ஈழ விடுதலைப் போராட்டம் மீண்டும் முன்னெடுக்கப் படுவதற்கும், வெற்றி பெறுவதற்கும் அவர்கள் விரும்பும் அரசியல் தீர்வு உருவாவதற்கு முழுமையாக உதவுவோம் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வெளியிட்ட ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத் தமிழர் பிரகடனம் கூறுகிறது.
சென்னை அமைந்தகரை புல்லாரெட்டி நிழற்சாலையில், நடந்த மாநாட்டில், உலகத் தமிழர் பிரகடனத்தை மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலர் வைகோ படித்து வெளியிட்டார்.
உலகத் தமிழர் பிரகடனம் வருமாறு
1. ஈழத் தமிழ் மக்களின் மரபு வழி தாயகத்தில் அவர்களுக்கு முழுமையான மனித, ஜனநாயக உரிமைகள் வழங்கிடவும், அதற்கேற்ற அரசியல் அமைப்பிற்கு உத்தரவாதம் தரக்கூடிய அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்காக உலக மக்களின், அரசுகளின் ஆதரவைத் திரட்டிடவும், ஈழத் தமிழ் மக்கள் ஒப்புக்கொள்ளக் கூடியத் தீர்வு ஒன்றை அவர்களின் பிரச்சனையைத் தீர்க்கும் ஒரே வழி என்பதிலும் நாங்கள் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.
2. தங்கள் தாயகத்திலும், உலக நாடுகளிலும் புலம் பெயர்ந்திருக்கக்கூடிய ஈழத் தமிழர்கள் அனைவரும் அவரவர்களின் ஊர்களிலும், வீடுகளிலும் மீண்டும் குடியேறவும், அமைதியான, இயல்பான, சுதந்திரமான வாழ்க்கையை நடத்தவும் துணை நிற்க நாங்கள் உறுதி பூணுகிறோம்.
3. தமிழர் தாயக மண்ணில் அத்துமீறி உருவாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்களையும், சிங்கள இராணுவ முகாம்களையும் மற்றும் இராணுவ ரீதியான அமைப்புகளையும் வெளியேற்ற வேண்டும் என ஐ.நா.வை வற்புறுத்த நாங்கள் உறுதி பூணுகிறோம்.
4. இலங்கையில் மனித நேய உணர்வை மீறித் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளையும், கொலைகளையும் செய்த சிங்கள இராணுவ அதிகாரிகளும், அவர்களை ஏவிவிட்ட சிங்கள அரசியல் வாதிகளும் சர்வதேச நீதிமன்றத்தில் போர்க் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவதற்கு உரிய நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ள நாங்கள் உறுதி பூணுகிறோம்.
5. உலகில் உள்ள மற்ற தேசிய இன மக்களைப் போல முழுமையான, இறைமை உள்ள மக்களாக வாழும் உரிமையில் தங்களின் எதிர்காலத்தை தாங்களே முடிவு செய்துகொள்ளும் உரிமையும் ஈழத் தமிழர்களுக்கு இயற்கையாக உண்டு என்பதையும் அந்த வாழ்வுரிமையை அவர்கள் நிலைநிறுத்திக்கொள்ள அவர்களுக்கு தோள் கொடுத்து துணை நிற்க உலகத் தமிழர்களாகிய நாங்கள் உறுதி பூணுகிறோம்.
6. அளப்பரிய தியாங்களைச் செய்த ஈழத் தமிழ் மக்களும், அவர்களுக்காக இறுதிவரை போராடிய போராளிகளும், வீறுகொண்டு நடத்திய விடுதலைப் போராட்டம் பல நாடுகளின் கூட்டுச் சதியின் விளைவாக பின்னடைவைச் சந்திக்க நேர்ந்திருப்பது தற்காலிகமானது. மீண்டும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதற்கும், வெற்றி பெறுவதற்கும் அந்த மக்கள் விரும்பி ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வு உருவாவதற்கும் நாங்கள் முழுமையாக உதவுவோம். அதற்காக எங்களை முற்றிலுமாக ஒப்படைத்துக்கொண்டு எத்தகைய தியாகத்திற்கும் தயாராக இருப்போம் என உலகளாவிய தமிழர்களாகிய நாங்கள் உறுதி பூணுகிறோம்.
