இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதுடன் மரணங்களும் அதிகரித்து வருகின்ற நிலையில் நேற்று ஒரு அறிவிப்பினை அரசு வெளியிட்டிருந்தது. அதாவது இரவு 10 மணி தொடங்கி அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு அமுலாவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பலர் கேலியும் – கிண்டலும் செய்திருந்தனர்.
இந்நிலையில் ,இன்று (16) முதல் ஒவ்வொரு நாளும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தொடர்பில் ஊடக நிகல்வு ஒன்றில் பேசிய இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் “ இரவு நேரங்களில் களியாட்ட நிகழ்வுகளை நடத்துவதன் காரணத்தினாலேயே குறித்த காலப்பகுதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்