தமிழ் இளைஞர் (முருகதாசன்) ஐக்கிய நாடுகள் சபையின் முன்பாக தீக்குளித்து மரணம்

murugathasan_.jpgசுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்பாக தமிழ் இளைஞர் ஒருவர் நேற்று தீக்குளித்து மரணமடைந்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் ஐக்கிய நாடுகள் சபையின் முன்பாக  திடீரென நேற்று வியாழக்கிழமை இரவு 8:15 தொடக்கம் 9:45 நிமிடம் வரையான நேரத்துக்குள் இளைஞர் தீக்குளித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் இளைஞரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  எனினும் இளைஞர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்து விட்டார்.

லண்டனில் இருந்து வந்த இந்த இளைஞரின் பெயர் முருகதாசன் எனவும் இவருக்கு 27 வயது இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர், 7 பக்கங்களுக்கு தாயக பிரச்சினை தொடர்பாக ஒரு மரண சாசனம் எழுதி வைத்து தீக்குளித்துள்ளார். முருகதாசன் தீக்குளித்த இடத்தில் மலர்கள் வைத்து மக்கள் வணக்கம் செலுத்தி வருகின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம்

நேற்று ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம் நடாத்தப்பட்டது. சுவிஸ் தமிழ் இளையோர்களால் குறுகிய காலத்துக்குள் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் ஒன்றுகூடலிற்காக ஐக்கிய நாடுகள் சபை முன்றலிற்கு தமிழ் மக்கள் அணிதிரண்டனர். ஈழத்தமிழரின் இன்னலைத் தீர்க்க சர்வதேச சமூகம் தலையிடக்கோரி 12.02.2009 வியாழக்கிழமை இரவு 08.30 மணியளவில் தீக்குளித்த பிரித்தானியாவில் வசித்து வந்த ஈழத்தமிழரான முருகதாசனிற்கு தமது மலர் அஞ்சலியைச் செலுத்தினர். கட்டுப்படுத்த முடியாத உள்ளுணர்வுகளினால் ஒன்றி நிற்கும் மக்கள் காவற்துறையினரின் தடைகளையும் மீறி ஐ.நாவின் பிரதான வாசலை முற்றுகையிட்டு உள்ளே செல்வதற்கு முயற்சித்த வண்ணம் இருந்தனர். அவர்களின் உணர்விற்கு மதிப்பளித்த காவல்துறையினர் பிரதான சாலையை மூடி உதவினர். இறுதியில் முருகதாசனின் மரண சாசனம் வாசிக்கப்பட்டு நிகழ்வு நிறைபெற்றது.

swiss_13_2_09-01.jpg

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

36 Comments

 • thurai
  thurai

  முருகதாசனின் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  ஈழத்தமிழர்களிற்காக குரல் கொடுப்பவர்கழும், உயிர் கொடுப்பவர்கழும் சிந்திக்க வேண்டியது. கொலைகளைச் செய்வதன் மூலமே ஈழவிடுதலை பெறமுடியுமென நம்புவர்கள் இன்னமும் தமிழர் மத்தியில் வாழும்போது, தற்கொலை செய்வதன் மூலம் ஈழவிடுதலை கிடைத்துவிடுமாவென்று.

  துரை

  Reply
 • THUNALLAI
  THUNALLAI

  1) சொந்த ஊர் துன்னாலை முதலாவது ஒப்பறேசன் லிபரேசன் நடவடிக்கை நடந்த இடம்.

  2) உலகின் முதலாவது தரை தற்கொலை தாக்குதல் நடாத்திய மில்லர் பிறந்த மண்.

  3) இலங்கையின் முதலாவது சனாதிபதி பிறேமதாசாவின் தற்கொலை தாக்குதல் நடாத்திய பாபுவின் உறவினன் என்று அறியமுடிகிறது.

  மண் பற்று உள்ள இந்த இளைஞன் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் இல்லை என்று உறுதியாக தெரியவருகிறது.
  ————

  1987 துன்னாலை மில்லர் ஆரம்பித்த தாக்குதல் தமிழ் வரலாற்றை மாற்றியது.

  1993 முதலாவது இலங்கையின் சனாதிபதி மிதான தாக்குதல் ஊடாக மில்லருக்கு புதிய வடிவம் அதே துன்னாலையானால் கொடுக்கபட்டது.

  2009 மீண்டும் துன்னாலை மண் களத்தில் இருந்து புலத் தமிழருக்கு ஒரு புதிய தாயக விடுதலைப் போராட்ட வடிவத்தை கொடுத்து தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு புலத்தில் புதிய வடிவம் கொடுத்துள்ளது.

  அன்ரன் பாலசிங்கத்தை உருவாக்கிய துன்னாலை கரவெட்டி மண் வரலாற்றை படைக்கும்.

  http://en.wikipedia.org/wiki/Thunnalai

  Reply
 • palli
  palli

  துரை பல்லியால் அனுதாபம் தெரிவிக்க முடியவில்லை. அதுக்கான காரனமும் பல்லிக்கு தெரியவில்லை. ஆனாலும் முருகேசனின் குடும்பத்தை யார் எனி பார்ப்பது? எவ்வளவு கனவுடன் முருகேசனை அவரது குடும்பம் ஈழத்தை விட்டு அனுப்பியிருப்பார்கள். தயவு செய்து அமைப்பு வேறுபாடுன்றி முட்டாள்தனமான விடயங்களுக்கு முற்றுபுள்ளி வைக்க முற்படுவோமா துரை.
  பல்லி.

  Reply
 • pannaadai
  pannaadai

  இன்னுமா ஊரும் பிரதேசமும் சாதியும் எப்ப உருப்படுவீங்க?
  அப்ப மில்லரைத் தவிர மற்றவனெல்லாம் என்னத்துக்கு இயக்கங்களில சேர்ந்து செத்தாங்க?

  அன்ரன் பாலசிங்கம் செத்தாப்பிறகு இங்க ஒண்ணும் நடக்கலியா?
  ஈழத்ததமிழரில கொஞ்சக் கிறுக்குப் பயலுகளும் திரியிறானுவ.

  துன்னாலை என்றால் என்ன பன்னாலை என்றால் என்ன
  மக்களுக்காக செத்தவன மதிக்கப்பழகுங்கப்பா!

  Reply
 • mutugan
  mutugan

  இந்த முருகதாசனின் கொலைக்கு புலம் பெயர் நாடுகளில் உள்ள தீபம் ஜிரிவி புதினம் ஆகியவற்றின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு தடை செய்யப்பட வேண்டும. ஏனென்றால் ஊடகங்களுக்கு செய்திகளை எப்படி மக்களுக்கு கொடுக்க வேண்டும், அதன் விளைவுகள் எப்படி இருக்க வேண்டும் என எழுதப்பட்ட, எழுதப்படாத விதிமுறைகள் உள்ளன. ஒவ்வொரு நாளும் இறந்த உடல்களையும் அழுகுரல்களையும் இரத்த வெள்ளத்தையும் மனிதத் தன்மையே அற்று தணிக்கை ஏதும் செய்யாமல் காட்டிக் கொண்டிருந்தால் முருகதாஸ் என்ன தான் செய்வார்.

  உளவியல் நிபுணர்களும் சமுதாய நலன் விரும்பிகளும் இந்த விடயத்தில் விரைந்து செயற்பட வேண்டும். இங்குள்ள சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு ஆவன செய்யப்பட வேண்டும்.

  புலம் பெயர் நாடுகளில் பிறந்து வளர்ந்த குழந்தைகளும் இரவில் கனவுகளில் குண்டு பொழிவதாகவும் ஆமி சுடுவதாகவும் அலறுகிறார்கள்.

  Reply
 • THUNALLAI
  THUNALLAI

  இவரது தாயார் தகப்பனார் அனைவரும் பிரித்தானிய குடியுரிமை. இந்த இளைஞனும் பிரித்தானிய குடியுரிமை பெற்றவர். மிகசிறுவயதில் பிரித்தானிய குடியுரிமை பெற்ற இந்த சிறுவன் சின்ன வயதிலேயே லண்டனுக்கு இபொன்சர் முறையில் வந்தவர். இவரது குடும்பத்தில் எவரும் இலங்கையில் இல்லை. பிரித்தானியாவில் கரோ பிரதேசத்தில் கென்டன் அல்லது இற்றன்மோர் பகுதியில் தயாருடன் வாழ்ந்த சிறுவன் தாயகத்தில் தொடரும் கொலைகளை பாக்க முடியாமல் இந்த முடிவை எடுத்துள்ளார்.

