ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எதிரணிகளின் பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேர்தல் விஞ்ஞாபனமான பொது வேலைத்திட்டம் எதிர்வரும் 7 ஆம் திகதி வியாழக்கிழமை வெளியிடப்படவுள்ளது. இந்த பொது வேலைத்திட்டமானது ஐக்கிய தேசிய முன்னணி, ஜே.வி.பி. இரு கட்சிகளும் இணைத்துத் தயாரிக்கப்பட்டதாகவே அமைந்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகா ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அதன் பின்னர் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியோ, ஜே.வி.பி.யோ யார் அதிகாரத்துக்கு வந்தாலும் இந்த பொது வேலைத்திட்டத்தில் உடன்பாடு காணப்பட்டுள்ள அம்சங்களின் அடிப்படையிலேயே ஆட்சி நடத்தப்பட வேண்டுமென்பதில் இரண்டு கட்சிகளும் உறுதிபூண்டிருக்கின்றன.
பொது வேலைத்திட்டத்தில் முக்கியமான பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் அவற்றை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் ஜே.வி.பி.பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
quadir
nan galle i cherdhavan,
enakku theriyum sarath fonseka enpavar eppadippattavar endru
avar ambalangoda ennum idaththil pirandhavar(thuveshaththukku peyar pona idam)
sarath (p)fonseka aatchikku wandhal tamil,muslim makkalin nilai harohara-(innalillahi vainna ilaihi rajiyoon)
thayavu shaidhu tamil muslim makkalidam vendikkolvadu alam arindu kali vidavum
(unp ilainjar munnani amaipalarhalil oruvan)