கிருஷ்ணா இன்று வருகை; சர்தாரி ஞாயிறன்று கொழும்பில்

ind-pak.jpgபாகிஸ்தான் ஜனாதிபதி, இந்திய அமைச்சர் ஆகியோரின் இலங்கை விஜயத்தால் நாட்டுக்கு பலகோடி பெறுமதியான நன்மைகள் கிடைக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார். இது தவிர இலங்கையில் முதலீடு செய்வதற்காக பெல்ஜியம் மற்றும் மலேசிய நாட்டு உயர் மட்ட வியாபாரிகள் குழுக்களும் இலங்கை வருவதாக அமைச்சர் கூறினார்.

வரவு – செலவுத்திட்ட இரண்டாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் மேலும் கூறியதாவது:- இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா இன்று (வியாழன்) இலங்கைக்கு வருகிறார். அவர் வெறும் கையுடனன்றி நாட்டுக்கு பல்வேறு நன்மைகளை எடுத்து வருகிறார்.  யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை, மதவாச்சி ஆகிய பகுதிகளுக்கும் அவர் விஜயம் செய்வார். 250 அமெரிக்க டொலர் செலவில் இடம்பெயர்ந்த மக்களுக்காக 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தையும் கிருஷ்ணா ஆரம்பித்து வைக்க உள்ளார். கடனாக அன்றி உதவியாகவே இந்த வீடமைப்புத் திட்டம் இலங்கைக்கு வழங்கப்படுகிறது.

இது தவிர 800 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் வடக்கில் மூன்று ரயில் பாதைகளை நிர்மாணிக்கும் பணியையும் அவர் ஆரம்பித்துவைப்பார்.

அத்தோடு காங்கேசன்துறை துறைமுகம், பலாலி விமான நிலையம் என்பவற்றை அபிவிருத்தி செய்யவும் இந்தியா விசேட திட்டங்களை முன்னெடுக்க உள்ளது. தனது விஜத்தின் போது இந்திய வெளிவிவகார அமைச்சர் யாழ்ப்பாணத்திலும் ஹம்பாந்தோட்டையிலும் இரு கொன்சூலர் அலுவலகங்கள் திறந்து வைக்கப்படும்.

பாக். ஜனாதிபதி விஜயம்

இந்திய வெளிவிவகார அமைச்சர் நாடு திரும்பும் தினத்தில் பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அல் சர்தாரி இலங்கைக்கு வருகை தருகிறார். அவரும் இலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் பல திட்டங்களை எடுத்து வருகிறார். சீனி, சீமெந்து கைத்தொழிற்சாலைகள் சிறுமத்திய கைத்தொழிற் துறைகள் ஆரம்பிப்பது குறித்து அவரின் விஜயத்தின் போது கவனம் செலுத்தப்படும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • london boy
    london boy

    ஜயா சர்தரி அவர்களே லண்டனில் கடைகளுக்கு முன்னான் நின்று பாக்கிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட வேண்டும் என பிச்சை கேட்கிறார்கள் உங்கள் பாக்கிஸ்தானிய உறவுகள் நீங்கள் என்னடா என்றால் இலங்கைக்கு உதவிகள் என்று அள்ளிக் கொடுப்து போன்று! என்ன நடக்குது உங்கட நாடுகளில்……

    Reply
  • BC
    BC

    //லண்டனில் கடைகளுக்கு முன்னான் நின்று பாக்கிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட வேண்டும் என பிச்சை கேட்கிறார்கள் உங்கள் பாக்கிஸ்தானிய உறவுகள்.//
    பாக்கிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முஸ்லிம் நாடுகள் உதவவில்லை. பிற மதத்தவர்கள்,பிற மதத்தவர்களை கொண்ட மேற்க்கு நாடுகள் தான் தாராள உதவி செய்கின்றன. முஸ்லிம் நாடுகள் இஸ்லாமிய பயங்கரவாதத்தை எப்படி மற்றைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது, மற்ற நாடுகளில் எப்படி மசூதி கட்டுவது என்பது பற்றிய நடவடிக்கைகளிலேயே இருக்கின்றன.

    Reply
  • mahintha
    mahintha

    மற்றைய நாடுகளில் எப்படி? சைவக்கோவில் கட்டுவது என்பதைப் பற்றி இந்துகளோ தமிழர்களோ பலவீனமாகவா இருக்கிறார்கள் பி.சி? மற்றைய இனத்தையோ மதத்தையோ நையாண்டி செய்யாதீர்கள். சுணாமிக்கு பணம் சேர்த்து அமுக்கினவன் நமது இனத்திலும் மதத்திலையுமே “ரெக்கோட்” உடைத்திருக்கிறான்.

    Reply
  • BC
    BC

    மகிந்தா, முஸ்லிம் நாடுகள் பாக்கிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு உதவாமல் இஸ்லாமிய பயங்கரவாதத்தை மற்றைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதிலும், மற்ற நாடுகளில் மசூதி கட்டுவதிலுமே அக்கறையாக இருக்கிறது என்ற உண்மையை சொன்னால் இந்துகள், தமிழர்கள் குறைவா என்று கேட்கிறீர்கள் .அவர்கள் தங்கள் பணத்தில் தான் கோவில் கட்டினார்கள். இந்தியா, நேபாளம், இலங்கை கோவில் கட்டி கொடுக்கவில்லை. (கோவில் கட்டியது சிறந்த விடயம் செய்தார்கள் என்று அர்த்தம் அல்ல.)
    சுனாமி அவலத்தில் மக்களின் பாதிப்பை பயன்படுத்தி புலிகள் மிக பெரிய பண சுருட்டல் செய்தது தெரிந்ததே.

    Reply