  Reply
 • THUNALLAI
  THUNALLAI

  நான் பிரதேசவாதமோ சாதியோ பேச வரல்லை. அந்த உறவின் வரலாற்றிற்கு பலம் சேர்க்கும் முகமாக ஒரு கோப்பாக இந்த தகவலை தர முயற்சித்தேன்.

  திலீபன் ஊர் எழு எண்டும் பல போராளிகள் அவர்களின் பிறந்த மண்னை சுட்டிகாட்டி தாயக பாடல்கள் பல இருக்குது. நண்பா பன்னாடை அப்ப என்ன அதை பாடிய புதுவை இரத்தினதுரையும் எழுதியவனும் சாதியும் ஊரும் சுட்டி காட்டவோ செய்தனுகள்.

  ———–
  எம்மினம் காத்திட உம்முயிரை தந்திரே உமக்கு எமது தலை சாய்த்து அஞ்சலிகள்.

  Reply
 • padamman
  padamman

  பயங்கரமான தற்கொலையை ஜரோப்பாவில் அறிமுகம் செய்துவைத்துள்ளார் இவர் தற்கொலை செய்ததால் தமிழ்ஈழம் கிடைக்கபோவதும் இல்லை ஜரோப்பியர் மத்தியில் இப்படிபட்ட தற்கொலை அருவருப்பைத்தான் எற்படுத்துமே தவிர அனுதாபதத்தை எற்படுத்தபோவது இல்லை புலிகளுக்குத்தான் இதைவைத்து தமிழர்மத்தியில் மாத்திரம் பிரச்சாரம் செய்து பணமும் சேர்க்கமுடியும்.

  Reply
 • mutugan
  mutugan

  “எம்மினம் காத்திட உம்முயிரை தந்திரே உமக்கு எமது தலை சாய்த்து அஞ்சலிகள்”

  இப்பிடியே மற்றவர்களை உருவேற்றிவிட்டு மூக்கு முட்ட சாப்பிட்டு விட்டு சமியாக்குணத்தில் வந்து பின்னூட்டம் விடுங்கோ.

  புதுவை ரத்தினதுரையும் அப்படித்தான். வயிற்று பிழைப்பிற்காக எழுதினார். இல்லையென்றால் தன்னுடைய பிள்ளையை இயக்கத்துக்கு விடாமல் ஏன் பிடித்துக் கொண்டு வந்தவர்?

  Reply
 • THUNALLAI
  THUNALLAI

  இந்த இளைஞனை பிரத்தியேகமாக அறிந்தவன் என்ற முறையில் கூறுகிறேன். வன்னியில் ஏற்பட்ட அவலத்தை தாங்கமுடியாது தற்கொலை செய்துள்ளான். தனக்காக இல்லை பிறருக்காக.

  ———————–

  இவன் குடும்பத்தில் செல்ல குழந்தை. சிறுவயதில் இருந்தே சொத்து சுகம். கல்வீடு சுற்று மதில் லண்டன் பவுன்டில் செலவு செய்து வாழ்ந்த குடும்பம். ஒரு இனத்திற்காக அனைத்து சொத்து சுகத்தையும் மறந்து தன்னை ஆகுதி ஆகியுள்ளான்.

  நான் யாரையும் இங்கு வசை பாட வரவில்லை. இவன் எந்த ஒரு அமைப்பையும் சாராதவன். எந்த ஒரு அரசியலையும் சாராதவன். எந்த ஒரு கட்சியையும் சாராதவன். எல்லா தமிழ் குழுக்களும் ஒரு தமிழ் தாயின் வயிற்றில் பிறந்தவர்களே அந்த அனைத்து தமிழ் குழுக்களின் தாய் மானம் காத்திட தமிழ் மானம் காத்திட அனைத்து தமிழருக்காவும்தான் இறந்தான் இவனது மரனத்தை அனைத்து தமிழரும் அரசியல் வேறுபாட்டை மறந்து ஏற்கவேண்டும். அவன் எந்த தமிழ் குழுவுக்கும் வேலை செய்தவனும் இல்லை ஆகவே அவனுடைய ஆம்மாவை மதியுங்கள்.

  Reply
 • mutugan
  mutugan

  ஏற்கனவே ஏராளமானவர்கள் அதை செய்து விட்டார்கள். நீர் அவசரப்படுவதைப் பார்த்தால் இன்னும் பலபேர் தீக்குளிக்க வேண்டும் என தூண்டுவீர் போலுள்ளது. வன்னி அவலத்தினை இந்த தற்கொலைகள் ஒருபோதும் தீர்க்காது. புலிகளிடம் பலம்? இருந்தபோது தீர்க்கத் தெரியாத அவலத்தை இனி எப்படி தீர்ப்பது. ஒரே வழி பிரபாகரன் …………….

  Reply
 • முதலாவது தரை தற்கொலை
  முதலாவது தரை தற்கொலை

  In 1972 in the hall of the Lod airport in Tel Aviv, Israel, three Japanese used grenades and automatic rifles to kill 26 people and wound many more.[63] The group belonged to the Japanese Red Army (JRA) a terrorist organization created in 1969 and allied to the Popular Front for the Liberation of Palestine (PFLP). Until then, no group involved in terrorism had conducted such a suicide operation in Israel. Members of the JRA became instructors in martial art and kamikaze operations at several training camps bringing the suicide techniques to the Middle East[citation needed].

  1980 to present
  The first modern suicide bombing—involving explosives deliberately carried to the target either on the person or in a civilian vehicle and delivered by surprise—was in 1981; perfected by the factions of the Lebanese Civil War.The first Black Tiger was Vallipuram Vasanthan, who drove a small truck laden with explosives into a Sri Lanka Army camp in Nelliady, Jaffna peninsula, on 5 July 1987.

  Reply
 • chandran.raja
  chandran.raja

  மனிதநாரீகத்தின் தொடர்சியான வளர்ச்சிதான் இன்றைய அரசியல். பேசுவது தர்க்கிப்பது தொடர்ந்தது பேசுவது அல்லது விவாதிப்பது. இதிலேயே சாணாக்கியத்தை வெளிப்படுத்த முடியும் திறமைமை காண்பிக்க முடியும்.உண்மையை வெளிக்கொண்டுவர முடியும். மக்களுக்கு அதை சொந்தமாக்க முடியும். இதையறியாதவன் பயங்கரவாதத்தால் அரசியலை அடையமுடிகிறான். இறுதியில் அழிந்தொழிந்தும் போகிறான். உயிரை அர்பணிபதும் ஈகம்செய்வதும் செய்யத்தூண்டுவதும் சட்டவிரோதசெயலே; பயங்கரவாதசெயலே.

  முருகதாஸ் தீ குளித்தான் என்றால் அவன் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறான். அவன் கனவுகள் நிராசையாகின விரக்தியுற்றான். இறுதியில் இந்தமுடிவை வலிந்துகொண்டான். யார் இந்த கனவுகளை விதைத்தவன்?
  தட்டுங்கள் திறக்கப்புடும்! உடையுங்கள் திறக்கப்படும்!! எரியுங்கள் திறக்கப்படும்!!! இந்த மூண்று வாக்கியத்தையும் ஒரே அர்த்தத்தில் கொள்ளமுடியுமா?

  Reply
 • puvanan
  puvanan

  முருகதாசன் கூறுவதாகச் சொன்ன இறுதி மந்திரமான “தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்” என்பது புலிகள் தம்மைத் தடைசெய்த உலக நாடுகளுக்குள் வேலை செய்வதில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மாற்றிய வாசகம் என்பது கவனிக்கத்தக்கது. தம்மோடு உலக நாடுகள் தேன்நிலவு செய்தபோது “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” அது முறிந்தபோது “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்று தாகங்கள் முகமூடியணிகின்றன. கூடவே இளைஞர்களைக் கொல்வதிலும் வெவ்வேறு முகமூடிகளைப் புலிகள் தேசியம் சூழலுக்கேற்றபடி தயாரிக்கிறது! முருகதாசனுக்குரிய முகமூடி:”பொதுமகன்”.

  சிறிரங்கன்-தமிழரங்கம்.
  யாராவது மறுக்க முடியுமா?

