இலங்கையில் இயங்கும் 43 தீவிரவாத அமைப்புக்கள் !

43 தீவிரவாத அமைப்புகளை தடை செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்திவருவதாக தென்னிலங்கை ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

அனைத்து இலங்கை சலாபி கவுன்சில், இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் அனைத்து இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் ஆகியவை தடைப்பட்டியலில் அடங்கும் என்று கூறப்படுகிறது.

புலனாய்வுத்தகவல்கள் மற்றும் அறிக்கைகளின் அடிப்படையில் இந்த தடைகள் விதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படைகள் நீண்ட காலமாக இந்த அமைப்புகளின் மீது ஒரு கண் வைத்திருக்கின்றன, மேலும் அவர்களின் தீவிரவாத போதனைகள் மற்றும் சித்தாந்தங்கள் தேசிய பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன என்பதை சுட்டிக்காட்டியுள்ளன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *