‘இந்திய அரசே! உன் கைகளிலும் இரத்தம்!’ இந்தியத் தூதரகங்கள் முன் ஆர்ப்பாட்டம் – போராட்டங்கள் தொடர்கிறது. : த ஜெயபாலன் & வி அருட்செல்வன்

இலங்கையில் தொடரும் உள்நாட்டு யுத்தத்தில் இந்தியாவின் பங்களிப்புக்கு எதிர்ப்பும் தெரிவிக்கும் வகையில் உலகின் முக்கிய நகரங்களில் உள்ள இந்தியத் தூதரகங்களிற்கு முன்னால் ஆர்ப்பாட்டப் பேரணிகள் நடைபெற்றது. ஏப்ரல் 8 இந்திய அரசின் யுத்த ஒத்துழைப்பிற்கு எதிரான நாளாக பிரகடனப்படுத்தப்பட்டு இப்போராட்டங்களை ‘தமிழர்கள் படுகொலை செய்வதை நிறுத்து’ என்ற போராட்டக்குழு ஏற்பாடு செய்திருந்தது. தங்களது அரசின் இந்த யுத்த ஒத்தழைப்பிற்கு எதிராக இந்திய மக்களும் சென்னையிலும் பெங்களுரிலும் புதுடில்லியிலும் போராட்டங்களை நடத்தி இருந்தனர். மான்ஹட்டன், லண்டன், ரெல்அவிவ், சுவீடன் ஆகிய நகரங்களில் ஒன்றினைக்கப்பட்ட போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது.

லண்டனில் இந்தியா ஹவுஸிற்கு முன்பாக ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். ‘தமிழர்கள் படுகொலை செய்வதை நிறுத்து’ போராட்ட அமைப்பின் லண்டன் கிளை ஏற்பாடு செய்த இப்போராட்டத்தில் அதன் சர்வதேச இணைப்பாளர் சேனன் இலங்கை யுத்தத்தில் இந்திய அரசின் ஒத்துழைப்புப் பற்றி விளக்கினார். இப்பொராட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த பலரும் தங்கள் கருத்தக்களை வெளியிடவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. மாலை 4:00 மணிமுதல் 5:30 வரை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இந்தியா ஹவுஸ் அமைந்திருந்த சதுக்கத்தைச் சுற்றி ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசங்களை எழுப்பிய வண்ணம் சுற்றி வந்தனர்.

அப்போது பிபிசி செய்தி நிறுவனம் அமைந்திருந்த புஸ் ஹவுஸை ஆர்ப்பாட்ட அணி அண்மித்த போது ‘பிபிசி நீங்கள் எங்கே போனீர்கள்’ என உரக்கக் கோசம் எழுப்பப்பட்டது.

தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதை நிறுத்து! இந்திய அரசே! உன் கைகளிலும் இரத்தம்!! மகிந்த அரசுக்கு ஒரு ரூபாயையோ ஒரு குண்டையோ வழங்காதே!!! போன்ற கோசங்கள் ஓங்கி ஒலிக்கப்பட்டது.

புலி ஆதரவு அமைப்புகள் தமிழ் மக்களை மையப்படுத்தி போராட்டங்களை புலிகளது நலன் சார்ந்து மட்டும் முன்னெடுக்கையில் மக்கள் நலன்களையும் முன்னிலைப்படுத்தி சிறிய அளவிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக லண்டனிலும் மற்றும் முக்கிய நகரங்களிலும் Committe for Workers International அமைப்பினரும் பாரிஸில் சமூகப்பாதுகாப்பு அமைப்பினரும் (Comité de Défense Social) தமிழ் மக்களுக்கு அப்பால் பெரும்பான்மைச் சமூகங்களை இணைத்து போராட்டங்களை முன்னெடுப்பது குறிப்பிடத்தக்கது. இப்போராட்டங்களில் பல இளவயதினர்களும் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.