  Reply
 • chandran.raja
  chandran.raja

  உரியநேரத்தில் உரியநடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எல்லாம் விபரீத விழைவுகளாகவே வந்து முடியும். முருகதாஸ்சின் கொலைகளை போல் இன்னும் பலகொலைகள் நடந்தேறப்போகின்றன. முருகதாஸின் கொலைக்கு குற்றவாளி யார்? அவன் மனத்தில் விஷவிதையை விதைத்தவன் யார் ?
  முதுகனின் முதல் பின்னோட்டத்தைப் பாருங்கள். அவர்களே குற்றவாளி. அவர்களை இனியும் அனுமதிப்பது எம்மை எம்இனத்தை மேலும் சிறுமைப்படுத்துவதாகும். எமது இனம் காட்டாற்று வெள்ளத்தில் அடிபட்டு இழுபட்டு போய்கொண்டிருக்கிறது இதை தூக்கி கரைசேர்த்து நிறுத்தவது எதிர்நீச்சல் தெரிந்தவர்கள்லாலேயே சாத்தியப்படகூடியது ஒன்று.

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  முதலில் உயிர் துறந்த அந்த இளைஞனுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது அனுதாபங்கள். ஆனால் இப்படியான நடவடிக்கைகளை ஒருபோதும் நான் ஆதரிக்க மாட்டேன். குறிப்பிட்ட இந்த இளைஞன் பிரித்தானியாவிலிருந்து சுவிற்சர்லார்ந்து வந்து தீக்குளித்ததால் எந்தவித நன்மையும் ஏற்பட்டு விடவில்லை. ஆனால் மாறாக சுவிற்சர்லார்ந்துப் பொலிசார் அங்கு வாழும் தமிழர்கள் மத்தியில் கெடுபிடிகளை அதிகரித்துள்ளனர்.( உதாரணமாக தற்பொழுது ஜெனீவா வரும் தமிழர்களை முற்றுமுழுதாக சோதனைகளுக்கு உட்படுத்துகின்றார்கள்.) பொதுவாகவே சுவிற்சர்லார்ந்தில் உண்ணாவிரதமிருப்பது, தீக்குளித்தல் போன்றவற்றை மிகவும் வெறுப்பதுடன் இவற்றைக் கிரிமினல் குற்றங்களாக கருதுபவர்கள் அந்நாட்டு மக்கள்.

  மேலும் துன்னாலை எனும் பெயரில் எழுதுபவருக்கு ஒரு தகவல்:

  2) உலகின் முதலாவது தரை தற்கொலை தாக்குதல் நடாத்திய மில்லர் பிறந்த மண்.

  நீங்கள் புத்திசாலித்தனமாக எழுதுவதாக நினைத்துக் கொண்டு முதலாவது தரைத் தற்கொலைத் தாக்குதல் என்று புகுத்தலை மேற்கொண்டுள்ளீர்கள். தற்கொலைத் தாக்குதலை எவரும் தரை, கடல், ஆகாயம் என்று பிரித்து எழுதுவதில்லை. 2வது உலக மகா யுத்தத்தின்போது யப்பானிய போர் வீரர்கள் தம்முடன் குண்டுகளை இணைத்துக் கொண்டு எதிரி நாட்டுப் போர்க்கப்பல் மீது குதித்து தற்கொலைத் தாக்குதல் நடாத்தினார்கள். இவர்களும் குண்ணுடுகளைத் தம்முடன் இணைத்துக் கொண்டு தரையிலிருந்து புறப்பட்டவர்கள் தான். இவர்கள் தான் உலகின் முதலாவது தற்கொலைத் தாக்குதல் நடாத்தியவர்கள். நீங்கள் கொஞ்சம் உலகத் தகவல்களையும் அறிய முயற்சியுங்கள்.

  Reply
 • BC
  BC

  Puvanan, chandran.raja, mutugan சொன்ன கருத்துகள் மிக சரியானவை. தமிழர் நலன் மீது அக்கறையுள்ளவர்களால் கவனிக்கபட வேண்டிய விடயங்கள்.
  //புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” அது முறிந்தபோது தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்று தாகங்கள் முகமூடியணிகின்றன.//
  உண்மை.

  Reply
 • ajeevan
  ajeevan

  முருகதாஸுக்கு எனது கண்ணீர் அஞ்சலி

  இந்த விதமான போராட்டம் தவிர்க்கப்பட வேண்டும். இவை புலம் பெயர் நாடுகளில் பல பாதிப்புகளை எதிர்காலத்தில் நம் சமூகத்துக்கு உருவாக்கும். அதை இங்கு கேட்க முடிகிறது. முருகதாஸின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் நிலையில் நான் இல்லை. இருந்த போதிலும் வன்முறையற்ற சமூகமாக புலம்பெயர் நாடுகளில் பெயர் பெற்றிருக்கும் தமிழ் சமூகம் வன்முறை சமூகமாக பெயர் பெற இங்கே வைத்துவிடும் நமது நியாயமான போராட்டங்களுக்கு கிடைக்கும் அனுமதிகளும் சிலவேளை தடைப்படலாம். ஏற்கனவே சிலதடைகளை நீக்குமாறு வேண்டுகிறோம். அதற்கான சந்தர்ப்பத்தைக் கூட இவ்வாறான செயல்கள் இல்லாமலாக்கிவிடும்?

  புலம்பெயர் ஊடகங்களும் செய்திகளை கொடுப்பதாக நினைத்து தொடர்ந்து தணிக்கையே இன்றி கொண்டுவரும் படங்கள் ஒளிப்படங்கள் குழந்தைகளை பெரிதும் பாதிக்கிறது. இதை நான் சொல்லி நீங்கள் தெரிய வேண்டியதில்லை?

  சாதாரணமாகவே நம்மவர் தொலைக் காட்சிகளில் பகலில் காட்டும் போர் அவலம் போன்ற படங்கள் இங்குள்ள (மேலத்தேய) தொலைக் காட்சிகளில் இரவு நேரங்களில் அதுவும் குழந்தைகள் தொலைக்காட்சிகளை பார்க்காத நேரங்களிலே (வன்முறை சார்ந்த திரைப்படங்கள், நிகழ்சிகள் உட்பட) ஒளிபரப்பப்படுகின்றன.

  நாம் காலை முதலே அதை ஒளிபரப்புகிறோம். குழந்தைகள் அவற்றை பார்க்கின்றன. இவற்றின் தாக்கத்தால் உங்கள் குழந்தைகள் கூடவீட்டிலேயே இதுபோன்ற ஒரு நிலைக்கு தள்ளப்படலாம். நாமே மன அழுத்தங்களில் தவிக்கிறோம். அதற்காக செய்திகளை தவிர்க்கச் சொல்லவில்லை.

  சதாம் அவர்களை தூக்கிலிட்டதை பார்த்து சில குழந்தைகள் இறந்த அவலத்தை எம்மால் இன்றும் மறக்க முடியாது? பெரியோரும், சான்றோரும் இது குறித்து சிந்திக்க வேண்டுகிறேன்? ஊடகங்கள் பொழுது போக்கு சாதனங்கள் மட்டுமல்ல பொறுப்பானதும் கூட

  எமது உரிமைக்கான போராட்டத்தில் தவறில்லை. அது ஒவ்வொருவரது கடமை. ஆனால் இங்கு கற்று பணி செய்து எமது மக்களுக்கு வழி காட்ட வேண்டிவர்களது வழி காட்டல் தவறாகலாகாது. இவை இனி தொடரலாகாது என இறைவனை வேண்டுகிறேன்.

  முருகதாஸனது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

  Reply
 • sithartan
  sithartan

  சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் 12.02.2009.இல் தீக்குளித்து இறந்த தமிழ் இளைஞரின் மரணமானது புலிகளால் திட்டமிட்டு செய்யப்பட்ட செயலாகும்!! கி.பாஸ்கரன்- சுவிஸ்.