பிரகடனம் படித்து முடிக்கப்பட்ட பிறகு ஈழத் தமிழர்களுக்கு உதவ சர்வபறி தியாகத்திற்கும் தயார் என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது.
ஏராளமான கருஞ்சட்டை தரித்த இளைஞர்கள் தீப்பந்தம் ஏந்தி அந்த உறுதிமொழியை ஏற்றனர். அவர்கள் அனைவருடைய சட்டையிலும் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் படம் அச்சிடப்பட்டிருந்தது. பின்புறத்தில் தமிழீழத்தின் வரைபடம் அச்சிடப்பட்டிருந்தது.
இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க, புலம்பெயர் தமிழர்கள் ஒன்று திரண்டு, தமிழீழம் மலரச் செய்வார்கள்: வைகோ
முன்பு யூதர்கள் கொல்லப்பட்டபோது உலகெங்கும் உள்ள யூதர்கள் ஒன்று திரண்டு போராடி வென்றனர். அதைப்போலவே இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க உலகெங்கும் உள்ள தமிழர்கள் ஒன்று திரண்டு, தமிழ் ஈழத்தை மலரச் செய்வார்கள்.இவ்வாறு நேற்று சென்னையில் நடைபெற்ற ஈழத் தமிழர் பிரகடனம் வெளியிடும் பொதுக்கூட்டத்தில் வைகோ பேசினார். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான பிரகடனம் வெளியிடும் பொதுக்கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
அக்கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது:
விடுதலைப் புலிகளை ஒழித்து விட்டோம் என இலங்கை அரசு கூறுகிறது. ஆனால் அதன் பிறகும் 3 லட்சம் தமிழர்களை முள்வேலி முகாம்களில் அடைத்து வைத்து வதைப்பது ஏன்? முகாம்களில் உள்ள தமிழ் இளைஞர்கள் கடத்தப்படுகிறார்கள். 15 வயதைக் கடந்த தமிழ் ஆண்கள் உயிரோடு இருக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்ப் பெண்களின் கற்பு சூறையாடப்படுகிறது.
இந்த அவலங்களை காண மனித உரிமை ஆர்வலர்களால் அங்கு செல்ல முடியவில்லை. ஆனால் முதல்வர் கருணாநிதி இலங்கையில் சுமுகத் தீர்வு ஏற்பட்டுவிட்டதாக கூறுகிறார். இப்போது அங்கு சுமுக நிலை நிலவுகிறதா என்பதை அவர் தனது மனசாட்சிப்படி கூறட்டும்.
1985-ம் ஆண்டு டெசோ மாநாட்டில் பேசிய கருணாநிதி, தமிழ் ஈழம்தான் இறுதித் தீர்வு; தமிழ் ஈழத்தை ஆதரிப்பதற்காக எந்த அடக்குமுறையை ஏவிவிட்டாலும் தாங்கிக் கொள்ளத் தயார் என்றார். அன்று கருணாநிதி கூறியதைத்தான் இன்று நாங்கள் கூறுகிறோம். ஆனால் எங்கள் மீது அவர் அடக்குமுறையை ஏவுகிறார் என்றார் ராமதாஸ்.
கூட்டத்துக்கு தலைமை வகித்த, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் பேசியதாவது:
தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து பேசுவது குற்றமாகாது; அந்த இயக்கத்துக்கு ஆயுத உதவி உள்ளிட்ட உதவிகளை செய்தால் மட்டுமே குற்றம் என உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது. அத்தீர்ப்பின் படியே, பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்த நாங்கள் விடுதலை செய்யப்பட்டோம்.
