நாளைய தினம் கண்டியில் இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான புதிய அமைச்சர்கள் பதவியேற்கவுள்ள நிலையில் புதிய அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளோர் யார் ? என்ற ஆவல் இலங்கை மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மூன்று அமைச்சு பொறுப்புக்களை வழங்க இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மகிந்த அமரவீர, நிமல் சிறிபால டி சில்வா ஆகியோருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகள் வழங்கப்பட உள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவியை வழங்குவதில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.