இத்தாலியின் லெவன்ட் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கு கிடைத்த விருதுடன் நடிகை மாலினி பொன்சேகா நேற்று இலங்கை வந்துசேர்ந்தார். அவரை வரவேற்பதற்காக சக நடிக, நடிகையர் பலரும் திரையுலக பிரமுகர்களும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கூடியிருந்தனர்.
திரைப்பட இயக்குநர் பிரசன்ன விதான கேயின் ‘ஆகாசகுசும்’ (ஆகாயப் பூக்கள்) திரைப்படத்தில் நடித்தமைக் காகவே மாலினி பொன்சேகா வுக்கு இந்த விருது கிடைத்தது. சர்வதேச திரைப்பட விழாவில் இதே படத்துக்காக சிறந்த நடிகை விருதை மாலினி பெறுவது இது இரண்டாவது தடவையாகும்.