24வது வயதில் நாமல்

namal.jpgஅம்பாந் தோட்டை மாவட்டத்தில் ஐ. ம. சு. மு. சார்பில் போட்டியிட்டு அதிகூடிய வாக்குகளைப் பெற்ற ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ நேற்று 24வது வயதில் காலடி பதித்துள்ளார். நாமல் ராஜபக்ஷ 1,47,568 வாக்குகளைப் பெறும் போது அவருக்கு வயது 23 ஆகும். நேற்று அவர் தனது 24வது பிறந்த தினத்தைக் கொண்டாடினார்.

தந்தையின் வழியில் அரசியலுக்குள் கால்பதித்துள்ள இவர், அவரைப் போலவே 24வது வயதில் பாராளுமன்றத்திற்குள் பிரவேசிக்கிறார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 Comments

  • NANTHA
    NANTHA

    பெலியத்த தொகுதியில் 1970 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் வந்த மகிந்தவின் வருகை இப்போதும் நினைவில் உண்டு.

    ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபக அங்கத்தவரான டீ. ஏ. ராஜபக்ஷவின் மகன் இப்போது ஜனாதிபதி. அதுவும் தமிழில் ஐ நா வில் பேசிய ஜனாதிபதி. டெலி ப்ரோம்ட்டர் இல்லாமல் நாமல் ராஜபக்ஷவும் தமிழில் பேசுவார் என்று எதிர் பார்க்கலாம்!

    Reply
  • chandran.raja
    chandran.raja

    நடந்து முடிந்தவை எல்லாம் நல்லதாகவே படுகிறது. அப்பா செய்கிற மாதிரி மகன் செய்ய முடியுமா? அம்மா செய்கிற மாதிரி பிள்ளைகள் செய்ய முடியுமா? ரஷ்சியா சீனா செய்தது போல் நாமும் செய்ய முடியுமா?. ஒவ்வொரு செய்வினைக்கு அருகே ஊட்டம் கொடுகிற நிகழ்வை ஏற்படுத்துகிற சக்திகள் இருந்து கொண்டே இருக்கும்.

    இதுவெல்லாம் காலம் நேரம் தேவையை ஒட்டி நிகழுவதே!. இதையே நாம் இயங்கியல் என்கிறோம். இயற்கைக்கு எதிராக போராட முடிந்தது எல்லாம் வாழ்ந்தது-வாழ்ந்து முடிந்தது என்றது டாவினிசம்.
    மக்களின் தேவை ஒட்டி அமையாத அரசியலும் போராட்டமும் தனிபர்களும் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போவது தவிர்க்க முடியாதது என்கிறது மாக்ஸியம். மகிந்தாவைப் போல் அவரின் மகனும் இருப்பார் என்று எண்ணுவது இதுபோன்ற முட்டாள் தனமானதே.
    நாமல் தனது விதைப்பை செய்யட்டும்.நாம் அறுபடையையை எதிர்பார்பதற்கு. ஒரு நல்ல ஜனாதிபதியின் மகன் நல்லதை செய்வார் என்று எதிர்பார்கிறது முட்டாள் தனம். இது தமிழ்மக்களின் சிந்தனையை பழைய புலிக்காலத்திற்கே இட்டுச் செல்லும்.
    தமிழ்மக்கள் தமதுஇனத்தை நேசிப்பதால் மட்டும் பரிகாரம் ஆகிவிடாது இலங்கையை தமது தாய்நாடாக ஏற்றுக்கொள்ளுகிற மனேபாவத்தை ஏற்படுத்தி-பழக்கப்படுத்து அரசியலாகக் கொள்ள வேண்டும்.
    ஐக்கியஇலங்கைக்குள்ளோயே எந்த இனமும் சுகந்திரமான வாழ்வையும் அரசியலையும் தேடிக்கொள்ள முடியும். நாமல் அரசியல் பிரவேஷத்தையும் அவர் எடுத்த அற்பவெற்றியையும் யாரும் விழா கொண்டாட முடியாது. இதைக் கணிப்பதற்கு பல ஆண்டுகள் ஆகும். தமிழ்மகன் இலங்கையை எப்படி தனது தாய்நாடாக கணிக்க புறப்படுகிறானே அதேநேரத்தில் பரம்பரை-வாரிசு அரசியலையும் புறக்கணிக்க தம்மை பழக்கிகொள்ள வேண்டும். இருந்தால் மட்டுமே எமது இனமும் இலங்கையாகிய எமது தாய்நாடும் நாகரீக உலகத்தில் கால்லடி எடுத்து வைக்கிறோம் என அர்த்தப் படுத்திக்கொள்ளலாம்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    மகிந்தவின் அரசியல் பலம் தான் தற்போதைய நாமலின் வெற்றியாகக் கருத முடியும். தந்தையைப் போல் இளம் வயதிலேயே அரசியலில் இணைந்துள்ளார். எனி இவரால் நாட்டு மக்களுக்குத் தொடர இருக்கும் நடவடிக்கைகள் தான், இவரின் அரசியல் எதிர் காலத்தை நிர்ணயிககும். 23 வயதில் வேட்பாளராக வென்று அடுத்த சில தினங்களிலேயே தனது 24 வது வயதில் நாடளுமன்றத்தில் காலடி வைக்கவிருக்கும் நாமலை ஒரு சராசரி மனிதனாக நானும் வாழ்த்தி வரவேற்கின்றேன்.