இவற்றுடன் லண்டனில் வெஸ்ற் மினிஸ்ரர் பாராளுமன்றம் முன்னாக நடைபெறு போராட்டம் நான்காவது நாளாகத் தொடர்கிறது.

london-parliment-meeting2.jpgபிரிட்டன், அமெரிக்காவில் 7 பேர் சாகும்வரை உண்ணாவிரதம்

இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கக் கோரியும் அங்கு போர் நிறுத்தமொன்றை ஏற்படுத்தக்கோரியும் இலண்டனில் ஈழத்தமிழர்கள் இருவர் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள அதே நேரம், அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஐவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரித்தானியாவில் தமிழர்கள் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் நடத்திவரும்,இலண்டன் வெஸ்ற் மினிஸ்ரர் பாலம் அமைந்துள்ள பகுதியிலேயே இந்த இளைஞர்கள் இருவரும் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து தமது சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதியில் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, நியூயோர்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்பாகவுள்ள அமெரிக்காவின் ஐ.நா.வுக்கான தூதுவர் சூசன் றைசின் அலுவலகத்திற்கு முன்பாக ஐந்து தமிழர்கள் 24 மணி நேர நீராகாமின்றி உண்ணா விரதப் போராட்டத்தை நடத்தினர். நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்ட, நீராகாரமின்றிய இநத உண்ணா விரதப் போராட்டம் மாலை 5 மணிவரை நடத்தப்பட்டது.

இதேபோன்று ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய தூதுவர் அலுவலகத்திற்கு முன்பாகவும் அரசாங்கத்தின் பயங்கரவாதத்திற்கு இந்தியா துணை போகாது ஈழத்தமிழர்களை காப்பாற்ற வேண்டுமென வலியுறுத்தி அமைதியான போராட்டத்தினை இன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் பின்னர் ஐ.நா.வுக்கான மெக்சிக்கோ தூதுவர் அலுவலகத்திற்கு முன்பாக இலங்கை விவகாரத்தை ஐ.நா. சபை வரை கொண்டு வந்ததற்காக மெக்சிக்கோ அரசுக்கு நன்றி தெரிவிக்கும் பேரணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 Comments

  • thurai
    thurai

    உலகம் முழுவதும் 30 வருடங்களாக வாழும் ஈழத்தமிழர், தமது பிறந்தநாட்டிற்காகவும், புகுந்த நாட்டிற்காகவும் செய்த தியாகங்களை உலகமறியும்.
    எமாற்ராதே,ஏமாற்ராதே ஏமாறாதே ஏமாறாதே.

    துரை

    Reply
  • மாயா
    மாயா

    பிரபாகரன் திலீபனுக்கு சொன்னது போல , சாகிறவரைக்கும் ஒருத்தனும் எழும்பப்படாது.

    Reply
  • MUKILVANNAN
    MUKILVANNAN

    ITS NOT THE TIME TO MAKES JOKES ON DEAD BODIES.ITS THE TIME TO ACT TO SAVE OUR OWN PEOPLE.OTHERWISE WE HAVE NO WRIGHT TO BE HUMAN,WE ARE SOMETHING ELSE. DEAR MY TAMILS, WE HAVING A BETTER LIFE IN THIS COUNTRY BUT OUR PEOPLE WHERE HAVE LOST THEIR DAILY LIFE,ANYTHING COULD HAPPEND TO THEM,DEATH IS BECAME THEIR FUTURE. AS A HUMAN BEING WE MUST ACT,AND SAVE THEM FROM DEATH.

    Reply
  • s.s.ganendran
    s.s.ganendran

    மாயா சொல்வதுதான் சரி சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டவர்கள் சாகும் வரையில் எழும்பவேகூடாது, ஆனாலும் விடுவான் களா நமது சனம் ஐயோ அவன் செத்திடுவான் மெல்ல எதாவது எமது தலைவரின் பாணியில் கதை சொல்லி மெல்ல கடத்திட்டால் என்னவெண்று இப்பவே ஏதாவது முடிவு செய்திருப்பார்கள், இப்படித்தானே மதிவதனிக்கும் நடந்தது, ஆனால் …………….

    Reply
  • paramu
    paramu

    Dear MUKILVANNAN,

    You are talking about human being…where were you when LTTE killed over 5000..youths from the other groups?

    Reply
  • indian
    indian

    ஏன் ஜயா நீங்கள் இந்தியாவை இழுத்துப் பேசுகிறீர்கள் – பலாலியிலிருந்து இருந்து இந்திய அமைச்சரை மாலை போட்டு அழைத்ததை ஏன் மறந்தீர்கள்? ரமேஸ் பண்டாரிளின் காலில் விழுந்து இந்திய இராணுவத்தை வரும்படி ஏன் கேட்டீர்கள் இலங்கை இந்திய ஒபபந்தத்தில் பெற்ற உதவிகள் தான் எவ்வளவு? இன்று இவவளவையும் மறந்து இந்தியாவிற்கு எதிராக போராட்டம் செய்வதின் மர்மம் என்ன? யாருடைய agenda இப்போ உங்கள் கையில் இந்த சோசலிஸக் கட்சி ஏன் இலங்கைத் தூதரகம் முன்பு செய்யவில்லை?

