தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் யுத்த நடவடிக்கைகள் பூர்த்தியடைந்ததும்; அரசாங்கம் அரசியல் தீர்வொன்றை முன்வைக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகமும்; அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன இன்று மட்டக்களப்பில் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தைத் திறந்து வைத்து உரையாற்றிய போதே இதனை அவர் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கூறுகையில
சுமார் 25 வருடங்களின் பின் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வ அலுவலகம் இன்று திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் வடக்கு-கிழக்கு மக்களுக்கும் நெருக்கமான தொடர்புகள் இருந்த போதிலும் யுத்த சுழ்நிலை காரணமாக துண்டிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது மீண்டும் அந்தத் தொடர்புகள் ஏற்படத் தொடங்கியுள்ளன.
யுத்தத்திற்கு இன்னும் சில நாட்களில் முடிவு கட்டப்பட்டுவிடும். அடுத்து அரசியல் தீர்வு முன் வைக்கப்படும். எப்படியான அரசியல் தீர்வு என்பதைப் பற்றி தற்போது ஆராய்ந்து வருகின்றோம் எனக் கூறினார்.
பார்த்திபன்
இனியாவது பெயருக்கு ஒரு தீர்வை வைக்காது, அனைத்து சமூகத்தினரும் சுய கெளரவத்துடனும் நிம்மதியாக வாழ்வதற்கும் ஏதுவான ஒரு தீர்வை முன் வைக்க அரசு முன் வர வேண்டும். இல்லையேல் இலங்கையில் என்றும் நிம்மதியாக மக்கள் வாழும் நிலை ஏற்படாது.
MUKILVANNAN
DONT GET ME WRONG,WITH THE HUMAN ERROR NOBODY IS PERFECT.TAMILS REBELS LEADER MR VELUPILLAI PIRABHAKARAN IDEOLOGY WHICH MIGHT SEEMS TO BE RIGHT TO WHOLE TAMIL IN THE WORLD,AND SEEMS TO BE WRONG TO TINY MINORITY,OR SOME KIND.NEAR OR FAR AND WIDE IN THE WORLD.
SENSE THAT SRILANKAN FORCES SENT A CHEMICAL POISONEND ROCKET TO THE TAMIL TIGERS ,KILLING OVER 500.THIS IS COMPLETE GENICIDE.WHICH THE ENTIRE WORLD HAVE TO CONDEM.