அவுஸ்திரேலிய வரலாற்றில் முதன் முறையாக இலங்கை தமிழ் பூர்வீகத்தை கொண்ட மிஷேல் ஆனந்தராஜா பாராளுமன்ற உறுப்பினராக தெரிந்தெடுக்கப்ட்டுள்ளார்.
இவர் தெல்லிப்பளையை சேர்ந்த பெற்றோருக்கு தென் ஆபிரிக்காவில் பிறந்து UK ஊடாக அவுஸ்திரேலியாவுக்கு வந்தவர். இவரின் பூர்வீகம், குடும்ப விபரம் என்பன தேர்தல் முடியும் வரை மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தாலும் பல பத்திரிகைகள் இவரின் பெயரை வைத்து இவர் ஒரு இந்தியர் என்று கூறி வந்தன.
இவர் ஒரு மருத்துவராகவும் மருத்துவ ஆராய்ச்சியாளராகவும் கடமை புரிந்து வந்துள்ளார்.