ஈழத் தமிழினத்தின் இழவு நிலை கண்டு உலகத் தமிழினம் கையறு நிலையில் பரிதவித்தவேளை இருளினைத் துடைத்தெழுந்த உதயதாரகை போல உங்களின் தனித்தமிழீழ அறிவிப்பு வெளிவந்தது எம்மையெல்லாம் மெய்சிலிர்க்க வைத்தது என்று ஜெலலிதாவுக்கு அமெரிக்காவில் இருந்து வடகரலைனா மக்களின் அமைதிகாண் அமைப்பு தெரிவித்துள்ளது.
பார்த்திபன்
இப்போ கோமாளித் தனமாக வாழ்த்துவோர், இந்திய தேர்தல் முடிந்த பின் எப்படியெல்லாம் திட்டுவார்கள் என்பதை நினைக்க இப்பவே கண்ணைக் கட்டுது. தேர்தலின் பின் எப்படித் திட்டுவது என்று தெரியாதவர்கள் 1997 இல் அன்டன் பாலசிங்கம் இலண்டனில் நடந்த மாவீரர் தினக் கொண்டாத்தில் உதிர்த்த வார்த்தைகளை பார்த்து மனப்பாடம் பண்ணித் திட்டலாம்.
msri
கோவில்களில் பஞ்சாலாத்தி தீபத்தை கையில எடுக்கமுன்பே சில பக்தர்கள் அரோகரா சொல்லி> எல்லோரையும் அரோகரா சொல்ல வைத்துவிடுவார்கள்! சிலருக்கு விபூதியைக் கையில் கொடுத்தாலே>உரு ஆடத் தொடங்கி விடுவார்கள்! செல்வியின் “தனி ஈழத்திற்கும்” புலம் பெயர் நாடுகளில் இதுதான் நடைபெறுகின்றது!
BC
//ஈழத் தமிழினத்தின் இழவு நிலை கண்டு உலகத் தமிழினம் கையறு நிலையில் பரிதவித்தவேளை இருளினைத் துடைத்தெழுந்த உதயதாரகை போல உங்களின் தனித்தமிழீழ அறிவிப்பு வெளிவந்தது எம்மையெல்லாம் மெய்சிலிர்க்க வைத்தது.//
அப்போ பனை மரத்தில் வெளவாலா புலிகளுக்கே சவாலா!? என்று கோசம் போட்டது எல்லாம் சும்மாதான்.
DEMOCRACY
சும்மா பாட்டா செருப்புடன் நடந்துக் கொண்டிருந்த பிரபாகரனை பல்லக்கில் ஏற்றி,”சூரியதேவனாக்கி”,”ஒரு நல்ல அமெளண்ட்” பார்த்த “ஜால்ரா கூட்டம்(கிருமிகள்)”,தற்போது வேலை வாய்ப்பு(அனெம்ப்ளாய்ட்)இழந்துக் கொண்டிருக்கும் வேளையில்,அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குகிறார் செல்வி ஜெயலலைதா!.கலைஞர் கத்துவதை விட “ஒரு அடி” முன்னே சென்று கத்த வேண்டும் என்பதால் இதை செய்கிறார் என்று புரிந்துக் கொண்டாலும்,இதை செய்கின்ற வேளையில்,”புறங்கையில் படுகிற தேனை(புகழ்ச்சி)” நக்குவதாலேயே போதை உண்டாகி அதற்கு அடிமையாகும் பலவீனம் இருக்குமென்றால்- அதற்கு ஒன்றும் செய்ய இயலாது.
DEMOCRACY
US should think of ‘gunboat diplomacy’ [TamilNet, Thursday, 07 May 2009, 03:31 GMT]
A time bomb is ticking not only for the entire region but also for the international credibility and future interests of the US in the region unless the US exercises its might with the Colombo regime.Meanwhile, speaking from Vanni, Mr. Kanagalingam, the president of the Vanni People Welfare Organization (VPWO) said on Wednesday that the people would be the happiest if the US intervenes.
“The US is the foremost power today. In the past it had made some basic moves resulting in the present situation. Therefore it has an important role to play. It can now play a positive role.
– ஜெயலலிதா போன்றவர்கள் சொல்வது செயலில் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தும் நீங்கள், ”எழுதுவது சரியான மனோநிலையிலிருந்துதானே செய்கிறீர்கள்?”. ராஜீவ் காந்தி கொலையை “அமெரிக்காதான் செய்ய சொன்னது” என்று ஆதாரபூர்வமாக வெளியிடப் போகிறீர்களா? (The US is the foremost power today. In the past it had made some basic moves resulting in the present situation). அதனடிப்படையில், ”கலியுக” நடைமுறைகளுக்கு அமைய, கலியுக தெய்வமாக(விருமாண்டி) அமெரிக்காவை, தற்போதைய கிரிமி(னல்)உலக ஒழுங்கு முறையை, உங்கள் சார்பாக, ”பாசிடிவ் ரோலாக” நடைமுறை படுத்த சொல்கிறீர்களா?. இந்தியாவைப் பற்றி ஐரோப்பா விட்ட ஆராய்ச்சிகளை அமெரிக்கா செய்து முடித்திருப்பது உண்மைதான், ஆனால், அந்த ஆவணங்களை படித்துவிட்டு……??