழங்கிய முதலீடு முத்தான ஆயிரமாக இருந்தது. ரெய்டன் நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களிடம் வாங்கிய பணத்தை கஃப்லிங் என்ற நிறுவனத்திலேயே முதலிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி தங்களையே முதலான தொடர்பாளர்களாகவும் ரெய்டன் பதிவு செய்துள்ளதால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உண்மையான முதலீட்டாளர்களுக்கும் இடையே எவ்வித சட்ட ரீதியான தொடர்பும் இல்லை.

அபி கணேசலிங்கம் இல்லாத நேரங்களில் பிரியா, மேகா ஆகிய பெயர்களில் சிலர் மின் அஞ்சலில் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளனர். ஆனால் கடந்த ஆறு மாதங்களாக பாதிக்கப்பட்டவர்களுடன் எவ்வித தொடர்பையும் ரெய்டன் நிறுவனம் சம்பந்தப்பட்டவர்கள் மேற்கொள்ளவில்லை. அவர்கள் தங்கள் முதலீட்டுக்கு என்ன ஆனாது என்று தெரியாமல் இருண்ட எதிர்காலத்தோடு தாங்கள் குடியிருக்கும் வீட்டை இழக்கும் அச்சத்துடன் வாழ்கின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

41 Comments

  • Balan
    Balan

    I though rahu is calm and nice family man untill hear the news, shame on u rahu

    Reply
  • Athi
    Athi

    This is really bad. What did they learn from their parents? Is this they want to learn their children? Where is are their Tamil values? These people are just garbage. Hang them high!

    Reply
  • Harrow Tamil Watch
    Harrow Tamil Watch

    Came to know this fraud couple Ragu & Abby have tea at Dorchester cake at Ritz wedding at Lords Holiday at marina sands Singapore daily designer wear dress range rover , houses photo shoots all on the expenses of sweat and work of innocent hard working Tamil people who put deposit to buy a home mortgage which is a life dream for the innocent families , rather this fraud couple owners of Raidenn Ltd HA2 owners Mr Raghukulan Loganathan and Abirami Ganeshalingam alias Ragu & Abby swindle that money and show off lavish to others and leave the poor customers with empty hand and lost dreams and family trauma, this is evilness and greed by cold hearted greedy fraud theif souls , day light robbery and fraud

    Reply
  • Arasan
    Arasan

    These money laundering criminals must be punished for the rest of their life.
    It can’t be left without taking any action. Bloody third graded frauds can’t escape after this website news has gone viral on the internet.
    Thank you ‘Thesamnet’ for publishing this horrible news immediately, after having known about the desperate situation of that old couple in Croydon, London.
    Their face will be torn apart after this news publicly.
    Please share this news to maximum level on all platforms.

    Reply
  • Jana
    Jana

    They do fake company accounts in many addresses and fraud VAT claims and cheat HMRC have illegal cash and gold in house underground thief accountant supports them big fraud team , all money they swindle from innocent Tamil people who go to them for mortgage

    Reply
  • Ravi
    Ravi

    புலம் பெயர் தமிழர்களின் அவமான முன்னுதாரன தம்பதிகள் இவர்கள், இவர்களுடன் சேரந்த இன்னும் பல தம்பதிகள் உண்டு, பல துறைகளில் உண்டு, களவு , வாடிக்கையாளர்களிடம் சுரண்டல், பொய் பேசி ஏமாற்றல், பணமுள்ளவர்களிடம் தகாத உறவு வைத்து பணம் கறத்தல் பின் குற்றம் சுமத்தல் இவ்வாறு பல கீழத்தரமான செயல்களால் பணம் கொள்ளையிட்டு பின் குடும்ப குழந்தை படங்களை முக நூலில் போட்டு நல்லவர்களுக்கு நடித்து மக்களை முட்டாளாக்கல் தான் இவர்களின் முழுநேரத் தொழில், இப்படியானவர்களின் போலி பகட்டை நம்பி பணம் கொடுக்கும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்

    Reply
    • BC
      BC

      //இவர்களுடன் சேரந்த இன்னும் பல தம்பதிகள் உண்டு, பல துறைகளில் உண்டு, களவு , வாடிக்கையாளர்களிடம் சுரண்டல், பொய் பேசி ஏமாற்றல், பணமுள்ளவர்களிடம் தகாத உறவு வைத்து பணம் கறத்தல் பின் குற்றம் சுமத்தல் இவ்வாறு பல கீழத்தரமான செயல்களால் பணம் கொள்ளையிட்டு பின் குடும்ப குழந்தை படங்களை முக நூலில் போட்டு நல்லவர்களுக்கு நடித்து மக்களை முட்டாளாக்கல் தான் இவர்களின் முழுநேரத் தொழில்//

      முற்றிலும் உண்மை.