    Reply
  • Kusumbo
    Kusumbo

    வளர்ந்து வாழவேண்டிய வயதில் அரசியல் சாக்கடையில் தள்ளிவிடுகிறார்கள். பொய்யும் புரளியும் சேர்ந்தது தானே அரசியல். பரம்பரையாக இரத்தத்தில் வந்தது மாறவாபோகிறது? யாருக்கு நாமம் போட நாமலோ நாமறியோம் நாராயணா!!

    Reply
  • மாயா
    மாயா

    குடும்ப அரசியல் கலாச்சாரம் நம் நாடுகளில் பொதுவானதாகி விட்டது. இதுவும் எதிர்காலத்தில் மாறலாம். கண்டி சிங்களவரது தலைமை, மகிந்தவால் மாறியது போல. நாமலின் சிந்தனைகள் மென்மையானது என்கின்றனர் நண்பர்கள். இளைய தலைமுறையினர் வருவது நல்லது. எனவே எனது வாழ்த்துகளும் நாமலுக்கு…..

    கதிரை முக்கியமல்ல, நடைமுறைதான் முக்கியம்.

    Reply
  • Ajith
    Ajith

    அதுவும் தமிழில் ஐ நா வில் பேசிய ஜனாதிபதி.

    It is a great achievement. The man who made an speech been accused by UN as a war criminal. Criminala are very fluent in various languages to cheat people. It is the same Rajapakse who disgraced tamils in tamil at Vavuniya.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    Ajith,
    கதையளப்பதை நிறுத்தவே மாட்டீர்களா?? வவுணியாவில் மகிந்த தமிழில் பேசிய போது கூச்சலிட்டு குளப்பம் விளைவித்தவர்கள் சில சிங்கள மக்கள். அவர்களைத் தான் விருப்பமில்லாவிட்டால் வெளியேறுமாறு மகிந்த அதட்டினார். இதனை உங்களைப் போன்றவர்கள் பலர் திரித்துக் கட்டி கதையளந்த போதும் உண்மைகள் வெளிவந்திருந்தன.

