அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த முயல்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பணிப்பு

president.jpgஅரசாங்கத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தக் கூடிய விதத்தில் செயற்படும் சக்திகளை சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவர உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பாதுகாப்புதரப்புக்கு உத்தரவிட்டுள்ளார். பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் இறுதிக் கட்டத்துக்கு படைத்தரப்பு முன்னேறிக்கொண்டிருக்கும் நிலையில் சில தீய சக்திகள் அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் சதித்திட்டத்தை மேற்கொண்டுள்ளதாகச் சுட்டிகாட்டியிருக்கும் ஜனாதிபதி எத்தகைய சவால்களுக்கும் முகங்கொடுக்ககூடிய பலம் அரசுக்கு இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

செவ்வாய்க்கிழமை இரவு அலரிமாளிகையில் இடம்பெற்ற நாட்டிலுள்ள சட்டதரணிகளுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்கண்ட தகவல்களை வெளியிட்டிருக்கின்றனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் செவ்வாய்யிரவு ஜனாதிபதியைச் சந்தித்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து நாட்டில் சமாதானத்தையும் அபிவிருத்தியையும் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி எடுத்துவரும் முயற்சிகளை பாராட்டியதோடு இதற்குக் கட்சி இன வேறுபாடுகளலின்றி அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென்ற கோரிக்கையையும் விடுத்துள்ளது.

போரின் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள நிலையில் யுத்தத்தை மலினப்படுத்தி அரசாங்கத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் விதத்தில் அண்மைக்காலமாக ஊடகநிறுவனங்கள் தாக்கப்படுவதும் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டு தாக்கப்பட்டுமுள்ளனர். இறுதியாக சிரேஷ்ட ஊடகவியலாளரும் , சட்டதரணியுமான லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவை அனைத்துக்குமே அரசு மீதே குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அரசுக்கு உள்ளூர் மட்டத்திலும் சர்வதேச ரீதியிலும் அபகீர்த்தியை ஏற்படுத்துவதே இந்த சதிகாரிகளின் திட்டமாகும். இதனை அரசு கடுமையாகக் கண்டிக்கிறது.  இத்தகைய மிலேச்சத்தனமான படுகொலையைச் செய்தவர்களை கண்டு பிடித்து நாட்டு மக்களுக்கு பகிரங்கப் படுத்துவோம். ஊடக நிறுவனம் தீவைப்பு ,லசந்த விக்கிரமதுங்க படுகொலை என்பன தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தி குற்றவாளிகளை விரைவில் கண்டு பிடிக்குமாறு நான் பாதுகாப்புத் தரப்புக்கு பணிப்புரை விடுத்துளேன். அரசாங்கம் ஜனநாயக விரோதச் செயலிலீடுபடவில்லை. அதேபோன்று இனிமேல் ஜனநாயகத்துக்கு கலங்கம் ஏமற்பட இடமளிக்கப்படவும்மாட்டாது. இவ்விடயத்தில் அரசு காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கதீர்மானித்துள்ளது எனவும் ஜனாதிபதி ராஜபக்ஷ சட்டத்தரணிகள் மத்தியில் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *