ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சனத் ஜயசூரிய மாத்தறையில் பிரசித்தி பெற்ற மகாபோதி விகாரையில் இன்று முற்பகல் மதவழிபாடுகளில் ஈடுபட்டார்.
அங்கு பெருந்திரளான மக்கள் அணிதிரண்டு அவருக்கு பெரு வரவேற்பளித்தனர். அதன் பின்னர் அங்கு கருத்து தெரிவித்த சனத் ஜயசூரிய, மாத்தறை மக்களுக்கு சேவையாற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வேண்டுகோளின் பேரில் அரசியலில் காலடி எடுத்து வைக்கிறேன். அரசியலில் பிரவேசித்தலும் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தமாட்டேன். மாத்தறை மக்களின் நன்மைக்காக பாடுபடுவேன். நாட்டுக்காக விளையாடுவதிலும் நாட்டு மக்களுக்கு சேவை செய்வதிலும் மகிழ்வடைகிறேன் என்று கூறினார்.