      Reply
  • Anne
    Anne

    Many years of fraud by this fraud couple in Harrow Middlesex areas , they lie and target innocent hard working Tamil families and vulnerable people who can’t understand forms and formalities, they swindle unimaginable money from the targets and feed their lavish lifestyle , this has been happening for many years , many people lost money to these thieves frauds but didnt know where to go , local police and HMRC should get involve in this , this couple fraudsters operate in many fake names in registering companies, VAT fake claims , using customer details to get credit facilities for them like so and finally they say no to customers and take all the innocent customer money to their fake luxury life style

    Reply
    • Victim no 1
      Victim no 1

      Action fraud was informed and Hendon Metropolitan police was also referred to. But they didn’t take any action as there was not much evidence. Solicitor has written 2 letters one of them was sent by ‘Signed for delivery, surprise surprise it was returned. But the normal letters were all ignored. I think we all should get together and go to Police. Now more victims have come forward, we all should take them to court.

      Reply
  • Ruben
    Ruben

    This fraud Abi WAS my long distance cousin. These couple swindled 100 000 GBP in 2018 from me. I am living in Norway and done every deal legal with them. They losed the case in Court and waiting for the final order. May be they have plan to escape to other country and invested in other place out of UK. DON’T LET THEM TO ESCAPE FROM UK. They swindle money from innocent people even to toilet
    paper they need. What a shame, Rahu and Abi. They must be punished by public and legal. We have to be together and punishing them until they pay back every pence.

    Reply
  • Jegan
    Jegan

    This fraud couple invited then local politician MP by posing to him as decent people to open their office in village way , by showing off that they targeted many Tamil people by lieng to them that they have political links and swindled in many thousands including the then owner of their office building , they take many thousands of money from the customer then don’t give it back and threat the innocent customer , then they lie to police , over the period of years they have not only lied and fooled customers but the local police too , Abby is a constant liar who have lied to police again and again and have taken Met police for a ride, Police should investigate this matter thoroughly so innocent affected Tamil local people who doesn’t know English will come up and complain, This fraud couple have done theft and fraud including money laundering and loan sharing for not less than £2M including the fraud in the article which is only one in atleast fifty, Police and HMRC intelligence should get involve

    Reply
  • Dorothy Perera
    Dorothy Perera

    I know Abi & Ragu for some time from church community, I got to know few illegal matters they did to our church people but they come to church without a slim of guilt , that kind of cold hearted evil souls these are sweet talk and suck all the money from our God loving church goers , even one man refurbished their home on his money as they promised they will pay after the work is done , didn’t receive a penny but threats from them , it’s very annoying to see these kinds of frauds exsist and live normally among the good community

    Reply
    • Victim no 1
      Victim no 1

      They go to church ? 😨 I am.shocked. They wont have a shred of believe in any religion at all. How come God will forgive people like them. Are they coming there to get rid of their sins. No way, I hope they will get caught and punished by the court of law very soon.
      .

      Reply
  • Mathy
    Mathy

    This thief fraud culprits have been operating in Harrow and surrounding areas for swindling mortgage , investment money , Abby is a born liar and husband Ragu silently plays along , crooks , many complaints about them for many matters in the local society, its a gang , it has bankers , business people and accountants too all Tamil frauds , fake show off thieves from Raynerslane , Harrow , Stanmore areas Middlesex

    Reply
  • Mano
    Mano

    கர்த்தரை நேசிக்கும் எம் புனித ஜீவன்களிடம் தேவாலயத்தில் வைத்தே பணத்தை ஆட்டையைப் போட்ட இந்த அபி தம்பதி , புதிய வகைத் திருடர்கள், குழந்தைகளைப் பற்றிக் கூட சிந்திப்பதில்லை, அந்தளவு மோகம், மோசடி தம்பதி, இவர்களுடன் இன்னும் சிலர் இருக்கிறார்கள் , அதில் கணக்காளர், வங்கியில் வேலை செய்வோர், இப்படிப் பலர் சேர்ந்து நிதி மோசடி , அபி என்பவர் வீடு வாங்கித் தருவேன் என உறுதி பின் பணம் எடுத்து கைவிடல், கள்ளத் தொடர்பு பின் நிதி பெற்றபின் கைவிடல் குற்றம் சாட்டல் பொலிஸில் பிடித்துக் கொடுப்பேன் என அப்பாவிகளை வெருட்டல் இது தான் யுத்தி, இவர்களுக்கு வாடிக்கையாளர்கள் எடுத்துக் கொடுத்து பிரச்சனைப் பட்டவர்கள் பலர், இன்னும் களவில் பங்குபற்றும் சில கள்ள நண்பர் தொடர்புகளும் உண்டு

    Reply
  • Dilshan
    Dilshan

    MTSSC cricket club officials Harrow and their relative Harrow councillor support this fraud couple , may be fraud money involved

    Reply
    • Victim no 1
      Victim no 1

      Oh, Dear. Need to report him first.

