“புதிதாக நிர்மாணிக்கப்படும் தூபி சமாதானதூபியாக ஆவணங்களில் அடையாளப்படுத்தப்படும்” என யாழ்.பல்கலைகழக துணைவேந்தர் சிறிசற்குணராஜா அவர்கள்அதனை அழித்தனர் எனவும் தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றிற்கான (மோர்னிங்) செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு மற்றும் சமூக ஐக்கியம் தொடர்பான ஆவணமொன்றின் மூலம் classified directive முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி சட்டவிரோதமானது என தனக்கு உத்தரவு வழங்கப்பட்ட பின்னரே தான் தனது உத்தியோகத்தர்களை நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டதாக தெரிவித்துள்ள அவர் அவர் எங்கிருந்து இந்த உத்தரவு கிடைத்தது என்பதை அவர் குறிப்பிட மறுத்துள்ளார்.
நினைவுத்தூபி அழிக்கப்பட்டமைக்கு உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன என தெரிவித்துள்ள துணைவேந்தர் தான் அதனை எதிர்பார்க்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். கடும் எதிர்ப்பு எழுந்தது, அதிகாரிகள் துணைவேந்தர் என்ற அடிப்படையில் அது முற்றுமுழுதாக எனது தீர்மானம் தங்களிற்கு எந்த தொடர்புமில்லை என அறிவித்தனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் நான் எனது கடமையையே செய்தேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைகழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் நான் அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுத்தேன் எனவும் தெரிவித்துள்ள அவர் இடிக்கப்பட்ட நினைவுத்தூபியை மீண்டும் கட்டியெழுப்பி அதற்கு சமாதான தூபியென பெயரிட தீர்மானிக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.
விஞ்ஞானபீடத்தை சேர்ந்த எனது மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர் என்னால் அதனை தாங்கமுடியவில்லை இதன் காரணமாக நான் அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு அதனை மீள சமாதானதூபியாக கட்டியெழுப்புவதற்கும் உயிரிழந்தவர்களை நினைவுகூறுவதற்கும் இணங்கியுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாணவர் அமைப்பின் ஆதரவு அடிக்கல் நாட்டப்பட்டது,எந்த அரசியல் சக்தியினதும் பங்களிப்பின்றி அடிக்கல் நாட்டப்பட்டது,அழிக்கப்பட்ட நினைவுத்தூபி போன்ற சமாதானதூபி யாழ்பல்கலைகழக வளாகத்திற்குள்ளேயே அமைக்கப்படும் எனது உத்தரவின் பேரில் இது அமைக்கப்படும் இது சட்டவிரோத கட்டுமானமாக காணப்படாது கட்டுமான பணிகளை முன்னெடுப்பதற்கான அதிகாரம் பல்கலைகழகத்திற்குள்ளது எனவும் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
கட்டுமான பணிகளை முன்னெடுப்பதற்கு பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதியும், யாழ்மாநகர சபையின் அனுமதியும் அவசியம் புதிய தூபி பழைய தூபி போன்றே காணப்படும், ஆவணங்களில் சமாதான தூபி என அது அழைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதில் சமாதான நினைவுத்தூபியா? அல்லது யுத்தநினைவுத்தூபியா? என்பது போன்ற எழுத்துக்கள் பொறிக்கப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.