  வன்னியில் படையினரால் மேற்கொள்ளப்படும் புலிகளுக்கு எதிரான கடைசிகட்ட போரை நிறுத்துவதற்காக புலி இயக்கத்தால் திட்டமிட்டு செய்யப்பட்டது தான் இந்த தீக்குளிப்பு போராட்டமாகும். இந்த தீக்குளிப்பு போராட்டமானது கிட்டதட்ட வன்னியில் உள்ள அப்பாவி இளஞர்களை மூளைச்சலவை செய்து தற்கொலை தாக்குதல் நடத்துவதற்கு சமமானதாகும்……………………

  முருகதாஸால் எழுதப்பட்டதாக சொல்லப்படும் மரணசாசனம் வெளிநாட்டில் உள்ள புலி முகவர்களால் தயாரிக்கப்பட்டு முருகதாஸை தீக்குளிக்க வைத்து அவரின் படத்துடன் பிரசுரித்து படம் காட்டியிருக்கிறார்கள். இது ஒரு திட்டமிட்ட புலி இயக்கத்தின் செயலாகும் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. சுவிஸ் பொலிசார் இதைபற்றி முழுமையாக விசாரிப்பார்கள் என நம்புகிறோம்.. இவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தற்கொலை செய்யும்படி தூண்டப்பட்டாரா? (கொலை செய்யப்பட்டாரா?) என்பது குறித்து சுவிஸ் பொலிசாரால் முழுமையாக விசாரிக்கப்படும் பட்சத்தில் தான் இந்த செயல்களின் சூத்திரதாரிகள் கட்டாயம் கைது செய்யப்படுவார்கள். அப்பொழுது தான் உண்மை வெளிவரும்! இதோடு புலி இயக்கத்துக்கு சுவிசில் மரணசாசணமும் எழுதப்படலாம்.. எழுதப்பட வேண்டும்!!— athirady.com

  Reply
 • ஜெனிற்ரா
  ஜெனிற்ரா

  ஈழவிடுதலைப் போராட்டத்தில் சிவகுமாரன் தொடக்கி வைத்த நஞ்சுக்குப்பிக் கலாச்சாரத்தை அடித்தளமாகக் கொண்டேதான் புலிகளின் போராளிகளும் வளர்க்கப்பட்டார்கள் என்ற உண்மையை நாம் முதலில் தெரிந்தாக வேண்டும்.

  உயிருடன் எதிரியிடம் பிடிபடக்கூடாது என்பதை முன்நிறுத்தி ஒவ்வொரு போராளியும் கட்டாயத் தற்கொலைக்கு தள்ளப் படுகிறார்கள். மக்ககளின், நாட்டின் விடுதலைக்காகப் போராட அர்ப்பணிப்போடு புறப்பட்ட போராளியை இறுதிவரை உறுதியுடன் போர் புரிய கருத்துறுதியுடன் வளர்த்தெடுக்க வேண்டுமே தவிர கழுத்தில் மரணக் குப்பியை அணிவித்து, இதுவே உனது உயிர்வாழும் காலத்தின் எல்லையென ஒரு சுருங்கிய உலகத்தை சுமந்துகொண்டே அந்தப் போராளியின் சிந்தனையில் சுயவன்முறை மரபை திணித்து களமனுப்பி விடுகிறார்கள். கியூபாப் புரட்சியை முன்னெடுத்து வெற்றியும் பெற்றார்களே அந்தப் போராளிகள் நஞ்சுக் குப்பியுடனா அலைந்தார்கள்? சேகுவேரா எதிரியிடம் பிடிபட்டாரே தோழர்களைக் காட்டியா கொடுத்தார்…?

  நமது தேசத்தின் விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பங்களைக் கவனியுங்கள்: முதல் தற்கொலை சிவகுமாரன். இந்தத் தற்கொலைக் கலாச்சாரம் வெளிப்படுத்துவது எதை என்றறிய ஒரு சின்ன சம்பவம் மட்டும்:- எதிரியின் கப்பலையோ, கவச வண்டியையோ தற்கொலையாளி தாக்கி அழிக்கும்போது அந்த நெருப்பு ஜூவாலையைப் பார்த்து வெற்றிக்களிப்பில் துள்ளிக் குதிக்கின்றனர் ஏனைய போராளிகள். அதே வேளை அங்கே வெடித்துச் சிதறியது தன்னோடு ஒன்றாகவே பாசறையில் உண்டு உறங்கி இன்பதுன்பத்தில் பங்கெடுத்த ஒரு சக போராளி என்ற எந்தவித துயர வெளிப்படுத்தலும் இல்லை. இதையேதான் புலம்பெயர் நாடுகளிலுமுள்ள புலிரசிகர்கள் (மன்னிக்க வேண்டும். என்னால் இப்படித்தான் சொல்ல முடியும்) ”கரும்புலித்தாக்குதலில கனக்க ஆமிக்காரர் சரியாம். கடற்படை சரியாம், எக்கச்சக்க ஆயுதங்களாம் பொடியள் எடுத்தது” என்று துள்ளுகிறார்களே தவிர அந்தக் கரும்புலி என்ற மனிதத்தைப் பற்றியோ, உயிரைப் பற்றியோ, அவனது குடும்பத்தைப் பற்றியோ அந்தக் குடும்பத்தின் வாழ்வாதாரங்கள் பற்றியோ யாராவது பிராஸ்தாபிக்கவோ,; கரிசனைப் பட்டதாகவோ கேட்டதுண்டா.

  அதேபோல் பிரபாவின் முதல் அரசியற் படுகொலை துரையப்பா.
  எந்த நீதி விசாரணையின் பின் இவர் துரோகி என்று கொல்லப்பட்டார் யாராவது சொல்ல முடியுமா? ஆனால் இவர் மக்களுக்குச் செய்த நன்மைகளை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். யாழ்.நகரத்தைக் கட்டியெழுப்பியது மட்டுமல்ல, வடமாகாணத்திலுள்ள எங்கள் கரையோரக் கிராமங்களும், மீனவ மக்களும் சுபிட்சமான வாழ்வை அடைவதற்கான திட்டங்களைச் செய்து தந்தார். யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு (இன்றைய பலிக்களம்), நாயாறு, நாச்சிக்குடா, மன்னார் என்று வெளிமாவட்டங்களெல்லாம் சென்று தொழில் புரியும் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்தாரென இன்றும் எமது உறவினர்கள் சொல்வார்கள். நகரசுத்தித் தொழிலாளர்களின் வாழ்வு மேம்பட எத்தனை திட்டங்களைச் செயற்படுத்தினார். தரப்படுத்தல் தரப்படுத்தல் என்று வாய் கிழியக் கத்துகிறோமே, யாழ்ப்பாணத்துக்குள் உயர்சாதி மேலாதிக்கம் தாழ்த்தப்பட்ட எம்மைப் போன்ற மக்களுக்கு கல்வி கற்கும் உரிமையைத் தந்தீர்களா? தரவில்லையே…?! சிங்களவனாவது தரப்படுத்தினான், நாங்கள் எங்களிடமிருந்த சிறுபான்மையினருக்கு ஒட்டு மொத்தமாகவே கல்வியை மறுத்தோம். ஆனால் துரையப்பா இந்த ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி மேம்பாட்டுக்காக பல காரியங்களைச் செய்தார். இன்று நான் இங்கு உங்களோடு தேசத்தில் பேசுகிறேனென்றால் எங்கள் கரையோரக் கிராமங்களுக்கு துரையப்பா ஏற்படுத்தித் தந்த கல்விதான். சரி. நான் வேறேதோ சொல்ல வந்து வேறு எதையோ சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

  தற்போது நடைபெற்று வரும் இந்த முத்துக் குமார் ஆரம்பித்து வைத்த இந்த சுய எரியூட்டல் (சுய இம்சை) மரணங்களை எக்காரணம் கொண்டும் யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது.

  1.உயிர் ஈகம் செய்ய ஒரு அசுரத் துணிவு வேண்டும்.
  2.இதை வெறும் உணர்ச்சிவசம் என்று சொல்ல முடியாது.
  3.உலகத்தின் முகத்தில் ஓங்கி அறைவது.
  4.இது ஒரு கலக வெளிப்பாடு.
  5.……
  6.…..
  இப்படி எத்தனையோ பட்டியலிட்டு நாம் அடுக்கிக் கொண்டு போனாலும். இத் தற் கொலைகள் வெளிப்படுத்தி நிற்கும் ஆழமான அரசியல் என்பதை நாம் ஆராயவேண்டியவர்களாகவே இருக்கிறோம். இதுவுமொரு வன்முறைக் கலாச்சாரம் என்றே நான் கருதுகிறேன். முடிந்தால் இதுபற்றிய விவாதங்களை இந்த சமயத்தில் தொடங்கி வையுங்கள் நண்பர்களே. இது இப்போ மிகத் தேவையானது என்றும் நினைக்கிறேன். எனக்கு பெரிய அரசியல் ஆய்வுத் திறனோ, அறிவுத் திறனோ இல்லை. எனது மூத்த சகோதரர்களிடமிருந்து கிடைத்த அனுபவங்களையும், அவர்கள் விட்டுச் சென்ற நூல்களையும் கொஞ்சம் படித்ததைத் தவிர வேறெதுவும் என்னிடமில்லை. நான் ஏதாவது தவறாகச் சொல்லியிருந்தால் சுட்டிக் காட்டுங்கள். தொடர்ந்து விவாதிப்போம். தேசத்தில் விவாதிப்பவர்கள் எல்லாம் என்னைவிட வயதிலும் அறிவிலும் பெரியவர்கள் என்பது எனக்குத் தெரியும். எனது தவறான கருத்துக்களைச் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்வேன்.

