வைன் ஸ்டோர்ஸ் மற்றும் பியர் போத்தல்கள், கேன்களை விற்பனை செய்யும் நிலையங்களை இன்று முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுவரி திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொரொனா தொற்றினை கட்டுப்படுத்தும் முகமாக பயணத்தடை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதோடு மதுபானசாலைகளும் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்றைய தினம் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இலங்கையின் பலபகுதிகளிலும் மதுபானபட்பிரியர்கள் அலைமோத ஆரம்பித்துள்ளதால் மதுபானத்தால் ஒரு புதிய கொரோனா கொத்தணி உருவாக வாய்ப்பபுக்கள் அதிகமாகியுள்ளது.
மதுபானசாலைகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து மதுபானசாலைகளின் முன்பாகவும் நீண்ட வரிசையில் மது பிரியர்கள் காத்திருந்து மதுபானத்தை கொள்வனவு செய்வதை காணக்கூடியதாகவுள்ளது.
மதுபானசாலைகளுக்கு அண்மையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதோடு சமூக இடவெளி, பேணப்படவில்லை. பொலிஸார் அவ்விடத்தில் வீதிக் கடமையில் ஈடுபட்டிருந்தும் சமூக இடைவெளி பேணாமையை கருத்தில் கொள்ளாது செய்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.