கொழும்பில் ஆனந்த விகடன் விற்பனையாளர் ஸ்ரீதர்சிங் கைது

vkadan.jpgஇலங்கையில் இயங்கும் பிரபல தமிழ் புத்தகக் கடைகளின் உரிமையாளரும் விகடன் விற்பனைப் பிரதிநிதியுமான ஸ்ரீதர்சிங் நேற்று இலங்கை போலீசாரால் கைது செய்யப்பட்டார். விடுகலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மகன் சார்லஸ் ஆண்டனி மற்றும் அவர் தலைமையில் இயங்கும் புலிகளின் விமானப் படை, அது சமீபத்தில் கொழும்பில் நடத்திய அதிரடித் தாக்குதல் குறித்த செய்திகள் ஆனந்த விகடனில் விரிவாக வெளியாகியுள்ளது. இந்த இதழ்களை அவர் விற்பனை செய்ததால் பயங்கரவாத தடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்கிசை காவல் நிலையத்தில் அவரை அடைத்துவைத்துள்ளனர்.

‘ஆனந்த விகடன்’ வார இதழை யாழ்ப்பாணத்தில் உள்ள ‘பூபாலசிங்கம்’ புத்தகசாலைக்கும் மற்றும் விற்பனை நிலையங்களுக்கும் அனுப்புவதற்கான கட்டுக்களை இரத்மலானை விமான நிலையத்திற்கு அனுப்பியபோது, அதனை சோதனையிட்ட காவல்துறையினர், அதில் பிரசுரமாகியிருந்த வான் தாக்குதல் குறித்த கட்டுரைகள் மற்றும் படங்கள் இருப்பதைக் கண்டு பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர், வியாழக்கிழமை மாலை விகடன் கொழும்பு விற்பனைப் பிரதிநிதியான ஸ்ரீதர்சிங்கின் வெள்ளவத்தை வீட்டுக்குச் சென்ற பயங்கரவாத தடுப்பு காவல்துறையினர் அவரை கைது செய்தனர். பின்னர் கல்கிசை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றதாக ஸ்ரீதர்சிங்கின் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். கடந்த 30 ஆண்டுகளுக்கும் ‘ஆனந்த விகடன்’ வார இதழை ‘பூபாலசிங்கம்’ புத்தகசாலை தமிழ்நாட்டில் இருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 Comments

  • palli
    palli

    அஸ்ரப் கொழும்பில் ஊடக சுகந்திரம் ஓ போடுகிறது போலை இருக்கு. இதை பார்க்க பல்லி நேரில் வர வேண்டுமா??

    Reply
  • santhanam
    santhanam

    இது சிங்களவன் செய்வது சரி இந்தியா பரம்பரையை வைத்து ஒட்ட பார்க்கிறது மகன் ஒரு சாது சிறு வயதிலிருந்து சுற்றிவர பாதுகாப்போடும் பயத்திலும் தான் வளர்ந்தவர் அதற்கு ஆனந்தவிகடன் உரம் போடுகிறது.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    பல்லி நீங்கள் விகடன் பத்திரகைகள் பார்ப்பதில்லை போல. பார்த்திருந்தால் விகடனின் விசமங்கள் உங்களுக்கும் புரிந்திருக்கும். சமீப காலங்களாக விகடனில் சரணணன், திருமாவேலன், ரவிக்குமார் என்ற பெயர்களில் சிலர் கட்டுரைகள் புலிகளுக்கு ஆதரவாக மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை வைத்து எழுதி வருகின்றனர். உதாரணமாக சில வாரங்களுக்கு முன்னர் அடல் பாலசிங்கம் – கிலாரி கிளிங்டன் சந்திப்பு நடைபெற்றதாகவும், அதன் அடிப்படையில் கிலாரி கிளிங்டன் புலிகளுக்கு அதிநவீன ஆயுதங்களை ஆசிய நாடொன்றினூடாக வழங்கவிருப்பதாகவும் கட்டுரை வரைந்தார்கள். சென்ற கிழமை இலங்கை இராணுவம் புலிகளையும் மக்களையும் புதுக்குடியிருப்பு காட்டினுள் வைத்தே “தீ“ வைத்து அனைவரையும் சாகடிக்கத் திட்டம் தீட்டி விட்டதாகவும், வெகுவிரைவில் அவ்வாறு செயற்படுத்தப் போவதாகவும் எழுதினார்கள். அதுபோல் புலிகளின் வான்படைகள் பற்றிய அதீத கற்பனையில் கட்டுரை வரைந்தது மட்டுமல்ல, அக்கட்டுரையுடன் இந்திய விமானப்படையின் மிக் போர் விமானமொன்றை கிராபிக் மூலம் புலிகளின் விமானமாக மாற்றியமைத்து அதனை புலிகளின் விமானமாக காட்டியும் இருந்தனர்.