  ஜெனிற்ரா-

  Reply
 • ஜெனிற்ரா
  ஜெனிற்ரா

  மிக முக்கியமானதொரு விடயம்.

  புலம்பெயர்ந்த நாடுகளில் இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ் வெகுஜன ஊடகங்கள் இன்று செய்துவரும் சமூக விரோதச் செயலை நாம் நிச்சயம் கண்டித்தேயாக வேண்டும். எந்தவிதமான ஒரு தணிக்கைக்கும் உட்படுத்தாமல் ஒழுகிய இரத்தமும்> சிதறிய> கருகிய மனித உடல்களும் என்று அந்தந்தப்படிக்கே தொலைக் காட்சியிலும்> இணையத்தளங்களிலும் வெளியிடுகிறார்கள். இங்கே இந்த ஊடகங்களை இளையவர்கள்> இதய பலவீனமானவர்களும் பார்ப்பார்களே என்ற எந்தக் கரிசனையும் இல்லை. சமூக ஊடகவியல் என்றால் என்ன என்ற குறைந்தபட்ச அறிவுகூட இல்லாத இவர்களையெல்லாம் ஊடகம் நடாத்தும்படி யார் அனுமதித்தார்கள். மன அழுத்தங்களை உருவாக்கி இன்னும் எத்தனை பேரைத்தான் தியாகம் என்னும் பெயரால் கொல்லப் போகிறார்கள். திட்டமிட்ட இந்த நாசகார வேலைகளைச் செய்வதில் ஈடுபட்டுள்ள இந்த தமிழ் ஊடகங்களை நிறுத்தச் சொல்லுங்கள் தயவு செய்து.

  இவர்களெல்லாம் ஊடகவியலைச் சரிவரக் கற்றிராதவர்கள் என்பது தெளிவாகின்றது. ஊடகவியல் அறிவற்றவர்களை இப்படி சமூக ஊடகங்கள் நடாத்தும்படி அனுமதி வழங்கப் படுவது எதன் அடிப்படையில் என்பது உண்மையிலேயே எனக்குப் புரியவில்லை.

  -ஜெனிற்ரா-

  Reply
 • THUNALLAI
  THUNALLAI

  Swiss police: Tamil commits self-immolation at UN
  http://www.msnbc.msn.com/id/29193968/

  Reply
 • கல்வீடு கனகசபை
  கல்வீடு கனகசபை

  இவன் குடும்பத்தில் செல்ல குழந்தை. சிறுவயதில் இருந்தே சொத்து சுகம். கல்வீடு சுற்று மதில் லண்டன் பவுன்டில் செலவு செய்து வாழ்ந்த குடும்பம்.—THUNALLAI

  ஒரு உயிர் இந்த நிலையில் இறக்கும் போது, எவ்வாறு துடிக்கும் என்பதை மனிதாபிமானமுள்ள அனைவரும் அறிவர்- அவர் ஆன்மாவை மதிப்பர். கல்வீடு இல்லாத ஏழை குழந்தையின் (வன்னியில் காணும்) உயிருக்கு மதிப்பில்லையா?, பிரச்சார ஊடகங்கள் தொலைத்தொடர்பு வளர்ச்சிகளைப் பயன்படுத்தி, இளம் மனதில் ஏற்ப்படுத்தும் தாக்கத்தின் விளைவான இதனால், ஏற்ப்பட்ட “அரசியல் வெளிப்பாடு” என்ன?. எதை நோக்கி கோரிக்கை விடுக்கிறீர்கள்.

  Reply
 • puvanan
  puvanan

  இவரது தாயார் தகப்பனார் அனைவரும் பிரித்தானிய குடியுரிமை. இந்த இளைஞனும் பிரித்தானிய குடியுரிமை பெற்றவர். மிகசிறுவயதில் பிரித்தானிய குடியுரிமை பெற்ற இந்த சிறுவன் சின்ன வயதிலேயே லண்டனுக்கு இபொன்சர் முறையில் வந்தவர். இவரது குடும்பத்தில் எவரும் இலங்கையில் இல்லை. பிரித்தானியாவில் கரோ பிரதேசத்தில் கென்டன் அல்லது இற்றன்மோர் பகுதியில் தயாருடன் வாழ்ந்த சிறுவன் தாயகத்தில் தொடரும் கொலைகளை பாக்க முடியாமல் இந்த முடிவை எடுத்துள்ளார்.

  கல்வீடு பிரிட்டிஸ் பிரஜா உரிமை செல்வச் செழிப்பு இவைதானா தற்கொலை செய்வதற்கான தகுதிகள்? நாங்கள் வேறு அதை போற்றிக் கொண்டாட வேண்டுமா?

  இந்த முடிவை அவர் எடுக்க காரணமானவர்களில் உடனடியாகவும் அவசரமாகவும் இங்குள்ள தமிழ் ஊடகங்களின் மீது சட்ட நடவடிக்கை எடுங்கள். புண்ணியமா போகும்.

  Reply
 • Nantha Sri
  Nantha Sri

  Dear Friends her er Émile Durkheims teoriy about Sucide. This is over 150 years old. But still you can use to understand Why people do sucide:
  we have many new teories but this claciale.

  Durkheim stated that there are four types of suicide.
  Egoistic suicides
  Egoistic suicides are the result of a weakening of bonds integrating individuals into the collectivity: in other words a breakdown of social integration. It is symptomatic of a failure of economic development and division of labour to produce Durkheim’s organic solidarity. The remedy lies in social reconstruction.

  Altruistic suicides
  This occurs in societies with high integration, where individual needs are seen as less important than the society’s needs as a whole. As individual interest was not important, Durkheim stated that in an altruistic society there would be little reason for people to commit suicide. He stated one exception; if the individual is expected to kill themselves on behalf of the society. Various examples of this type of suicide would be suicide bombers who are willing to take their lives for their religions or a Japanese samurai committing suicide (seppuku) as a service to his/her feudal lord.

  Anomic suicides
  Anomic suicides are the product of moral deregulation and a lack of definition of legitimate aspirations through a restraining social ethic, which could impose meaning and order on the individual conscience. This is symptomatic of a failure of economic development and division of labour to produce Durkheim’s organic solidarity. The remedy lies in social reconstruction.

  Fatalistic suicides
  This type of suicide seems to occur in overly oppressive societies, causing people to prefer to die than to carry on living within their society. This is an extremely rare reason for people to take their own lives, but a good example would be within a prison; people prefer to die than live in a prison with constant abuse.
  ——————-

  Medical causes-
  that serious depression can lead to specific changes of the DNA in the human brain. Those changes affected on the genes’ activeness, which lead to pathological psychological disturbances.
  suicide victims at the time of their death with the total figure ranging from 98%[30] to 87.3%[31] with mood disorders and substance abuse being the two most common. A person diagnosed with schizophrenia may commit suicide for a number of reasons, including because of depression. Suicide among people suffering from bipolar disorder is often an impulse, which is due to the sufferer’s extreme mood swings (one of the main symptoms of bipolar disorder), or also possibly an outcome of delusions occurring during an episode of mania or psychotic depression. Major depressive disorder is associated with a higher than average rate of suicide, especially in men.Situvation i Sri Lanka, can play a roll in this sucide.

  I think He is suffering from bipolar disorder. bipolar disorder, is often an impulse, which is due to the sufferer’s extreme mood swings . so …

  Reply
 • கல்வீடு கனகசபை
  கல்வீடு கனகசபை

  /possibly an outcome of delusions occurring during an episode of mania or psychotic depression.Major depressive disorder is associated with a higher than average rate of suicide, especially in men.Situvation i Sri Lanka, can play a roll in this sucide.I think He is suffering from bipolar disorder. bipolar disorder, is often an impulse, which is due to the sufferer’s extreme mood swings . so …/– Nathan Sri.

