இலங்கையின் அபிவிருத்தியில் சீனா பிரதான பங்குதாரர் – பசில் ராஜபக்ஷ கூறுகிறார்

basil-raja.jpgஇலங்கை யின் அபிவிருத்தியில் சீனா பிரதான பங்குதாரர் என்று வர்ணித்திருக்கும் கொழும்பு, பெய்ஜிங் நிதி ஆதரவளிக்க முன்வந்திருப்பதாகவும் முக்கியமான தருணங்களில் இலங்கைக்கு ஆதரவாக இருந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

“அண்மைய காலங்களில் இலங்கை மீது சில சர்வதேச அழுத்தங்கள் ஏற்பட்ட நிலையில் சீனா எமக்கு ஆதரவு வழங்கியது’ என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரான பசில் ராஜபக்ஷ எம்.பி. கூறியுள்ளார்.

வட மேல் மாகாணத்தில் சீன உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட அனல் மின் உலையின் முதற்கட்ட நிறைவை முன்னிட்டு கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற வைபவத்தில் கலந்தகொண்டு உரையாற்றுகையிலேயே பசில் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் அபிவிருத்தியில் பிரதான பங்குதாரராக சீனா இருப்பதாக அவர் கூறியுள்ளார். “முக்கியமான தருணங்களில் இலங்கைக்குச் சீனா உதவமுன்வந்துள்ளது என்று குறிப்பிட்ட பசில் ராஜபக்ஷ, அனல் மின் உலைத்திட்டத்திற்காக 455 மில்லியன் டொலர் நிதியுதவி அளித்ததற்காக பெய்ஜிங்கிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலையில் நிர்மாணிக்கப்படும் இந்த அனல் மின் உலையின் முதல் கட்டப்பணி பூர்த்தியடைந்திருப்பதுடன் அடுத்த வருடம் முதல் இயங்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீதிகள், புகையிரதப் பாதைகள், துறைமுகங்கள் மற்றும் ஏனைய வசதிகளை அபிவிருத்தி செய்ய சீன அரசு நிதி உதவி அளிதிருப்பதாகவும் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

நுரைச்சோலை அனல் மின் உலை முதற்கட்டப் பணிபூர்த்தியடைந்துள்ளநிலையில் இதன் மூலம் நாட்டிற்குத் தேவையான மின்சாரத்தின் 25 சதவீதம் பூர்த்தி செய்யப்படுமென்றும் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

இது இவ்வாறிருக்க சீனாவிலிருந்து புத்தர் சிலையொன்று கொண்டு வரப்பட்டு இந்த அனல் மின் உலை இடத்தில் வைக்கப்படவிருப்பதாக பி.ரி.ஐ. செய்திச் சேவை நேற்று தெரிவித்தது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • Smart Thamilan
    Smart Thamilan

    வீ வோன்ட் தமிழ் ஈழம் அவர் லீடெர் பிரபாகரன் என்று உலகத்தின் மூலை எல்லாம் அதிர்ந்தது!!!
    ஒரு இடத்திலாவது வி வோன்ட் டிவேலோப்மேன்ட் அவர் லீடெர் ராஜபக்சே என்று ஒருத்தர் கூட இன்னமும் சொல்லவே இல்லையே?????

    Reply
  • மாயா
    மாயா

    சாகடிக்கிறதில இருக்கிற சந்தோசம் , வாழ வைக்கிறதில நம்ம இனத்துக்கு வராது. ஒன்று சாகடிக்க வேணும் அல்லது சாக வேணும் என்றதுதான் தமிழனது தாரக மந்திரமே தவிர , வாழ வேண்டுமென்பதல்ல. என்றைக்கு அது வருதோ, அன்றைக்குதான் விடியலே தொடரும். அதுவரை ஒப்பாரிதான். இல்லையென்றால் கூலிக்கு மாரடிப்புதான்.

    Reply