இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.
நாணயச்சுழற்சியில் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 338 ஓட்டங்கள் எடுத்தது. அந்த அணியின் புகோல்ஸ்கி 62 ஓட்டங்களும், லபுஸ்சேன் 91ஓட்டங்களும், ஸ்மித் 131 ஓட்டங்களும் எடுத்து அணியை வலுப்படுத்தினர்.
அதன்பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நிதானமாக ஆடியது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 இலக்கு இழப்பிற்கு 96 ஓட்டங்கள் எடுத்திருந்தது. ரஹானே 5 ஓட்டங்களிலும் புஜாரா 9 ஓட்டங்களிலும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. நிதானமாக ஆடிய ரகானே 22 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹனுமா விஹாரி 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பொறுமையாக ஆடிய புஜாரா, சுப்மன் கில் இருவரும் 50 ஓட்டங்கள் எடுத்தனர். ரிஷப் பன்ட் 36 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, இந்தியா அணி 244 ஓட்டங்களில் தனது சகல இலக்குகளையும் இழந்தது. ஜடேஜா 28 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.
ஆஸ்திரேலியா தரப்பில் பேட் கம்மின்ஸ் 4 இலக்குகளை கைப்பற்றி இந்திய அணியின் ஓட்டக் குவிப்பை வெகுவாக கட்டுப்படுத்தினார். ஹாசில்வுட் 2 இலக்குகளையும், ஸ்டார்க் ஒரு இலக்கையும் எடுத்தனர்.
இதனையடுத்து 94 ஓட்டங்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி 2ம் இன்னிங்சை தொடங்கியது.