  திருமதி ரஜனி திரணகம எழுதிய “முறிந்த பனை” என்ற நூலில், விடுதலைப் புலிகளை “PSYCHOPATH” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது இலங்கை தமிழ்ச் சமுதாயத்திற்குள்ளேயே, ஆரம்பத்திலிருந்து, விடுதலைப் புலிகளின் நடைமுறையை அங்கீகரிக்கவில்லை. இந்த அங்கீகாரமின்மைதான் வளர்ந்து உலக அளவில் பரவி நிற்கிறது. புலிகளும் தங்களை நியாயப் படுத்தாமல் இவர்களின் அங்கீகாரத்தை வேண்டியே முயன்றிருக்கிறார்கள், அதற்கு “கல்வீடு இந்தியர்களை?” வக்காலத்துக்கு கூப்பிட்டு நிறுத்தியிருக்கிறார்கள் (சமுதாய உறவுகளை வளர்க்காமல்), இதை “பெட்டிஷன் பேர்வழிகள்”, “HOUSEMAID APPLICATION” போல் பார்த்திருக்கிறார்கள். ஆனால் திராவிட நாட்டிற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன என்பதும், இலங்கையில் இனப்பிரச்சனை ஒன்று உள்ளது என்பதும் சரியாக கையாளப்படவில்லை. உணர்ச்சிக் கொந்தளிப்பால், இந்தியாவுக்கெதிரான, வன்முறையாக தற்போது திசை திருப்பப்படுகிறது. இவையனைத்தையும் “SUPER-EGO DELUSION” என்ற “psychotic depression” (கல்வீடு மனோநிலை) கீழ் ஒழுங்கு படுத்திவிடலாம். புலிகள் இராணுவ மட்டத்தில் தவறிழைக்கவில்லை ஆனால், இராஜதந்திர மட்டத்தின் தவறுதல்களை சரிக்கட்ட இராணுவரீதியில் அநியாயம் செய்திருக்கிறார்கள். இராஜதந்திர மட்டத்தில் ஏன் தவறு நடந்தது என்பது “முறிந்த பனைக்கே வெளிச்சம்”!!.

  Reply
 • THUNALLAI
  THUNALLAI

  இந்த இழைஞனின் உடல் ஜரோப்பிய நாடு எங்கும் அரசியல் வேறு பாடுகளை மறந்து எடுத்து செல்லபடல் வேண்டும் என்பது எனது கருத்து.

  இலங்கையில் அனைத்து தமிழரும் அடக்குமுறைக்கு எதிராகவே போராட புறபட்டவர்கள் காலபோக்கில் ஏன் ஆயுதம் ஏந்தினோம் என்று தெரியாமல் பொது எதிரியை இனங்காண தவறியதால் பல விபரீதி நிகழ்வுகள் நடந்து இண்று பல குழுக்களாக பிரிந்தாலும் ஜரோப்பாவில் தமிழ் ஒண்ற ஒரு குடையில் அனைவரும் இணைந்து இந்த இழைஞனின் தியாகத்தை மதிக்க வேண்டும். பிரித்தானியாவில் சட்ட துறையில் பட்டபடிப்பு முடித்ததாக ஏ.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

  Reply
 • Nantha Sri
  Nantha Sri

  Mr. Tunnalai!
  Now the tamils in india, Malay and Europe is facing the Epidemical sucide trdagedie. You want many tamil youth, do the same ting like Mr. Murugathasan? Is inn it? You and many tamils like you need help fram mentel helth service. Pleace contact near the office,,,,

  Reply
 • thurai
  thurai

  //இந்த இழைஞனின் உடல் ஜரோப்பிய நாடு எங்கும் அரசியல் வேறு பாடுகளை மறந்து எடுத்து செல்லபடல் வேண்டும் என்பது எனது கருத்து.//

  தன்னைத் தானே எரியூட்டிக்கொழுத்தும் தமிழன், தற்கொலை படைத்தமிழன், மனிதனிற்கு மதிப்புக்கொடுக்கத் தெரியாத தமிழன், பணத்திற்காக் 10 ஆயிரம் மைல்கள் கடந்து வந்ததமிழன். மாவீரர்களை உலகெங்கும் உருவாக்கி தமிழீழப்போராட்டம் நடத்தவிருக்கும் தமிழர்.
  துரை

  Reply
 • BC
  BC

  //THUNALLAI – இந்த இழைஞனின் உடல் ஜரோப்பிய நாடு எங்கும் அரசியல் வேறு பாடுகளை மறந்து எடுத்து செல்லபடல் வேண்டும்.//
  அப்படி செய்வது இவரின் செயலை தொடர்ந்து செய்யும் படி மற்றவர்களை தூண்டுவதாக தான் அமையும்.

  Reply
 • accu
  accu

  முருகதாஸின் குடும்பத்தார்க்கு என் அனுதாபங்கள். இவரின் இறப்பில் நிச்சயமாக புலிகளின் பின்னணி உண்டு. இவர் புலி அங்கத்தவர் இல்லாவிடினும் ஆதரவாளர் என்பதற்க்கு அவரின் கடிதத்தில் சான்றுகளுண்டு. இன்று வன்னியில் நடக்கும் கொடுமைகளின் மிக முக்கிய பங்குதாரிகளான புலிகளை இவர் ஒரு வார்த்தையேனும் கண்டிக்கவோ அன்றி அவ்ர்களின் பிழையான அணுகுமுறைகளை சுட்டிக்காட்டவோ தவறிவிட்டார். இவரின் இந்தப் பிழையான செயல்பாடு மூலம் சட்டத்துறையில் பட்டம் பெற்றவர் என்னும் திறமையும் அல்லவா அடிபட்டுப்போய்விட்டது.
  துன்னாலை என்ற பெயரில் நண்பரே! உங்களின் பின்னூட்டங்களை வாசிக்கும்போது எனக்கு எதுவுமே புரியவில்லை! இப்படிப்பட்டவர்கள் இன்னுமா இருக்கிறார்கள் என்று ஆச்சரியமாய் உள்ளது? பலர் உங்களின் தவறுகளை சுட்டிக்காட்டியும் புரியாமல் ஏன் மீண்டும் மீண்டும் இப்படி எழுதுகிறீர்கள்? அவர் உங்களின் ஊர் என்பதால் இந்த உன்னலா? அன்றி அங்கே வன்னியில் ஒரு மூலையில் அப்பாவி மக்களை ஒருத்தன் ஆயுதமுனையில் அடக்கிவைக்க இன்னொருத்தன் குண்டு போட்டு தினமும் நூற்றுக்கணக்கில் கொன்று குவிப்பதை விட தனது விருப்பத்துடன் இந்த இளைஞன் முட்டாள்தனமாய் எடுத்த முடிவு உங்களை பாதித்துவிட்டதா? தயவு செய்து விடுங்கையா! நன்றி.

  Reply
 • puvanan
  puvanan

  ஜரோப்பாவில் தமிழ் ஒண்ற ஒரு குடையில் அனைவரும் இணைந்து இந்த இளைஞனின் தியாகத்தை மதிக்க வேண்டும் என ஏ.பி செய்தி நிறுவனமுமா கேட்டுக் கொள்கிறது.

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  சில இளைஞர்களை மூளைச்சலவை செய்து அவர்களுக்கு மன அழுத்தங்களை ஏற்படுத்தி, இப்படியான தீக்குளிப்புகளை குறிப்பிட்ட சிலரே செய்விக்கின்றனர். இந்த இளைஞனைப் பற்றிய விபரத்தை சுவிஸ் பொலிசார் கூட அறிந்து கொள்வதற்கு முதல், குறிப்பிட்ட அமைப்பைச் சார்ந்தவர்கள் இவர் பற்றிய படங்கள் விபரங்களை சில ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தி உடனடியாக ஐ.நா முன்பாக ஒன்று கூடும்படி அறிவிப்பும் செய்திருந்தார்கள். இதிலிருந்தே இப்படியான தீக்குளிப்புகளின் பின்னணிகளை சிலர் தம்மை அறியாமலேயே வெளிப்படுத்தி விடுகின்றனர். மகன் இறந்த செய்தி தாய் தந்தைக்குக் கூட வெள்ளிக்கிழமை மதியத்திற்குப் பின்னரே தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த இளைஞனின் இறப்பை வெள்ளிக்கிழமை காலையே விளம்பரமாக்கி விட்டார்கள். இந்த விடயத்தில் இன்று ஐரோப்பாவில் வாழும் ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகள் விடயத்தில் மிகவும் அவதானமாக இருப்பது அவசியமாகின்றது. இன்று வன்னியில் தோல்வியின் விளிம்பில் நிற்பதால், தம்மை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்ற நப்பாசையில் உலகில் தமிழர்கள் வாழும் இடங்களிலெல்லாம் (குறிப்பாக தமிழகம் மற்றும் ஐரோப்பிய நாடுகளில்) தமிழர்களின் நிம்மதியைக் கெடுத்து தமது நிலையிலேயே அவர்களையும் வைவத்திருக்க வேண்டுமென்றே செயற்படுகின்றார்கள். இப்படியான செயற்பாடுகளினால் ஐரோப்பாவில் வாழும் அனைத்துத் தமிழர்களும் பயங்கரவாதிகள் என்ற பெயரையே ஏற்படுத்தப் போகின்றார்கள்.