    இந்திய இராணுவம் நிற்பதாக விடும் புலிப்பசப்பு போல் சி டபிள்யு ஜ ம் யாருடைய அஜந்தாவுடன் வேலை செய்கிறத.

    இனிமேல் நீங்கள் இந்திய உயர் ஸ்தானிகர் ஆலயத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் போட்டால் நாம் இந்தியர்கள் உங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை குழப்ப முன்வர வேண்டி வரும்.

    Reply
  • gmb
    gmb

    Yes, save your people by telling the murderous LTTE terrorists to let your people go! The LTTE terrorists are the…. of the earth! Death to the LTTE! Death to the LTTE! Death to the LTTE! Have a great day!

    Reply
  • குண்டுசட்டி குண்டுமணி
    குண்டுசட்டி குண்டுமணி

    இலங்கைத் தமிழரிடையேயான “இந்திய எதிர்ப்புணர்வுக்கு” சரியான தொடர்ச்சியான வரலாறு கிடையாது. அரிபெடுத்தால் சொரியும்போது கிடைக்கும் ஒருவகை “சுய இன்பம்” போன்றது இது. இத்தகைய மனோநிலை உள்ளவர்கள் பெரும்பாலும் புலம்பெயர்ந்து விட்டதால் “புலம்பெயர் சிந்தனை” என்று கூறலாம். “டெலோ” உறுப்பினர்கள் கொல்லப்பட்டபோது, “சோடா உடைத்து கொடுத்து” மக்கள் ஆதரவு தந்தது “உண்மையென்றால்”, அதற்கு “முன்” அதைவிட கொடுமையாக “எந்த இந்தியனும்” இலங்கைத் தமிழன் மீது கைவைத்தது கிடையாது. சிங்களவர்களின் இந்திய எதிர்ப்புணர்வு என்பது,ஜே.வி.பி. யை அடிப்படையாகக் கொண்ட, இலங்கை “இடதுசாரிகளின்” வழியில் இயல்பானது இலங்கை இராணுவ சிப்பாய் இராஜீவ் காந்தியை தாக்கிய உணர்வும் இயல்பானது. ஆனால் இலங்கைத் தமிழரின் தீவிர வன்முறை “உளவியல்” லுக்கான காரணத்தை பலரும் எழுத வேண்டும். இந்தியாவின் அட்டூழியத்தால் எதிர்ப்பு எழுந்தது எனற குற்றச்சாட்டை ஆராய்ந்துவிட்டேன், சர்வதேச அளவில் ஆதாரத்துடன் இதை கொண்டுசெல்லவேண்டு என்ற என் கருத்தை கேட்டு சிரிக்கிறார்கள்-பொழுதுபோக்கு அம்சமாக, உணர்ச்சிகரமாக-இலாபகரமாகதான் கையாளுகிறார்கள். இந்திய முதலாளிகள் தமிழக தமிழருக்கு கொடுக்கும் சலுகைகளை? இவர்களுக்கு கொடுத்தால் பிரபாகரனை பிடித்துக் கொடுத்துவிடுவார்கள்- என்ற துருப்பு சீட்டாகவே பயன்படுகிறது. சிறீமாவோ-ராஜபக்சே அரசுகளுக்கு இந்திய ஆதரவு தொடர்ச்சியானது- ஜே.வி.பி. எதிர்ப்பு போல், இந்த எதிர்ப்பின் அடிப்படையில் சிங்கள-தமிழ் உறவைப் பார்த்தால், “வருங்காலத்தில்” இராணுவமே பலமிக்க “சமூக அமைப்பு”, மிகப்பெரும் வேலைவாய்ப்பு நிறுவனம். சண்டை முடிந்ததும் ராஜபக்சே சகோதரர்கள் விலகும் நிலை ஏற்படலாம்-ஜே.வி.பி கூட, இராணுவத்தின் பொம்மையாகத்தான் செயல்படும். இத்தகைய சூழ்நிலையில், “இரு சமூகங்களின்” சமூக உளவியலே, “இந்திய எதிர்ப்புணர்வின்” தன்மையை தீர்மானிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    Reply
  • london boy
    london boy

    /தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதை நிறுத்து! இந்திய அரசே! உன் கைகளிலும் இரத்தம்!! மகிந்த அரசுக்கு ஒரு ரூபாயையோ ஒரு குண்டையோ வழங்காதே!!! போன்ற கோசங்கள் ஓங்கி ஒலிக்கப்பட்டது./

    புலிகள் செய்யும் கொலைகளை சேர்த்து கண்டிக்க உங்களுக்கு (CWI) ஏன் மனம் வருகுதில்லை. see this http://thesamnet.co.uk/?p=9877

    Reply
  • kula
    kula

    தமிழர்கள் இந்தியாவை உதவி செய்யும் படி கேட்;கும் போது நீங்கள் இந்தியாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்து தமிழர்க்கு மேலும் பிரச்சினைகள் உண்டுபண்ணுகிறீர்கள் எதுக்கும் ஒரு மாதம் பார்ப்போம் உங்கள் பிரச்சாரம் எப்படி பிரச்சார வெற்றி பெறுகிறது என்று.

