இலங்கையில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 1,913 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதன்படி, நாளொன்றுக்கு பதிவான அதிகபட்ச கொரோனா நோயாளர்கள் நேற்றைய தினம் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 113,618 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதே நேரம் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்றையதினம் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 709 ஆக அதிகரித்துள்ளது.