    Reply
  • palli
    palli

    நாமலை பல்லியும் வாழ்த்துகிறேன்; அவரது வெற்றிக்காக அல்ல; அவரது அரசியல் வருகைக்காக; ஆனால் ஏற்க்கனவே நான் குடும்ப அரசியல் என ஒரு புள்ளி வைத்து விட்டேன், அதுக்கான கோலத்த்கை போட நினைத்த போது சந்திராவிடம் விமர்சனம் வருமே என எண்ணியதால் அதை தவிர்த்தேன், ஆனால் எனது எண்ணத்தை விட நிதானமாக சந்திரா சொல்லியுள்ளார்,
    உன்மைதான் குடும்ப அரசியல் ஏற்று கொள்ள கூடியதல்ல; இதனால் பல திறமைசாலிகளை நாம் இழக்க நேரிடும்; எனது கேள்வி நாமலை விட அந்த தொகுதியில் வேட்பாளராய் நின்று வெற்றியுடன் பாராளமன்றம் செல்ல இவரை விட தகுதியான அனுபவமானவர்கள் இல்லையா? என்பதே,
    ஜனாதிபதி, அப்பா; பிரதமர், தம்பியாகலாம், ராணுவம், தம்பியின் கட்டுபாட்டில்; நாமல், இவர் என்ன செல்ல குழந்தைக்கு ஆன தேர்விலா வெற்றி பெற்றார், சந்திரா சொன்னது போல் முதலில் நாம் துதி பாடுவதை நிறுத்த வேண்டும்; நாளை நாமல் ஒரு அமைச்சர் ஆகலாம், அதுக்கான வாய்ப்புகள் அதிகம்தான், ஆனால் அதுக்கு அவர் தகுதியானவரா?? புலிகளின்(சிறுவர்) கையில் ஆயுதத்துக்கும் நாமலின் பதவிக்கும் எனக்கு வேறுபாடு தெரியவில்லை; குடும்ப அரசியல் ஒழிக்கபடமல் இருந்தால் அமெரிக்காவை ஒரு கறுப்பின தலைவன் நிர்வகிக்க முடியுமா??

    Reply
  • kaaNdiipan
    kaaNdiipan

    நமல் வந்தாலென்ன போனாலென்ன, நாட்டுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிகாமல் விட்டால் நாடு குட்டிச்சுவர்தான். இந்த நமல் Aston Martin வண்டி ஒன்றை ($350,000.00 USD) வாங்கி இரவில் இலக்கத்தகடு இல்லாமல் ஓட்டி மகிழ்பவர் என முன்னர் சன்டே லீடரில் படத்துடன் வந்த்திருந்தது. லசந்தா கொல்லப்பட இதுவும் ஒரு காரணம், சரத்துக்கு வாங்கிய Benz S Class வண்டி தில்லுமுல்லுகள் வெளிவந்தது போன்றன இன்னொரு காரணம்.
    இவரை த்ரிவு செய்தது ‘மக்கள்’ தான். இவரை விட்டால் ஆளில்லையா என்று ஏன் இங்கே வந்து எழுதவேண்டும்?