    பல்லி தெரியாமல்த் தான் கேட்கின்றேன் பத்திரிகைச் சுதந்திரமென்பது இப்படி அதீத கற்பனைகளில் புரளிகளைக் கிளப்பி விடுவதா ??

    Reply
  • george
    george

    The civil servant was burned all pobalasingham book depot in 80s,now again mr sridar singh arrest.
    its indicate that you with us or with the enemy.

    vikatan making a money by telling a thriller story and benefited by it but look at mr sridar singh he is been locked up.

    vikatan shouldnt be there first place if civi servant banned it,and it wasnt a fault of sridar singh.

    who fault is?goverment. not sridar singh.

    He is victim

    Reply
  • nadesh
    nadesh

    என்ன டிறாமாவா போடுறீங்கள். இந்தியாவில இருநது இங்கை வரமுந்தியே செக்பண்ணி விட்டிருக்கலாம்தானே. தமிழ்நாட்டில நடக்கிற கூத்துகள் உலகம்புரா தெரியும்.விடிஞசா பொழுதுபட்டா புலிக்காரர் பேட்டி முழுக்க அதுலதான் வருது. பிறகேன் கடை வாசல்வர வரவிட்டு வித்தவனைப் பிடிச்சு அடைப்பான்.

    Reply
  • palli
    palli

    பார்த்திபன் அதுக்கு தண்டனை கைது அல்ல. எதிரான புரியும் படியான எழுத்து. தேசத்தில் இருந்து கொண்டும் இப்படி சிந்திக்கலாமா? அவர்களது
    எழுத்துகளை உடையுங்கள். பல்லியும் உதவும். ஆனால் அவர்களின் (மனிதரின்) எலும்புகளை உடைப்பதை எந்த காரனத்துக்காகவும் பல்லி ஏறு கொள்ள மாட்டாது. தனியாக பல்லி மட்டுமே புலம்ம்பும் நிலை வந்தாலும். அராசகத்துக்கு எதிராகதான் புலம்பும். அது புலியானலும் சரி சிங்கம் என்றாலும் சரிதான்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    என்ன நடேசு புரியாமல் பேசுறீங்க. இந்தியாவில் சுங்கத்துறை பத்திரிகையில் என்ன எழுதியிருக்கெண்டெல்லாம் பார்க்க ஆரம்பிச்சிருக்கா ?? பத்திரிகை போகின்றதா அல்லது பத்திரிகை என்ற போர்வையில் வேறேதாவது போகின்றதா என்பதை மட்டுமே சுங்கத்துறை கவனிக்க முடியும். குறிப்பிட்ட செய்திகள் இலங்கைக்குப் பாதகமானது என்பதால் இலங்கை அரசு தானே நடவடிக்கை எடுக்க முடியும். அதனடிப்படையில் தான் விகடன் பத்திரிகையின் இலங்கைப் பிரதிநிதியான ஸ்ரீதர்சிங்கை கைது செய்திருக்கின்றார்கள்.

    Reply
  • பகீ
    பகீ

    ….குறிப்பிட்ட செய்திகள் இலங்கைக்குப் பாதகமானது என்பதால் இலங்கை அரசு தானே நடவடிக்கை எடுக்க முடியும். ….பார்த்திபன்

    உண்மைதான் சண்டே லீடரில வந்த செய்தியளுக்கு கடுதாசியும் மையும் பொறுப்பேற்கேலுமே லசந்தா தான் பொறுப்பு. அதுதான் நடவடிக்கை எடுத்திட்டாங்கள்!

    ….அதனடிப்படையில் தான் விகடன் பத்திரிகையின் இலங்கைப் பிரதிநிதியான ஸ்ரீதர்சிங்கை கைது செய்திருக்கின்றார்கள்…..
    புத்தகத்தில வந்தால் புத்தகத்தை பறிமுதல் செய்யலாம் தானே அதை விட்டிட்டு …1000 புத்தகங்களைக் கைதுசெய்யிறதிலும் விட ஆளையே கைது செய்யிறது ஈஸியான அலுவல் எண்டு நினைச்சிட்டாங்கள் ஸ்ரீலங்கா பொலிஸ் போல!

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    பகீ
    புத்தகங்களைப் பறிமுதல் செய்தால் போட்ட செய்தியை திரும்பப் பெற்றதாகிவிடுமா?? நல்ல வேடிக்கை. அப்போ ஏற்கனவே கொழும்பில் விற்றவையையும் ஏனைய நாடுகளில் விற்றவற்றையும் என்ன செய்யலாம். கொலைகளை எவர் செய்தாலும் தவறு தான். அது அரசாக இருந்தாலும் சரி, புலியாக இருந்தாலும் சரி . கொலைகளைக் கணடிக்கும் நீங்கள் யாழில் தினமுரசு விற்ற இளைஞன் மற்றும் கொழும்பில் கேதீஸ்வரன் போன்றோரை புலிகள் சுட்டுக் கொன்ற போது, இதைப் புலிகளுக்கு நீங்கள் எடுத்து விட்டிருக்கலாமே… என்ன இங்கேயும் மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடமோ ??

