Monday, September 20, 2021

திருகோணமலை சிறுமி வர்ஷா கொலை தொடர்பில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டிருந்த மற்றும் இருவர் இன்று சுட்டுக்கொலை

Regie_Varsa
திருகோணமலை பாலையூற்று சிறுமி வர்ஷாவை கடத்திச் சென்று கொலை செய்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு பேர் இன்று கண்ணியாவில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். குறித்த இருவரையும் சாட்சியமொன்றிற்காக அழைத்துச் செல்லும் போது பொலிஸாருக்கும் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலொன்றில் இடையில்  அகப்பட்டே இவர்கள் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, இந்த சிறுமி கடத்தல் மற்றும் கொலை வழக்கின்  இரண்டு சந்தேக நபர்கள் ஏற்கனவே பொலிஸாருடன் இடம்பெற்ற மோதல்களின் போது கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இன்று கொலையுண்டவர்களின் பெயர் விபரங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த கொலை வழக்கில் மொத்தமாக ஆறு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இன்றுடன் சந்தேக நபர்களில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

7 Comments

 • பார்த்திபன்
  பார்த்திபன்

  ஆக மொத்தத்தில் யாரையோ காப்பாற்றும் நடவடிக்கைகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பது தெளிவாகவே தெரிகின்றது.

  Reply
 • murugan
  murugan

  தமிழ் படம் மாதிரி திகிலாக இருக்கிறது.

  Reply
 • பகீ
  பகீ

  சந்தேக நபர்களுக்காக ஒரு சட்டத்தரணியும் ஆஜாராகக்கூடாது என இரண்டு இடங்களில் போஸ்ரர் ஒட்டப்பட்டதும் இவ்வகையான ‘யாரையோ’ காப்பாற்றும் நடவடிக்கையின் முன்னோட்டமே அன்றி வேறில்லை! இதனால் தான் எவருக்கும் சட்டத்தரணியை வைக்கும் உரிமையும் அவ்வாறு வைக்கமுடியாடத பட்சத்தில் அரசு இலவச சட்டத்தரணியை வழங்கும் உரிமையோ கொடுக்கப்பட்டிருக்கிறது. சட்டத்தரணி இல்லை என்றால் எல்லா பழியையும் ஒருவரின் தலையில் கட்ட வசதி தானே!

  Reply
 • sugu
  sugu

  ரீ.எம்.வி.பி என்ற கட்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை கிழக்கில் நடந்த அத்தனை கடத்தல் கொள்ளை; கப்பம் பெறுதல்; கற்பழிப்பு; கொலை என அத்தனைக்கும்; மேலும் கொழும்பில் நடந்த இவற்றைப்போன்ற கனிசமான அத்தனை சம்பவங்களுக்கும் கருணா-பிள்ளையான் உட்பட்ட இதே ரீ.எம்.வி.பி கட்சிதான் காரணம் என்பது அங்கு எல்லோருக்கும் தெரிந்த விடயமே.

  தற்போது கருணா மகிந்தாவின் கட்சியுடன் சேர்ந்ததும் புனிதமாகிவிட்டதா? இந்தக் கப்பப் பணத்தில் பிள்ளையான் கருணாவிற்கு வேண்டிய சொத்துக்களை வெளிநாடுகளில்(கருணா ஒளித்துத் திரிந்தும் கம்பி எண்ணிய காலங்கள் உட்பட)இடத்துக்கிடம் வாங்க செய்த லீலைகளை கருணா இவ்வளவு விரைவில் மறந்து விட்டாலும் இங்கும் அங்கும் பாதிக்கப்பட்ட மக்கள் மறப்பார்களா? இந்த நிலையில் கருணா மகிந்தாவின் கட்சி தாவியவுடனே நடக்கும் கூத்துக்கள் மக்களுக்கு புதிதல்லவே. ஏனெனில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ரீ.எம்.வி.பி.யில் பிள்ளையான் உட்பட 3பேர் மட்டுமே இருப்பதாக கூறி தன்னுடன் 3000பேரை மகிந்த கட்சிக்கு இணைத்ததாக கருணா தம்பட்டம் அடித்தார்.

  எனவே ரீ.எம.வி.பி.யை முற்றுமுழுதாக அழித்து -கிழக்கு தனித்துவத்தையும் மகிந்தாவுக்கு மொத்தமாக விற்று தனது அமைச்சர் பதவிக்கான விசுவாசத்தை அழகாக மகிந்தாவிற்கு காட்டுகின்றார். கருணாவின் இந்த பச்சைத் துரோகத்தை பால்குடிக் குழந்தை கூட உணரும் எனவே வர்சாவின் கொலைக்கான அத்தனை ரீ.எம்.வி.பியினரையும் அழிக்கும் அதேசாக்கில் ஒரே கல்லில் இருமாங்காயாக ரீ.எம்.வி.பியையும் அழிப்பதில் கருணா மும்முரமாக செயற்படுகின்றார்.