      Reply
  • Harry
    Harry

    Jokers feeding kids by fraud money

    Reply
  • Sri
    Sri

    Office next to Gana restaurant Raynerslane ?

    Reply
  • Prem
    Prem

    படங்களைப் பாக்கும் போது வாந்தி வருகின்றது, அந்த வயோதிபர்களை நினைத்தால் மனம் கவலை , மனிதாபிமானம் அற்ற செயல் களவு

    Reply
  • Lava
    Lava

    I know this couple via cricket , women is a liar , man is a silent crook , third grade mentality act like posh , cheap skates knew this much fraudulent in them too , bad example for society and families including their own children, stealing from old people is a sinful crime

    Reply
  • Prags
    Prags

    This woman is an ex employee of Santander Bank , wonder how much fraud happened there

    Reply
  • மன்மதன்
    மன்மதன்

    இப்படியாக அப்பாவி மக்களிடம் திருடி சுரண்டிய பணத்தை இவர்கள் தமது நட்பு வட்டாரத்தினுள் வட்டிக்கும் விட்டு மேலதிகமாக களவு செய்பவர்கள் , தொடர் சங்கிலித் திருட்டு ,இவர்களின் பணத்தை கையாடும் இங்கிலாந்திலிருந்து கனடா சென்ற களவு நட்பு தம்பதி மற்றும் லண்டன் தம்பதிகளும் உண்டு, தம்பதி கள்ளர்கள், குடும்பம் நடத்துவது குழந்தைகளுக்கு உணவளிப்பது உழைத்து வாழும் தமிழர்களிடம் களவெடுத்த பணத்தில்

    Reply
  • Jathu
    Jathu

    Cruel robbery , fraud, identity theft from the vulnarable, cold hearted sinful act, inhuman money greed , must be in the genes , shame for us Tamil community

    Reply
  • FSA Tamil
    FSA Tamil

    இவர்களின் களவு மற்றும் வட்டிக்குப் பணம் கொடுத்தல் பற்றி கீழ்காணும் தொடர்புகளில் இங்கிலாந்து நிதி மோசடியில் பெயர் கொடுத்தோ கொடுக்காமலோ முறையிடலாம், வேறு வண்டிக் காரர் பற்றியும் முறையிடலாம், இவர்களிடம் பணம் வாங்கியவர்கள் திருப்பிக் கொடுக்க தேவையில்லை அவர்களும் கீழ்காணும் தொடர்புகளில் இங்கிலாந்து நிதி மோசடிக்குத் தெரிவிக்கலாம் reportaloanshark@stoploansharks.gov.uk Telephone 24 hrs 0300 555 2222
    Report by text 07860022116

    Reply
  • Jegan Sri
    Jegan Sri

    இவர்களின் களவு மற்றும் வட்டிக்குப் பணம் கொடுத்தல் பற்றி கீழ்காணும் தொடர்புகளில் இங்கிலாந்து நிதி மோசடியில் பெயர் கொடுத்தோ கொடுக்காமலோ முறையிடலாம், வேறு வட்டிக் காரர் பற்றியும் முறையிடலாம், இவர்களிடம் பணம் வாங்கியவர்கள் திருப்பிக் கொடுக்க தேவையில்லை அவர்களும் கீழ்காணும் தொடர்புகளில் இங்கிலாந்து நிதி மோசடிக்குத் தெரிவிக்கலாம் reportaloanshark@stoploansharks.gov.uk Telephone 24 hrs 0300 555 2222
    Report by text 07860022116

    Reply
    • Victim no 1
      Victim no 1

      🙏🙏🙏

      Reply
  • Ana
    Ana

    This is fake news! Stop spreading these lies!

    Reply
    • Ruben
      Ruben

      This is not fake news. Wake up

      Reply
    • Victim no 1
      Victim no 1

      This is not fake news.utterly true. Are you one of them too? You have no idea. Looks like you are one of their friends.

      Reply
  • Kavitha
    Kavitha

    Dette er ikke sant!

    Reply
    • Ruben
      Ruben

      Dette er sant, Kavitha.
      Våkne opp. De har lurt mange tusen hard arbeidende tamiler i flere år i UK 😩og heile UK veit om dette 🤨 nå.

      Reply
  • Gnana
    Gnana

    ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் உள்ளன. காலதாமதமாயினும் உண்மை வெளிவந்த சந்தர்பக்கங்கள் ஏராளம். இதில் பாதிக்கப்பட்டவர் என பதிவிடும் Norway-Ruben …. சம்பந்தப்பட்ட ஆதாரங்கள் தேவைஎனின் மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளவும்.