  Reply
 • thamilan
  thamilan

  இதில் பின்னுhட்டம் எழுதியூள்ள பெரும்பாலானோர் தமது அடையாளங்களை மறந்து தமது கருத்துக்களை இங்கு பதிவூ செய்துள்ளதை பார்த்து எனது மனம் மிகவூம் வேதனைப்படுகிறது. எனது பெயர் தமிழன் நான் எனது சொந்த நாட்டில் நித்தமும் சிங்கள இராணுவத்தால் ஏவப்படும் பீரங்கிக் குண்டுகள் கொத்துக்குண்டுகள் இரசாயனக்குண்டுகள் பல்குழல் எறிகணைகள் மூலமும் எதிரியால் மேற்கொள்ளப்படும் பொருளாதார மற்றும் மருந்துத்தடைகளாலும் பட்டினி மற்றும் நோயால் செத்துக்கொண்டிருக்கும் எனது மக்களின் மத்தியில் இருந்தும் இவர்களை இந்த கொலைவெறி இராணுவத்தின் பிடியிலிருந்து காப்பதற்காக ஒருகண் நித்திரையோ சரியான உணவோ இன்றி தமது இரத்தத்தையூம் வியர்வையூம் சிந்தி இந்தியா பாகிஸ்தான் சீனா போன்ற நாடுகளால் ஊட்டம் பெற்றுள்ள எதிரியூடன் நித்தமும் தீக்குளித்து போராடிக்கொண்டிருக்கும் வீரமிகு தமிழர்படையின் உணர்வூகளுக்கும் மத்தியில் நின்று எனது கருத்தை இங்கு பதிகிறேன்
  .
  முதன்முதலில் தமிழ்நாட்டில் தியாகி முத்துக்குமார் அவர்கள் தீக்குளித்தபோது அவர் எழுதிவைத்திருந்த மடலை படித்தபோது என்னுள்ளமும் உடலும் ஒருகணம் சிலிர்த்து அடங்கியது. ஈழத்தை தமது தாய்நாடாக கொண்டுள்ள ஒரு சில தமிழ்களுக்கே எமது போராட்டத்தில் இல்லாத தௌpவூம் உணர்வூம் எவ்வாறு இவருக்குள் ஏற்பட்டது என்பதை எண்ணிப் பார்த்ததுண்டு. இந்த சம்பவம் நான் எனது மக்களுக்காக இன்னும் எவ்வளவூ வீச்சுடன் உழைக்க வேண்டும் என்பதன் அளவை எனக்கு உணர்த்தியது. இது போன்றே ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் தமிழீழத்தமிழன் ஈகப்பேரொளி முருகதாசன் சிங்கள அரசின் தமிழின அழிப்பு தொடர்பாக பன்னாட்டு கவனத்தைக்கோரி தனது இன்னுயிரை அர்ப்பணித்தபோது இந்த வீரத்தமிழன் பற்றியூம் அவரின் பின்னணி பற்றியூம் பலரையூம் கேட்டேன் தமிழீழத்தை பிறப்பிடமாக கொண்ட இவன் 2000ம் ஆண்டு காலப்பகுதியில் தனது சொந்த மண்ணைவிட்டு அரைமனதுடன் புலம்பெயர்ந்து சென்ற செய்தியை தாயகத்திலுள்ள அவரின் உறவினர் ஒருவருடாக அறிந்து கொண்டேன் அத்துடன் மட்டுமன்றி அண்மைக்காலமாக தாம் அவருடன் தொடர்புகொள்ளும் வேளைகளிலெல்லாம் தாயக நிலமைகள் தொடர்பாக கேட்பதுடன் தாயகத்து நிலமைகளை கதைக்கும்போது அவருடைய குரல் தழுதழுக்கும் எனவூம் கேள்விப்பட்டேன். தியாகி முத்துக்குமாரின் செய்தி என்னுள் விடுதலையின் வீச்சை அதிதப்படுத்தியிருந்த அதேவேளை ஆச்சரியத்தையூம் ஏற்படுத்தியிருந்தது ஆணால் முருகதாசனின் செய்தியை நான் கேள்விப்பட்டபோது என்னுள் ஆச்சரியம் ஏற்படவில்லை பெருமையே ஏற்பட்டிருந்தது. இவர் ஐக்கிய நாடுகள் சபைக்கு தான் எழுதிய கடிதத்தில் ஈழத்தமிழரின் அழிவை தடுத்து நிறுத்துங்கள் என வேண்டுகோளை விடுத்திருந்தபோதும் புலம்பெயர்ந்த நாட்டிலுள்ள தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் சொல்லாத செய்தி ஒன்றையூம் விட்டுச் சென்றுள்ளார். உணர்வூள்ள தமிழர் ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும் என்பதை முருகதாசன் தனது உடலில் பற்றவைத்த நெருப்பு மூலம் உலகத்தமிழர் ஒவ்வொருவருக்கும் கூறியிருந்தார் என்றே நான்கருதுகிறேன். இதன் அர்த்தம் ஒவ்வொருவரும் தமது உடலில் தீயைப்பற்றவைக்க வேண்டும் என்பது இல்லை. மாறாக அனைத்து தமிழர்களுமே தமது உள்ளங்களில் உணர்வூத்தீயை பற்ற வைக்க வேண்டும். இந்தத்தீ வானளாவ உயர்ந்து எம்மக்களுக்கான விடுதலையை பெற்றுக்கொடுக்கவேண்டும். என்பதாகவே இருக்கும் என நான் உணர்கிறேன்.

  தீக்குளிப்பு நிகழ்வூகள் உலகத்தில் எவருக்கும் புதிதான நிகழ்வூ இல்லை குறிப்பாக கூறுவதானால் தமிழர் வரலாற்றில் இது பண்டைக்காலம் தொட்டு இருந்துவரும் வழக்கமாகும். அத்துடன் வியட்நாம் போர்க்காலத்தில் அமரிக்கர் கூட அந்தப்போரை நிறுத்தக்கோரி தீக்குளிப்பு செய்ததாக நான் கேள்விப்பட்டுள்ளேன். அதுமட்டுமன்றி வெவ்வேறு இன மக்களிடையேயூம் இவ்வாறான வழக்கம் இருந்துள்ளதாகவூம் நான் கேள்விப்பட்டுள்ளேன்.
  எனது அன்பான உறவூகளே உரிமைக்காக நடக்கும் யூத்தத்தையூம் அதற்கு பக்கபலமாக நடைபெறும் போராட்டங்களையூம் அதன் வடிவங்களையூம் எவரும் விமர்சனம் செய்யவோ கொச்சைப்படுத்த முடியாது. ஒவ்வொரு இனமும் தனது பலம், மரபு, எதிரியின் பலம் குணம் மரபுகளுக்கேற்ப தனது போராட்ட வடிவங்களை தீர்மானிக்கும். கரும்புலிகளையூம் கரும்புலித்தாக்குதல்களையூம் பிழையாகக்கூறும் உலகமும் மனிதாபிமானம் பற்றிபேசும் எமது சகோதரர்களான சிலரும் தமிழர் படையூடன் மோதும் சிங்களப்படை மிகையொலி யூத்த விமானங்களையூம் அதன்மூலம் போடப்படும் சர்வதேச ரீதியாக தடைசெய்யப்பட்ட இரசாயன மற்றும் கொத்துக்குண்டுகள் 1000கிலோ குண்டுகள் பற்றியூம் மேலும் பாடசாலைகள் வைத்தியசாலைகள் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் பற்றியூம் கரிசனை கொள்ளவேண்டும் என்பதுவே எமது மக்களின் அவா.
  இதில் பின்னுhட்டம் எழுதியூள்ள ஒரு நண்பர் இவ்வாறான சம்பவங்கள் ஐரோப்பாவில் தமது இருப்பையே கேள்விக்குரியதாக்கிவிடும் என்ற தனது பயத்தினை வெளிப்படுத்தியூள்ளார். உண்மையில் தனக்காக இல்லாது பின்னுhட்டம் எழுதிய நண்பருக்காகவூம் அவரின் குடும்பத்திற்காகவூம் அவரின் உறவினர் ஒவ்வொருவருக்காகவூம்தான் அந்த முருகேசன் தனது உயிரை அர்ப்பணித்துள்ளார் என்பதை நாம் ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