  மூன்றாவது மாங்காயாக தாங்கள் எல்லோரும் இலங்கை ராணுவத்துடனும்-ராணுவத்திற்கு உளவு சொல்லித்திரியும் கூலிக்கு மாரடிப்பவர்களின் அத்தனை ரகசியமும் வெளியே வரப்போவதை அப்படியே மூடி மறைப்பதற்காக நடத்தப்படும் தொடர் கொலைகள்தான் இவை. புலியை குறிக்கப்பட்ட சதுர அடிக்குள் வைத்து யுத்தம் செயிகின்றோம் என ஒருபக்கம் மார்தட்டும் இலங்கை அரசின் கணக்கைப் பார்த்தால் எப்படி திருகோணமலையில் அதுவும் மிக ரகசியமாக குற்றவாளிகளை வெளியே கொண்டு வருவதை காத்திருந்து வன்னிப்புலிகள் கொலை செய்ய முடியும். வன்னிப் புலிகள் தங்கள் இருப்பையே பாதுகாத்து கொள்ள போராடும் நிலையில் இங்கு நிற்பது உண்மையென்றால் கணக்கு எங்கோ உதைக்கின்றதே?

  புலி -கிழக்குப் புலியாகி- இபபோ மகிநத புலியாகி என்னென்ன திருவிளையாடல்களெல்லாம் பண்ணுகின்றார்கள். சொல்லுபவன் சொன்னால் கேட்பவனெல்லாம் கேணப்பயல்களென நினைத்து விட்டார்களா? இவற்றையெல்லாம் திருமலையில் நேர்மையான நீதியரசரென சொல்லப்படுபவரும் பார்த்துக் கொண்டருக்கின்றாரா? ஏதோ ஓன்று மட்டும் நடக்கின்றது. வர்சாவின் அபயக்குரல் பலபேரை கண்ககுத் தீர்க்கின்றது. பைபிளின் வாசகம் தான் ஞாபகம் வருகின்றது. வாளெடுத்தவன் வாளால் அழிவான்.

  Reply
 • பல்லி
  பல்லி

  பல்லி ஏதும் சொன்னாலே அதில் குற்றம் கண்டு பிடிக்க பலர் உள்ளனர். ஆகையால் இதில் பல்லிக்கு கருத்து சொல்ல பயமாக இருக்கிறது. இருப்பினும் ஒரு சிறுமியின் ஆத்மா தன்னை சின்னாபின்னமாக்கிய பலரை காவு வாங்கிவிட்டது என மகிழ்வதா? அல்லது இதிலும் அரசியல் நடப்பதை எண்ணி பல்லி வருந்துவதா?? எது எப்படியாயினும் குழந்தையின் ஆத்மா சாந்தியடைய எது எல்லாம் நடக்க வேண்டுமோ அதுகள் நடக்கும்போது பல்லியை அறியாமலே பல்லி மனம் நின்மதி கொள்கிறது.

  Reply
 • santhanam
  santhanam

  எங்கடை தலைவரும் மறைந்தால் இதுதான் வன்னியிலும் யாழ்லிலும் நடக்கும் எல்லோரும் புலியிலிருந்துதான் வந்தவர்கள்.

  Reply
 • மாயா
  மாயா

  ஒருவகையில் இவர்களை சட்டத்தின் கைகளில் ஒப்படைத்திருக்கலாம்.

  ஆனால் வர்ஷா கொலை தொடர்பாக மும்முரமாக செயலாற்றி வந்து போலீஸ் அதிகாரியான வாஸ் குணவர்தன அவர்களை அரசு இடமாற்றம் செய்ய முயன்றதை ஜேவீபி பாராளுமன்றத்தில் பேசியதால் அதை செய்ய முடியாமல் போனது. அதன் கோபமே போலீஸாரின் என்கவுண்டர் கொலைகளாக தொடர்கின்றன.

  ஒருவகையில் சட்டத்தின் முன் கொண்டு சென்று இவர்களை மீட்பதை விட , இத் தண்டனைகள் பாதிப்பாகத் தெரியவில்லை. இவர்களில் பலர் தொடர் கடத்தல்களை செய்து வந்தவர்கள்தான். அதனால்தான் மக்களின் உடனடி மகிழ்ச்சி எந்தவித அழுத்தமுமில்லாமல் வெளியானது. இது போலீஸாருக்கு தமது பணிகளை செய்ய உரம் கொடுத்ததும் உண்மையே.

  பிள்ளையான் இவர்களை யார் என்றே தெரியாதென கைகழுவுவது போன்ற நடைமுறைகள் அனைத்து இயக்கங்களும் செய்வது ஒன்றும் புதிதல்ல.

  Reply