    நிற்க இதுக்கெல்லாம் ஏன் அமெரிக்க அரசியலை இழுக்கிறீர்கள். ஏகாதிபத்தியம், முதலாளித்துவம் என எடுத்ததுக்கெல்லாம் துதிபாடி, ஒபாமா தோற்பார் ஏனெனில் அமெரிக்க வெள்ளையர் இனவாதிகாள் என சொல்லி வென்றவுடன் இவரால் ஒன்றும் கறுப்பின மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என ‘நிம்மதி’ பெருமூச்சு விட்டவர்களே இங்கு அதிகம். ஆனால் இப்போது குடும்ப ஆட்சிக்கு எதிராக அமெரிக்காவை துணைக்கழைப்பது வேடிக்கைதான்.
    அமெரிகாவிலும் குடும்ப ஆட்சி உண்டு ஆனால் அவர்கள் தகுதி அடிப்படையிலேயே தெரிவு செய்யப்படுவர். மேலும் அவர்கள் எந்த கொம்பனாக இருந்தாலும் உட்கட்சித்தேர்தலில் வெற்றி பெற வேண்டும். இவ் உட்கட்சித்தேர்தல் மிக வெளிப்படையாகவே நடைபெறும். தொலைக்காட்சியில் விவாதம் வேறு நடைபெறும். அமெரிகாவின் புகழ்பெற்ற கெனடி குடும்ப அரசியல் ஒன்றும் சின விடயம் அல்ல. அவர்களின் குடும்பத்தில் ஏறக்குறைய முக்கால்வாசிப்பேர் பொதுச்சேவை (அரசியல் சார்ந்த) செய்பவர்களே.
    அத்துடன் ஜோர்ஜ் புஷ் குடும்ப அரசியல் ஒன்றும் தாழ்ந்ததல்ல. அப்பாவின் அப்பா செனட்டர், காங்கிரஸ் பிரதிநிதி, அப்பா காங்கிரஸ் பிரதிநிதி, சி.ஐ.ஏ தலைவர்,ஜனாதிபதி, மகன் கவர்னர்,ஜனாதிபதி, அண்ணன் கவர்னர், வருங்கால ஜனாதிபதி வேட்பாளர் (?)மருமகன் அரசியலில் பிரகாசிக்கபோகும் சாத்தியக்கூறுகள் அதிகம்…..இவ்வாறு நீளும்.
    இவற்ரை எல்லாம் தமது திறமை, மக்கள் முன் தோன்றி விவாதிக்கும் திறமை, வெளிப்படையான பண/வரி/சொத்து/உடல்நல விபரங்களை வெளியிடல் மூலம் வெளிக்காட்டியே வெல்ல முடியும். அதற்கு ஒரு சந்தர்ப்பம் அங்கே எல்லோருக்கும் வழங்கப்படும். ஆனால் ஸ்ரீலங்காவில் அவ்வாறா?
    அண்மையில் முன்னைநாள் அமெரிக்க தூதர் ஸ்ரீலங்காவில் குடும்ப அரசியல் என்பது ‘பாரம்பர்யம்’ மிக்கது எனக்கூறப்போக வழமையான ‘ஏகாதிபத்தியம்’ கூச்சல் காது கிழிந்தது!

    Reply
  • chandran.raja
    chandran.raja

    ஜனாதிபதி கூட்டத்தில் தமிழில் உரையாற்றும் போது கூச்சல்லிட்டவர்கள் சிங்கள மக்கள். அப்போது மகிந்தாராஜ பக்சா சொன்னவார்த்தை “நீங்கள் இப்படி கூச்சல் போட்டால் நான் தொடர்ந்தும் தமிழில் உரையாற்றுவதை விட வேறுவழியில்லை”.
    இதுவல்லவோ காலங்காலமாக இனவெறிக்கு ஆட்பட்டுவந்த நாட்டில் வந்த ஜனாதிபதிக்கு உள்ள அழகு.இதைதான் துணிச்சல் வீரம் என்று சொல்வார்கள்.வாழ்க!. ஆம். நாம் ஒரு தாய் பெற்ற பிள்ளைகள் தாம்.உங்கள் தொடர்ச்சியான அரசியல் நடவடிக்கைகளுக்கு எங்கள் முழு ஆதரவும் உண்டு.நாம் எல்லோரும் ஒன்றுபட்ட இலங்கையை நோக்கி நம்பிக்கையுடன் பயணிப்போம்.

    Reply
  • NANTHA
    NANTHA

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அரசியல் பண்ணக் கூடாது என்று விதிகள் எதுவும் இல்லை. மக்களின் அங்கீகாரம் கோரி அதிகளவு விருப்பு வாக்குகளைப் பெற்ற நாமலை “வெறும்” குடும்ப செல்வாக்கு என்று புறம் தள்ள முடியாது. ஏனென்றால் மற்றைய “அதே /எதிர் கட்சி” வேட்பாளர்களையும் விட அவர் பெற்ற வாக்குகள் அதிகமானதன் காரணம் என்ன? வாக்காளர்கள் முட்டாள்களா அல்லது “மகிந்தவின்” செல்வாக்கா? புரியவில்லையே?

    மக்கள் எதிர்பார்க்கும் விஷயங்களை அவர் செய்து காட்டினாரா என்பதை அடுத்த பொதுத் தேர்தலே நிர்ணயிக்கும்!