எனவே விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசுவதில் தவறில்லை. அவ்வாறு பேசக் கூடாது என தமிழக அரசு கூறுவது அடக்குமுறை நடவடிக்கை ஆகும் என்றார்.
கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் த. ஸ்டாலின் குணசேகரன், புதிய பார்வை ஆசிரியர் எம். நடராஜன், மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் நிர்வாகி ஹென்றி திபேன் உள்ளிட்டோர் பேசினர். கூட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, இலங்கைத் தமிழ் எம்.பி. சிவாஜி லிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விதிமுறைகளை மீறி பொதுக்கூட்டம் நடத்தியதாக பழ.நெடுமாறன் மீது வழக்கு
தமிழக அரசின் உத்தரவுகளை மீறி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நேற்று சென்னையில் பொதுக்கூட்டம் நடத்தியமைக்காக இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அமைந்தகரை புல்லா ரெட்டி அவென்யூவில் நேற்று 20ஆம் தேதி வியாழக்கிழமை பொதுக்கூட்டம் நடந்தது. இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் விதிமுறைகளை மீறி பொதுக்கூட்டம் நடத்தியதாக பழ.நெடுமாறன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பொதுக்கூட்டத்தில் அரசு உத்தரவுகளை மீறி அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கும் மேலாக கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட இயக்கத்தலைவர் பிரபாகரன் படம் பொதுக்கூட்டம் மேடையில் வைக்கப்பட்டிருந்தது. இது போன்ற காரணங்களுக்காக 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
பார்த்திபன்
அப்ப இப்ப உலகம் சுருங்கி சென்னைக்குள் அடங்கி விட்டதா?? சென்னையில் உள்ள புலிப்பினாமி அரசியல்க் கோமாளிகள் வாங்கும் கப்பத்திற்காக எடுக்கும் தீர்மானங்கள் எப்படி உலகத்தமிழர்களின் தீர்மானங்களாகும்?? இவங்க கோமாளித் தனங்களுக்கு ஒரு அளவேயில்லையா??
abeywickrema
China is a major stakeholder in the country’s development process that has funded almost all sectors including power, highways, shipping and railways, said Senior Presidential Advisor Basil Rajapaksa MP at the traditional Chinese roofing ceremony at the construction site of the coal fired power plant in Norochcholai on Thursday.
Sorry for India
நண்பன்
தமிழ்நாட்டில் ஏகப்பட்ட பிரச்சனை. அதை பேசினால் துட்டும் வராது. பதவியும் வராது. சும்மாவே இவர்களுக்கு பெரிதாக ஓட்டு வங்கியில்லை. ஒட்டு வங்கிதான்.
இப்படி ஏதாவது பேசினால் உலக தமிழ் இளிச்சவாயர்களை வறுகி வாழவும் முடியும். சொத்து சேர்க்கவும் முடியும். என்னவோ உண்மைகளை நம்புவதை விட , பொய்களை உணர்ச்சிகரமாக சொன்னாலே தமிழர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.
ஒரு சிறீ எழுத்தை தார் பூசி அழிக்கப் போய் , இன்று யாழ்பாணத்தில் இருந்து கொழும்பு வாறதுக்கு பாஸ் வாங்கி வர வேண்டிய நிலைக்கு சுதந்திரம் பெற்றிருக்கிறார்கள். இலங்கையில் எங்கும் வாழ முடிந்த தமிழர் , இன்று போலீஸ் பதிவில்லாமல் ஒரு நாள் கூட வந்து தங்க முடியாமல் ஆகி விட்டது.
இலங்கை தமிழரது அழிவு , புலிகளிலிருந்து இந்திய தமிழர் கைகளுக்கு மாறியிருக்கிறது.