    Reply
  • palli
    palli

    பார்த்திபன் இது எமது துறை(ஊடகம்) என்பதால் பல்லிக்கு பல்லியின் பாணியில் எழுதுவது கடினமாக உள்ளது. இருப்பினும் இந்த கடையில் ஒருநாலைக்கு எத்தனை ஆனந்தவிகடன் விலைபடும்? ஒரு கிழமைக்கு எத்தனை ஆனந்த விகடன் (மொத்தமாக) விலைபடுகிறது. அதை விட கனனிகூட ஆனந்த விகடனை இலவசமாக எமது வீட்டுக்கே கொண்டு வரும் போது., இந்த கடையை தடை செய்வது ஒரு அரசுநிர்வாகி செய்யும் காரியமா? இது முட்டையை பச்சையாய் குடித்தால் சைவம். அதயே அவித்து (சமைத்து) சாப்பிட்டால் அசைவம். என்பது போல் இல்லையா??

    Reply
  • பகீ
    பகீ

    …புத்தகங்களைப் பறிமுதல் செய்தால் போட்ட செய்தியை திரும்பப் பெற்றதாகிவிடுமா?? நல்ல வேடிக்கை…../பார்த்திபன்

    அப்ப விக்கிறவனை உள்ளுக்கு போடலாம் என்கிறீர்கள். இந்தப் புத்தகங்கள் ஏற்கனவே ஸ்ரீலங்காவுக்குள் வந்து யாழ் செல்ல ரத்மலானை விமானநிலையத்துக்கு அனுப்பப்பட்டவை தானே. அப்ப கொழும்பு சுங்கக்காரனை என்ன செய்தார்கள்? என்ன செய்ய ‘வரி’ வாங்கியாச்சு கையில கடிக்குமெல்லோ!

    ‘….அப்போ ஏற்கனவே கொழும்பில் விற்றவையையும் ஏனைய நாடுகளில் விற்றவற்றையும் என்ன செய்யலாம்…..

    என்னுடைய பொயின்ரும் அது தானே. சேம் சைற் கோல் அடிக்கிறியளே!
    ஒண்டும் செய்யேலாது. ஏனெண்டால் அவையள் ஸ்ரீலங்காவில இல்லை. வெளிநாட்டில மாற்றுக்கருத்துக்காரரும் , ஜனநாயகக்காரரும் போதிக்கிற கருத்துச் சுதந்திரம் இருக்குது.

    ….கொலைகளை எவர் செய்தாலும் தவறு தான்…
    அரஸ்ட் பண்ணினதைப்பற்றிச் சொன்னால் கொலையை கொண்டு வாறியள்! உண்மைதானே ஸ்ரீலங்காவில அரஸ்ற் பண்ணினால் ஆள் அம்போ தான்.

    …யாழில் தினமுரசு விற்ற இளைஞன் மற்றும் கொழும்பில் கேதீஸ்வரன் போன்றோரை புலிகள் சுட்டுக் கொன்ற போது, இதைப் புலிகளுக்கு நீங்கள் எடுத்து விட்டிருக்கலாமே…
    நாங்கள் கேட்காமல் விட்டதுக்கு நீங்கள் பூபாலசிங்கம் கடைகாரரை தட்டப்போறியள் எண்டால் நான் ஒண்டும் செய்யேலாது ! வாழ்க கருத்துச் சுதந்திரம்! வாழ்க மாற்றுக்கருத்து !! வாழ்க ஜனநாயகம் !!!

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    பகீ
    உங்கள் தடுமாற்றத்திற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. ஆனந்தவிகடனின் இலங்கைப் பிரதிநிதியான ஸ்ரீதர்சிங்கை கைது செய்திருக்கின்றார்கள். அவர் விற்றவர் என்பதற்காக அல்ல இலங்கைப் பிரதிநிதி என்பதற்காகவே. அவரைக் கைது செய்து விசாரணை செய்வதாக அரசு முறையாக அறிவித்தும் உள்ளது. அதைப் பார்த்தவிட்டு நீங்கள் தான் லசந்தவின் கொலையை இதற்குள் புகுத்தினீர்கள். பின்பு நீங்களே ஒன்றும் புரியாதவர் போல் புலம்புகின்றீர்கள். எழுதியவற்றை உடனேயே நீங்கள் மறந்திருந்தால் திரும்பவும் நீங்கள் எழுதியதைப் படித்துப் பாருங்கள். வித்தியாதரன் விடயத்தில் அரசு நடந்து கொண்ட முறையை நான் கூடக் கண்டித்திருக்கின்றேன். உங்களைப் போல் எப்போதும் புலிவாலைப் பிடித்துக் கொண்டிருக்கவில்லை.

    Reply