    Reply
  • kuna
    kuna

    இலங்கையில் இந்தியாவின் இராணுவ தலையீடு குறித்து புலிகள் தமது ஆதரவு இணையத்தளங்கள் மூலம் தினமும் செய்திகள் கசியவிடும் அதேவேளை புலிகளின் அரசியல் தலைவர் இந்தியாவின் உண்மையான நண்பர்கள் தாங்கள்தான் என்றும் எனவே இந்தியா தனக்கு ஆதரவாக நடந்து கொள்ளவேண்டும் என்று ஒப்பாரிவைக்கிறார். ஏன் இந்த இரட்டை வேடம் என்று கேட்டால் இது தலைவரின் இராஜதந்திரம் என்கிறனர் அவர்களின் புலம்பெயர்வாரிசுகள். இது என்ன இராஜதந்திரம் என்று எனக்கு புரியவில்லை?ஆனால் தாமதமானாலும் தவறாமல் இந்தியஅரசுக்கு எதிராக போராடும் சோசலிசக்கட்சியினர் பாராட்டப்பட வேண்டியவர்களே. இந்தியாவின் பங்கு குறித்து பல வருடங்களுக்கு முன்னரே புலிகளுக்கும் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் தெரியும் என தேசம் ஆசிரியர் ஜெயபாலன் எழுதுகிறார். அப்படியாயின் எதையும் எதிர்வு கூறும் திறன் கொண்ட மாபெரும் மார்க்சிய போராளிகளான சோசலிசக்கட்சியினருக்கு இதை அறிந்து கொள்ளவும் இதற்காக போராடவும் ஏன் இத்தனை தாமதம் ஏற்பட்டது? மேலும் சோசலிசக்கட்சியின் இலங்கைதலைவர் இந்தியா சென்று இந்திய மண்ணில் நின்று கொண்டு இந்தியஅரசுதான் இந்த யுத்தத்தை செய்கிறது என்று சிம்ம கர்ஜனை செய்கிறார்.அதேபோல் லண்டன் கம்யுனிச தோழர் சேனன் அவர்களும் இந்தியா சென்று இந்தியமண்ணில் நின்று கொண்டு இந்திய அரசுக்கு எதிராக தமது எதிர்ப்பை பதிவு செய்து விட்டு வந்திருக்கிறார். இவர்களுக்கு விசாவும் வழங்கி போராட அனுமதியும் வழங்கி இந்திய அரசு செயற்படுகிறது என்றால் என்ன அர்த்தம்? அவர்களின் போராட்டத்தினால் தனக்கு பாதிப்பில்லை என்று இந்திஅரசு நினைக்கிறதா? அல்லது இவர்களின் போராட்டம் தனக்கு ஆதரவானது என்று கருதுகிறதா?அல்லது இவர்களின் மாபெரும் பலத்திற்கு முன்னால் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று நினைக்கிறதா?

    Reply
  • chandran.raja
    chandran.raja

    புலிகளின் போராட்டத்திற்கு(?)அரசியல் தன்மையுள்ளது புலிகளை பாதுகாக்க வேண்டுமென்று முடிவுக்கு வந்த பிறகு சீ.டபிள்யூ.ஐ-யில் வேறு என்ன கோஷத்தை எதிர் பார்கமுடியும்? london boy? இலங்கைமக்களை வர்கரீதியாக அணிதிரட்டுவதற்கும் இனவிடுதலை போராட்டத்தை பயங்கரவாதமாக்கிய புலிகளை தோற்கடிப்பதின் மூலம் தான் வர்கபோராட்டத்தை வளர்த்தெடுக்க முடியும் என்பதை வேண்டுமென்று செய்கிறதா? விளங்கிச் செய்கிறதா? என்பதையே கேள்விக்குள்ளாக்க வேண்டும்.