// 1985-ம் ஆண்டு டெசோ மாநாட்டில் பேசிய கருணாநிதி, தமிழ் ஈழம்தான் இறுதித் தீர்வு; தமிழ் ஈழத்தை ஆதரிப்பதற்காக எந்த அடக்குமுறையை ஏவிவிட்டாலும் தாங்கிக் கொள்ளத் தயார் என்றார். அன்று கருணாநிதி கூறியதைத்தான் இன்று நாங்கள் கூறுகிறோம். ஆனால் எங்கள் மீது அவர் அடக்குமுறையை ஏவுகிறார் என்றார் ராமதாஸ்.//
அன்று திமுகவில் இருந்தீங்க. இப்ப அதிமுகவுக்கு மாறினீங்க. உங்களை நம்பித்தான் பிரபாகரன் முள்ளிவாய்காலில் கோவணத்தோடு ஆண்டியானார். இனியும் உங்களை நம்பினால் உள்ள சனமும் அதே நிலையை அடையும்.
//விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசுவதில் தவறில்லை. அவ்வாறு பேசக் கூடாது என தமிழக அரசு கூறுவது அடக்குமுறை நடவடிக்கை ஆகும் //
புலிகளே அழிந்து , புலத்தில் உள்ள புலிகள் ஆளை ஆள் காட்டிக் கொடுத்து துரோகிகளாகும் போது, பல துண்டுகளாக பதவி சண்டையில் பிரிந்து உள்ள நிலையில் , இவர்கள் எந்தப் புலியைப் பற்றி இவர்கள் பேசுகிறார்கள்?
//அனைவருடைய சட்டையிலும் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் படம் அச்சிடப்பட்டிருந்தது. பின்புறத்தில் தமிழீழத்தின் வரைபடம் அச்சிடப்பட்டிருந்தது.//
கீரோக்களை வைத்து காசு பார்க்கும் தயாரிப்பாளர்கள் போல், செத்த எம்ஜீஆரை வைத்தே அரசியல் நடத்தும் புண்ணாக்குகள் தமிழக அரசியல்வாதிகள். அதே பாணியில் தமிழரின் அழிவுக்கு வித்திட்ட …பிரபாகரனை படம் காட்டியே பிளைப்பு நடத்தும் …கூட்டம் இவர்கள். வேறு என்ன சொல்ல. வன்னி மக்களுக்கு நெடுமாறன் கும்பல் சேர்த்த பொருட்களையே ஏப்பம் விட்ட அதே கூட்டம் , ஈழ போராட்டத்தை முன்னெடுக்கிறார்களாம். இதுதான் இக்காலத்து கலிகால ஜோக். வாழ்க உங்கள் வறுகல் பற்று. வளர்க உங்கள் சொத்து.
abeywickrema
India drawing red herrings to cover their involvement in the drama staged here.
Good work, actions must be taken against ban organisations even when LTTE and India has connections deeply in support of the banned organisation.
DEMOCRACY
/abeywickrema on August 22, 2009 4:12 am
China is a major stakeholder in the country’s development process that has funded almost all sectors including power, highways, shipping and railways, said Senior Presidential Advisor Basil Rajapaksa MP at the traditional Chinese roofing ceremony at the construction site of the coal fired power plant in Norochcholai on Thursday.
Sorry for India
/— திரு.அபிவிக்கரமா!, நீங்களும் புலன்பெயர் இலங்கைத் தமிழர் போல், சென்னை பாஷையில் கூற வேண்டுமென்றால், “போங்கு பிடித்தவராக” இருக்கிறீர்கள்!. இந்தியாவை மீறி இலங்கைக்குள் “சீனா(வால்)” ஆட்டமுடியாது!, அப்படி “ரிஸ்க்” எடுக்கவேண்டிய அவசியமுமில்லை. “மகிந்த குடும்பமும்”, கருணாவும் “NOT BAD”, அபடியில்லாமல், உருப்படாத, லார்ட் லபகூதாஸ் ஐடியாக்களை கொடுத்த புலிகளின்? எச்சசொச்சங்களுடன் சேர்ந்து (புலிகளின் உயிரோடிருக்கும் தலைவர்கள் அல்ல)அவர்களை போட்டுத்தள்ளிவிட்டு, வாலாட்டினால் போவது வால் மட்டுமல்ல தலையும்தான்!.