    Reply
  • thurai
    thurai

    அஜீத் ராஜபக்சவை குற்ரம் சுமத்துவதை ஏற்ருக்கொள்வோம்.
    புலிகளின் நாடுகடந்த தமிழீழமா? அல்லது புலம்பெயர் தமிழர்களின் நாடுகடந்த தமிழீழ அரசா? அரசாங்கம் புலிகளின் செயல்தான் எனக் குற்ரம் சாட்டுகின்றது. அப்படியில்லை புலத்தில்வாழும் தமிழர்களின் ஒற்றுமையான செயல்பாடுதான், புலிகள் இலங்கையில் அழிக்கப்பட்டு ஒரு வருடத்துக்குள் நாடுகடந்த அரசமைப்பாகுமா?

    உலக நாடுகள் முழுவதும் பரந்து வாழும் இந்த சுத்துமாத்து புலியின் ஆதரவாளர்கள் இலங்கை வாழ் தமிழர்களின் வாழ்வுடன் விளையாடும் போக்கை யார் தட்டிக்கேட்பார்களோ?

    தமிழனில்லாத நாடில்லை ஆனால் தமிழனிற்கென்றொரு நாடில்லை. இந்தக்குறையைத் தீர்ப்பதுதான் தமிழீழ விடுதலைப் புலியென்பவர்களின் தமிழீழத்தாகம். இப்போ தமிழீழ அரசு உலகெங்கும் அமைக்கின்றார்கள். அமைப்போரிற்கு இலங்கை பிரசா உருமை இருக்கோ இல்லையோ இலங்கைக்கு போக விருப்பமில்லாதவர்கள்.

    இவர்களின் சொல்லைக்கேட்டு வீதியை மறித்தவர்கள் புலம்பெயர்நாடுகளில் த்ண்டனைப் பணம் செலுத்திக் கொண்டிருக்கின்றார்கள்
    தமிழரென்றால் எங்கள் நாட்டுக்கே வேண்டப்படாதவர்கள் என்னும் கருத்தை உலகெங்கும் வளர்த்து விட்டார்கள். இந்த நிலமையில் இவர்கள் தமிழீழம் பெற்று நாட்டிற்கு திரும்பினால் உலக நாடுகள் தமிழ்ரில்லையேயெனப் பெருமைப்படுமள்விற்கு புலிகள் செயற்பட்டுள்ளார்கள்.

    இவர்களின் நாடுகடந்த தமிழீழம், ஈழத்தமிழரின் நிம்மதியான வாழ்க்கையை கெடுப்பது மட்டுமல்ல, நாடுகடந்து வாழும் தமிழர் அனைவரினதும் அமைதியான வாழ்வை பாதிக்கும். இதில் சம்பந்தப்பட்டவர்கள் பிரமுகர்களாக ஜிரிவி இல் காட்சி கொடுத்து மனமகிழ்வு கொள்வார்கள்.

    தமிழீழப் போராட்ட முடிவில் செல்வந்தரானவ்ர்கள் இப்போ நாடுகடந்த தமிழீழ அரசில் பிரமுகர் ஆகின்றார்கள். இலங்கையில் முள்ளிவாய்க்காலைக் காட்டியவர்களிர்கு புலம்பெயர் நாடுகளில் என்னெல்லாமிருக்கோ? பொறுத்திருந்து பார்ப்போம்.

    துரை

    Reply
  • palli
    palli

    // இவரை த்ரிவு செய்தது ‘மக்கள்’ தான். இவரை விட்டால் ஆளில்லையா என்று ஏன் இங்கே வந்து எழுதவேண்டும்?//

    கண்டிப்பாக நீங்கள் இப்படி ஒரு கேள்வியை கேப்பதற்க்காய் அல்ல; இந்த கேள்வியை கேக்க முன்பு நீங்களே மேலே எழுதிய வண்டி சமாசாரமும் எமக்கும் தெரிந்ததாலும்; அதை அம்பலபடுத்தாமல் இவர் ஒரு (நாமல்) சரியான நபர் அல்ல என்பதால் இதை பல்லி சொன்னதாய் எடுத்து கொள்ளுங்கள்.

