இலங்கை அரசினுடைய நடவடிக்கைகளை கண்டித்து போராட்டங்களில் ஈடுபடுவோர் தொடர்ச்சியாக தனிமைப்படுத்தல் சட்டத்தின் ஊடாக கைது செய்யப்படுகின்றனர். நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் கேள்வியெழுப்பப்பட்ட போது பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தனிமைப்படுத்தல் சட்டம் மீறப்பட்டதாலேயே குறித்த கைதுகள் இடம்பெற்றதாகவும் கைதுகள் தொடரும் எனவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் , அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு மக்களிற்கு உள்ள உரிமைக்கு ஆதரவாக இலங்கைக்கான ஐக்கியநாடுகளின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபடுவோர் ஒன்றுகூடுவதற்கான உரிமையில் ஆர்ப்பாட்டங்களிற்கான உரிமையும் அடங்கியுள்ளது. கருத்துசுதந்திரம் பொதுமக்கள் கொள்கைகளில் தாக்கம் செலுத்துதல் போன்ற ஏனைய உரிமைகளை பயன்படுத்துவதற்கு அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை உதவுகின்றது.
கொரோனாவைரசினை கட்டுப்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் பொதுமக்களின் சுகாதாரத்தை பாதுகாக்கின்ற நியாயமான நடவடிக்கைகளிற்கு அப்பால் செல்லாமலிருப்பது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.