  இன்னுமொரு நண்பர் தாயகத்தில் நடைபெறும் அவலங்களை செய்திகளாக ஒலிபரப்பும்போது சிறுவர்களின் மனங்கள் தாக்கத்துக்குள்ளாகும் என கூறியிருந்தார். நான் இவ்விடயத்தில் ஒன்றை மட்டுமே கூறவிழைகிறேன். எமது மக்கள் இன்று தமது சொந்த மண்ணில் அவலத்தை சந்தித்து நிற்பதற்கான முழுப்பொறுப்பையூம் சிங்கள அரசே ஏற்கவேண்டும். இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் எமது உரிமைக்கான இந்த யூத்தம் நிச்சயம் வெற்றிபெறும். இந்தக்கருத்தை உங்களுக்கு பதிவூசெய்திருக்கும் நான் என்னுடன் களத்திடை நிற்கும் எனது நண்பர்கள் இங்குள்ள எமது மக்கள் அந்த வெற்றியை பார்க்க முடியாமல் போகலாம் இவ்வேளை புலத்தில் வாழும் உங்களிடமும் எமது இளம் சமுதாயத்திடமும் தான் இந்தப்போராட்டம் கையளிக்கப்படும். இவ்வேளை வெள்ளை உடைக்குப்பின் வாழும் இரக்கமே இல்லாத சிங்கள இனவெறி அரசே உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளும் சவாலாக விளங்கும் இவர்களின் உண்மை முகத்தை உங்கள் பிள்ளைகள் இப்போதே உணர்ந்துகொள்ள வையூங்கள்.

  ஒரு உண்மையை அனைவரும் தௌpவாக புரிந்துகொள்ள வேண்டும் சிங்கள அரசு தமிழன் மண்ணை பிடித்தால் இங்கு மீண்டும் தனது ஆட்சிக்கு ஆபத்து ஏற்படாத வகையில் ஒரு இனச்சுத்திகரிப்பை செய்து தமிழ் இனத்தையே அழிக்கும். தமிழீழம் தமிழர் என்ற இனமே எதிர்காலத்தில் இருக்காது போகலாம்.

  இன்று சூழ்நிலை காரணமாக சொந்த மண்ணை விட்டு நீங்கள் வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் உங்களுக்கு என்று இங்கு ஒரு தளம் உள்ளது. ஆனால் அனைவரும் ஒன்றாக கைகோக்காது போனால் எம் எல்லோருக்குமே எதிர்காலமில்லை என்பதே உண்மை கருத்துக்களை தெரிவிக்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் உள்ளது. அதேபோல் ஒவ்வொருவரின் உணர்வூகiயூம் மதிக்கவூம் வேண்டும். தயவூசெய்து விடுதலைக்காக தம்மை அர்ப்பணித்தவர்களின் உணர்வூகளை கொச்சைப்படுத்தாதீர்கள்.

  இப்படிக்கு
  சகோதரன்
  தமிழன்

  Reply
 • chandran.raja
  chandran.raja

  தமிழன் இப்படி உப்புசப்பில்லாத கதைகளைச் சொல்லியே ஒருஇனத்தை “குட்டிசுவர்” ஆக்கிவிட்டீர்கள். வன்னியில்லுள்ள அப்பாவி மக்களை விடுவிக்கச் சொல்லி உங்கள் மறத்தமிழன் வீரத்தமிழன் கட்டபொம்மன்களுக்கு கோரிக்கை விடுங்கள். பாதுகாப்பாகவும் வசதியாகவும் இருந்துகொண்டு உங்கள் கனவுக்காக அந்தமக்களின் வாழ்வு மூழ்கிக்கொண்டிருப்பது உங்கள் மனசாட்சியை உறுத்தவில்லையா?
  வன்னிமக்களின் இன்றைய தேவை உயிரும் சாதாரணவாழ்வுமே! இதைவிட அவர்கள் வேறு எதையும் எதிர்பார்கவில்லை. இதற்கு பெரும்பாதிப்பு ஏற்படுத்துபவர்கள் புலிகள் தான் என்பது ஏன் உங்கள் அறிவுக்கு எட்டாமல்போனது வக்கிரபுத்தியா? ஆதாயநோக்கா?? இதை தெளிவுபடுத்துங்கள் முடியாவிட்டால் உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.

  Reply
 • thamilan
  thamilan

  அன்புத்தம்பி
  நீங்கள் முதலில் வன்னிக்கு வாருங்கள் இங்குள்ள மக்களுடன் கதையூங்கள் பின்னர் உங்களின் இந்த கருத்துக்களை பதியூங்கள். சரி நீங்கள் சொல்வதன்படி மக்களை புலிகள் மறித்து வைத்திருப்பதாகவே வைத்துக்கொள்வோம் அதில் என்ன தவறு இருக்கிறது? சீன விடுதலைப் போராட்டத்திலும் சரி வியட்நாம் விடுதலைப்போராட்டத்திலும் சரி ஏன் ஸ்ராலின்கிராட் சண்டையிலாகட்டும் இன்னும் விடுதலையடைந்த பலநாடுகளும் அந்த நாட்டு அரசுகள் தமது மக்களை வலிந்தே விடுதலையை நோக்கி போராடச் செய்தனர்

  இன்று சிங்கள இராணுவம் வல்வளைத்த பகுதிகளில் இராணுவத்திடம் சிக்கிக்கொண்ட மக்களின் நிலை என்ன? இதை நீங்கள் அறியவில்லையா? கிளிநொச்சியில் பொதுமக்களுக்காக என கட்டப்பட்ட பொது மருத்துவமனை இன்று சிங்கள இராணுவத்தால் என்ன தேவைக்காக பயன்படுத்தப்படுகிறது? இராணுவத்தால் பிடிக்கப்படும் மக்களில் இளைஞர் யூவதிகளை தனிமைப்படுத்தி அவர்களில் யூவதிகளை வைத்தியசாலையின் இரண்டாம் மாடியில் வைத்துள்ள சிங்கள இராணுவம் ஓய்வில் களமுனையிலிருந்து வரும் இராணுவத்தினரின் வக்கிரமான உடல் இச்சையை தீர்த்துக்கொள்ள அவர்களை பயன்படுத்துகிறது. இதனை வன்னிக் களமுனையில் இருந்து விடுமுறையில் தென்பகுதிக்கு வீடுவந்த ஒரு சிங்கள இராணுவ வீரனே கூறியூள்ளான். இதனைவிட யாழ்ப்பானத்தில் கோப்பாய் பகுதியில் இராணுவ முகாம்களுக்கு அருகில் வாழும் மக்களிடம் சென்று சற்று ஆறுதலாக கதைத்துப் பாருங்கள். அண்மையில் இரணைப்பாலைப் பகுதியை வல்வழைப்புச்செய்த இராணுவத்தினர் மீது புலிகள் தாக்குதல் நடாத்தி அவர்களை விரட்டியடித்தபோது அந்த இராணுவத்தினரின் பதுங்ககளிக்குள்ளிருந்து ஒரு இராணுவத்தால் பிடிக்கப்பட்ட இளம்பெண் புலிகளால் மீட்கப்படார் இதற்கு உங்களால் என்ன விளக்கம் கூறமுடியூம். ஏனைய அந்த இராணுவ காவலரன்கள் முழுவதும் பெண்களின் உடைகளும் உள்ளாடைகளும் இருந்துள்ளன. கைப்பற்றப்பட்ட இராணுவத்தினரின் உடைப்பைகளில் பெண்களின் உள்ளாடைகள் இருந்ததைப்பார்த்த புலிப்போராளிகள் அதிர்ச்சி அடைந்ததாக கூறினர். இந்த வக்கிர புத்தியூள்ள சிங்களவனா எமது மக்களுக்கு விடிவைத் தருவார்கள்? இவர்களை நம்பி எவ்வாறு எமது மக்களை இராணுவத்திடம் அனுப்புமாறு புலிகளை கோருவது. ………………..

  விடுதலை என்பது விலைமதிக்க முடியாதது அதற்கு உயர்ந்த விலைகள் கொடுக்கப்பட்டே தீரவேண்டும். மலையடிவாரத்தில் புதைகுழிகள் அமையாது மலையூச்சியை வென்றெடுக்க முடியாது இது இஸ்ரேலிய தளபதி ஒருவரின் கூற்று. மானத்தை இழந்து உயிர்வாழ சிலரே விரும்புவர் ஆணால் மானமுள்ள மனிதன் சண்டையிட்டு மாளவே விரும்புவான்

  தமிழன்

  Reply