    Reply
    • Ruben
      Ruben

      🤣🤣🤣Gnana is not my Barrister, sorry. I have won the case and these frauds have lose the case. It’s done

      Reply
      • Victim no 1
        Victim no 1

        Ruban I like to speak to you. Please contact me through Jeyabalan. Thank you.

        Reply
  • Ravi kana
    Ravi kana

    இவர்களின் களவு மற்றும் வட்டிக்குப் பணம் கொடுத்தல் பற்றி கீழ்காணும் தொடர்புகளில் இங்கிலாந்து நிதி மோசடியில் பெயர் கொடுத்தோ கொடுக்காமலோ முறையிடலாம், வேறு வண்டிக் காரர் பற்றியும் முறையிடலாம், இவர்களிடம் பணம் வாங்கியவர்கள் திருப்பிக் கொடுக்க தேவையில்லை அவர்களும் கீழ்காணும் தொடர்புகளில் இங்கிலாந்து நிதி மோசடிக்குத் தெரிவிக்கலாம் reportaloanshark@stoploansharks.gov.uk Telephone 24 hrs 0300 555 2222
    Report by text 07860022116

    Reply
  • நவம்
    நவம்

    இந்த மோசடித் தம்பதியின் குட்டுகள் திருகு திருட்டுத் தாளங்கள் மக்களை ஏமாற்றும் நிதி களவாடும் செயல்கள் வெளிவந்தது நன்று இவ்வாறான செயல்கள் புரியும் மேலும் பலருக்கு இது வயிற்றில் புளியைக் கரைக்கும் , நன்று

    Reply
  • Vinothan
    Vinothan

    நெருப்பு இருந்ததால் தான் புகை வந்துள்ளது , வயோதிபத் தம்பதியிடம் 200,000 கறந்து விட்டு 1900 கொடுப்பது அதுவும் மாதம் 1500 என்பது என்பது அவர்களின் எஞ்சிய வாழ்க்கை காலம் போதாது என்பது நன்கு தெரிந்து அறிந்து செய்த மோசடிக் களவு deception by fraud , மிகுதி 197500 பவுண்டுகள் எங்கே ? இப்படி எத்தனை பேரிடம் எவ்வளவு நடந்துள்ளது? இவர்களைப் பற்றி பலரும் மோசடி வழக்கு பல வருடங்கள் தொடர்ந்துள்ளனர், இவர்கள் உண்மையிலையே நிதி ஆலொசனை வழங்கும் பரீட்சை சான்றிதழ் உள்ளவர்கள் தானா ? இல்லையெனில் அவ்வாறு கூறுவதே சட்ட விரோதம், ஆம் எனில் சட்டத்தால் செய்து தண்டிக்கப்பட வேண்டியவர்கள்

    Reply
  • Mohan Pathmarajah
    Mohan Pathmarajah

    This guy used to work as a shop cashier in a newsagent chain I was managing few years back , I always wondered how he is affording all this luxury in a short time , got to know about this frauds he did with his now mortgage advisor girl friend , she was sacked from a well known company too , one of my relative lost money to them too luckily after few people got involved they paid back even that after more than 6 months but it was a small amount , it was good few years back , and they were dealing with different names, shocking to know they been doing this till now with having children too , something extremely wrong in characters and wonder where all these money goes ? Banks should be thoroughly checked , hope that old people get their life earnings back , Robbing £200,000 thousand cash from a single transaction is a big crime

    Reply
  • Annonymous
    Annonymous

    இந்த கள்ளத் தம்பதிகள் அப்பாவி விடயமறிதாத தமிழ் மக்களை தேர்வு செய்து களவெடுப்பவர்கள் , அதனால் தான் இன்னமும் சிறை செல்லவில்லை

    Reply
  • Annonymous
    Annonymous

    இவர்களின் களவு மற்றும் வட்டிக்குப் பணம் கொடுத்தல் பற்றி கீழ்காணும் தொடர்புகளில் இங்கிலாந்து நிதி மோசடியில் பெயர் கொடுத்தோ கொடுக்காமலோ முறையிடலாம், வேறு வட்டிக் காரர் பற்றியும் முறையிடலாம், இவர்களிடம் பணம் வாங்கியவர்களும் திருப்பிக் கொடுக்க தேவையில்லை அவர்களும் கீழ்காணும் தொடர்புகளில் இங்கிலாந்து நிதி மோசடிக்குத் தெரிவிக்கலாம் reportaloanshark@stoploansharks.gov.uk Telephone 24 hrs 0300 555 2222
    Report by text 07860022116

    Reply

    Reply