‘டெல்டா’ வைரஸ் பரவல் அபாய வலயமாக கொழும்பு நகரம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு மாநகரை அண்மித்த பகுதிகளில் ‘டெல்டா’ வைரஸ் தொற்றுடன் மேலும் 14 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று கொழும்பு மாநகர சபையின் தலைமை மருத்துவ அதிகாரி ருவன் விஜயமுனி குறிப்பிட்டுள்ளார்.
உருமாறிய கொரோனா வைரஸ் வகைகள் பரவுவது கொழும்பு மாநகரிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் தீவிரமடைந்துள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உருமாறிய டெல்டா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்கள் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றும் மருத்துவ அதிகாரி ருவன் விஜயமுனி குறிப்பிட்டுள்ளார்.
டெல்டா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் பரிசோதனை முடிவுகள் சுகாதார அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றும், உருமாறிய வைரஸ்கள் தொடர்பாக சுகாதார அமைச்சு மேலதிக ஆய்வுகளை மேற்கொள்கின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.