    Reply
  • padamman
    padamman

    இந்திய அரசே உன்கைகளிலும் இரத்தம் புலிகளே உன்கையில் சிதள்

    Reply
  • Gajan
    Gajan

    “டெலோ” உறுப்பினர்கள் கொல்லப்பட்டபோது “சோடா உடைத்து கொடுத்து” மக்கள் ஆதரவு தந்தது “உண்மையென்றால்” அதற்கு “முன்” அதைவிட கொடுமையாக “எந்த இந்தியனும்” இலங்கைத் தமிழன் மீது கைவைத்தது கிடையாது.//
    குண்டுமணி உங்களின் இக்கருத்து மிகமிகச் சரியானது.
    புலிகளைப் பொறுத்தவரை தன்னலம் சார்ந்த எந்த தேவைக்குமாக அவ்வப்போது யார் தேவையோ பாவிப்பதும் பின் கை கழுவிவிடுவதும் கைவந்த கலை.

    Reply
  • indiani
    indiani

    இந்திய கைகளில் இரத்தம் என்னும் போது ஏன் நீங்கள் புலிகளின் கைகளில் பாசிசக் கொலைகளையோ புலிகளின் கைகளில் உள்ள சகோரங்களின் இரத்தங்களைப்பற்றி என் இன்னும் கண்டிக்கவில்லை எப்போத கண்டிப்பீர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

    யுத்தம் இரு பிரிவினர்க்கிடையே நடக்கிறது ஆனால் நீங்கள் ஒருபக்கத்தை மட்டுமே கண்டிக்கிறீர்கள் அப்படியாயின் மறுபக்கத்pற்கு நீங்கள் ஆதரவா அல்லது என்ன? எங்கே வெளியிட்டுள்ளீர்கள் cwi பதில் தருமா?

    Reply
  • MUKILVANNAN
    MUKILVANNAN

    MR KUNA INDIA IS OUR FATHER NATION AND WE MAKE HOLIDAYS IN INDIA.BUT WHAT THEIR FORCES HAVE BEEN DOING IS NOT IN A CIVILIZED WAY.WE COUILDNT COMPLAIN TO THE WORLD,BECAUSE INDIA SUCH A POWERFUL NATION.AND REGIONAL POWER.

    INDIA HAS HELPED TIBETH,BANGLADESH,BURMA AND SO ON UNFORTUNETLY SRILANKA LOCATION THREAT TO INDIA,THEY DONT WANT TO SEE ANOTHER POWERFUL ORGANAISATION IN THE REGION THIS IS THE REASON INDIA HAS BEEN HELPING SRILANKAN GOVERMENT.

    THEY NOT EVEN END THE WAR IN SRILANKA BUT THEY DONT WANT TAMIL TIGERS CONTINUE THE WAR. ITS GAMES INDIA PLAYING WE UNFORTUNETLY HAVING A BAD LUCK,

    Reply
  • shan
    shan

    Protesting Sri Lankan Tamils are being blamed for beheading the statue of Jawaharlal Nehru outside India House in London this morning. The remains of the statue have been bound in a white sheet and are visible for all to see.

    Reply
  • aasa
    aasa

    The Army has NOT launched the hostage rescue mission as some sources have indicated. It is clearing the periphery of the NFZ but have not yet ventured into the NFZ with the purpose of rescuing civilians. Instead, the Army has adopted a ‘wait and see’ approach as pressure mounts on both sides, particularly the LTTE.

    The United States and a few other countries in the International Community have put pressure on the government to call for a 7-day Cease-Fire, which the government has refused. The government has told the United States that if it gives its assurance that the civilians will be removed by the LTTE due to diplomatic pressure, the Army will declare a temporary cease-fire for 48 hours.

    The United States, sources indicated has got in touch with a third party to put pressure on the LTTE. India has also made some statements in this connection but the exact weighting on Indian statements is uncertain.

    Government is willing to listen to the United States given its unbridled support for anti-terror offensives. Unconfirmed sources indicated that an official written guarantee has also been sought from the USA for a temporary halt to the operations.

    The Sri Lanka Army confirmed that it will bow its head to international norms, particularly given the nature of its humanitarian objective, but will not surrender its aim of completely annihilating the remaining LTTE leadership at any cost. They are also willing to allow diplomacy one last chance provided that the LTTE releases the civilians. If not, the Army will take matters to its own hand.

    Other unconfirmed sources indicated that the Tiger leadership was negotiating with Norway and a few other EU countries to exchange the lives of the civilians for its leadership. The Tamil Tiger leadership, these sources claimed, was attempting to flee its inevitable end at the hands of the Arnmy by bargaining with the lives of the civilians.

    Reply