படையினரால் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் புலிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தக்கூடும் – இராணுவத் தளபதி

fonseka2.jpgவன்னி யில் பலமிழந்துவரும் விடுதலைப் புலிகள் அரச படையினரால் விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஊடுருவித் தாக்குதலை நடத்தலாமென இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வன்னி இராணுவ படைத் தலைமையகத்துக்கு வெள்ளிக்கிழமை விஜயம் செய்து உரையாற்றியபோதே சரத் பொன்சேகா இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;

“இராணுவத்தினரின் படை நடவடிக்கைகளினால் விடுதலைப் புலிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளனர். மோதல்கள் இடம்பெறும் பகுதிகளிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரும் பொதுமக்களுக்கு அதிகூடிய பாதுகாப்பினை வழங்கவேண்டும். இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள பிரதேசங்கள் மற்றும் அரசினால் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் விடுதலைப் புலிகள் ஊடுருவித் தாக்குதல் மேற்கொள்ளக் கூடும்.

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து ஆயிரக்கணக்கானோர் அடுத்த ஓரிரு தினங்களில் விலகி அரசிடம் சரணடையக் கூடும். அதேவேளை, வன்னியில் படையினரால் மேற்கொள்ளப்படும் மனிதநேய நடவடிக்கைகள் தற்போது மிகவும் இக்கட்டான நிலைக்கு வந்துள்ளது’ என்றார். அத்துடன், யாழ்ப்பாணம் கொழும்பை இணைக்கும் ஏ9 வீதியை பொதுமக்களின் பாவனைக்காக திறக்கவேண்டியதன் அவசியம் குறித்தும் இராணுவத் தளபதி விளக்கியிருந்தார். வன்னிப் படைத் தலைமையகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் வன்னிப் பிராந்தியத்துக்கான கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியா உள்ளிட்ட உயர் மட்டத் தளபதிகள் கலந்துகொண்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

2 Comments

 • raja
  raja

  i appreciate you man

  Reply
 • palli
  palli

  //வன்னி யில் பலமிழந்துவரும் விடுதலைப் புலிகள் அரச படையினரால் விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஊடுருவித் தாக்குதலை நடத்தலாமென இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்//

  2009ன் மிகபெரிய கண்டுபிடிப்பு. பிடிப்பது சுலபமாய் போச்சு..அதை காப்பது??
  அது போல் மகிந்தா குடுமபம் அரசில் இருக்குமட்டும் பாதுகாப்பாக இருக்கமுடியும். அரசு பறிபோனால்??

  இது பல்லியின் எழுந்தமானமல்ல. இன்று புஸ்க்கு பாதுகாப்பு கொடுக்க அமெரிக்கா படும்பாடு இருக்கே? புஸ்க்கே இந்தபாடு என்றால்?? இவர்களுக்கு??தமிழர்மீது மட்டுமல்ல சிங்களவர்மீதும் மிக பகமையை இந்த குடும்பம் வளர்த்துள்ளது.
  பல்லி.

  Reply