    //நிற்க இதுக்கெல்லாம் ஏன் அமெரிக்க அரசியலை இழுக்கிறீர்கள். //
    ஜயோ ஜயோ இப்போ எல்லாம் வல்லரசுகளை உதவிக்கு அழைக்காமல் பின்னோட்டம் எழுதினால் யார் வாசிப்பார்கள். அதையும் விட பல்லியின் அறிவு என்னாகும்; சரி உங்களுக்காக இப்படி மாற்றுவோம்; பண்டாரநாயக்கா குடும்பம் ஒரு குடும்ப அரசியலை முதன்மை படுத்தியிருந்தால் இன்று பலரால் புகழபடும் மகிந்தா குடும்பம் எப்படி ஆட்சி செய்யமுடியும்; இப்போ எல்லாம் வீட்டில் கறிக்கு உப்பு குறைந்தால் கூட அதுக்கு அமெரிக்காவில் இப்படிதான் சாப்பிடுவதாக விளக்கம் தருகிறார்கள் நண்பரே, அதுசரி நான் ஒரு அமெரிக்கரை சொன்னதுக்கு சண்டைக்கு வந்து விட்ட நீங்கள் அமெரிக்க அரசியல்வாதிகள் அரைவாசி பேரை எழுதுவது என்ன நியாயம், இது அனியாயம் இல்லையா?

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    / இவரை த்ரிவு செய்தது ‘மக்கள்’ தான். இவரை விட்டால் ஆளில்லையா என்று ஏன் இங்கே வந்து எழுதவேண்டும்?//
    இதை எழுதியது ஏன் என்றால், ’ஜனநாயகம்’, ‘மாற்றுக்கருத்து’, மக்கள் தேர்வு’ என வெறும் சொற்பதங்களை நம்பி கதை விட்டால் இதுதான் நிகழும் என தெரிந்திருக்கவேண்டும் என சுட்டிக்காட்டவே!

    //..ஜயோ ஜயோ இப்போ எல்லாம் வல்லரசுகளை உதவிக்கு அழைக்காமல் பின்னோட்டம் எழுதினால் யார் வாசிப்பார்கள். …//
    அப்போ நீங்கள் பின்னூட்டம் விடுவது பலர் வாசிக்கவேண்டும் என்ற வெறும் ‘நோக்கத்தில்’ தான் என ஒத்துக்கொண்டதற்கு நன்றி.

    //… பண்டாரநாயக்கா குடும்பம் ஒரு குடும்ப அரசியலை முதன்மை படுத்தியிருந்தால் இன்று பலரால் புகழபடும் மகிந்தா குடும்பம் எப்படி ஆட்சி செய்யமுடியும்;…//
    பண்டாரநாயக்கா ‘முதன்மைப்படுத்த’ முதலே கொல்லப்பட்டுவிட்டார். ஆனால் அவரின் மனைவி ‘kitchen cabinet’ அமைத்து தனது மருமகன் பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்காவையும், பின்னர் மகள் சந்திரிகாவையும், பின்னர் மகன் அனுராவையும் கொண்டு வந்தது என்ன கனவா?
    மஹிந்தாவை ’காய்வெட்ட’ சந்திரிகா எடுக்காத முயற்சியா? ஆடாத கூத்தா? கேளுங்கள் எஸ்.எல்.எஃப்.பி உள்வீட்டுகாரர்களை சொல்வார்கள்.
    நியாயமாகப் பார்த்தால் சேனநாயக்கா ‘குடும்ப’ ஆட்சிக்கு கடிவாளம் போட்டவர் ஜே.ஆர் ஆகத்தான் இருக்கும். அவருக்கு கடிவாளம் போட்டவர் பிரேமதாசா. மருமகன் உபாலி, பெறாமகன் ரனில் போன்றவர்கலை ‘ஓரம்கட்டி’ அலுவல் முடித்தவர் அவர்தான்.

    Reply
  • Kusumpu
    Kusumpu

    அரசியலில் இலாபம் இல்லாமல் மகிந்தர் தன் மகிந்தனை நிறுத்தினாரோ தேர்தலில். இலாபமில்லாத உயிருக்கு ஆபத்தான தொழிலில் ஈடுபட எந்தத்தந்தை அனுமதிப்பார்? உயிருக்கும் மேலாக ஒரு இலாபம் அங்கு இருக்கிறது. இலங்கையில் மகிந்த என்ற சொல்லில் ஒரு மஜிக் இருக்கிறது. புத்தமதத்தை தேவநம்பிய தீசனுக்கு அறிமுகப்படுத்தி மக்களை பெளத்தராக்கியது மகிந்த எனும் பிச்சு. புலிகளின் கொடுங்கோன்மையை அழித்து தமிழ்பகுதிகள் எங்கும் பெளத்தவிகாரைகளையும் குடியேற்றங்களையும் செய்தவர் மகிந்த.இதை பிழை என்று விவாதிக்க வரவில்லை. ஆனால் இலாபம் மட்டுமே முக்கிறமாகனது. ருசிகண்ட பூனைகள் சும்மாவா இருக்கும். நாமலுக்கம் புதிய நாமம்.

    Reply
  • palli
    palli

    //அப்போ நீங்கள் பின்னூட்டம் விடுவது பலர் வாசிக்கவேண்டும் என்ற வெறும் ‘நோக்கத்தில்’ தான் என ஒத்துக்கொண்டதற்கு நன்றி. //
    இதில் என்ன தப்பு எல்லோரும் பலர் வாசிக்கதானே எழுதுகிறார்கள். நீங்க மட்டும் என்ன எல்லோரும் உங்க பின்னோட்டத்தை முகம் பார்க்கவா எழுதுறியள். அதையும் விட பல்லி என்ன பரபரப்புக்கா எழுதுகிறேன் தலையங்கத்தை பார்த்து பாராட்டி சீராட்ட, ஒவ்வொரு எழுத்திலும் தேசத்தில் கேள்வி வரும் சாந்தன்; அதுவும் பல்லி என்றாலே பதில்சொல்ல பலர் இருக்கிறார்கள் சாந்தனும்தான்; பண்டாரனாயக்கா குடும்பம் பற்றி நான் சொல்லவில்லை முதன்மை முதன்மை புரிந்து அப்புறம் கொல்லுங்கள்; எதுக்கெடுத்தாலும் பொட்டரின் குணமா? (சந்தேகம்) சந்திரிகா மகிந்தாவிடம் கதிரையை கொடுத்து விட்டுதான் திரும்ப பறிக்க படாத பாடு பட்டார், இது கூடவா பல்லிக்கு தெரியாது, சாந்தன் நீங்க ரெம்பதான் மோசம்;

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…. சந்திரிகா மகிந்தாவிடம் கதிரையை கொடுத்து விட்டுதான் திரும்ப பறிக்க படாத பாடு பட்டார், இது கூடவா பல்லிக்கு தெரியாது, சாந்தன் நீங்க ரெம்பதான் மோசம்;…//

    கொடுக்காமல் விடுவதற்கு ‘பட்ட பாடு’ தெரியாது போலும். கேளுங்கள் எஸ்.எல்.எஃப்.பி காரரை. பக்கம் பக்கமாக எழுதும் அளவுக்கு கதை சொல்வார்கள். சந்திரிகா வெளியில் நல்ல பிள்ளைக்கு நடித்து அரசியல் மாநாட்டு மேடைக்கு மஹிந்த வரும்வரை விளையாடிய விளையாட்டினால் மாநாடே சலசலத்துக் கொண்டிருந்தது! பின்னர் வேறுவழியில்லாமல் ‘கொடுத்து’ விட்டு ‘பறித்துக்கொள்ளலாம்’ என விளையாடியது தனிக்கதை!

    Reply