சாரதியை தாக்கி நிர்வாணமாக்கி சித்திரவதை செய்த சப்ரகமுவ சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் – ஜனாதிபதிக்கு அதிர்ச்சியூட்டும் கடிதம் !

வீதியில் சாரதி ஒருவரை தாக்கிய சம்பவம் தொடா்பில், ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட  பிரதி பொலிஸ் மா அதிபர்  ஒருவர், தற்போது சித்திரவதை மற்றும் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்கும் உள்ளாகியுள்ளார்.

சட்ட நிறுவனம் ஒன்றினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இது தொடா்பில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

வீதியில் இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடா்பில் அதிா்ச்சியூட்டும் தகவல்கள், சட்ட நிறுவனத்தின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாரதி சார்பில் முன்னிலையாகியுள்ள நீலகண்டன் மற்றும் நீலகண்டன் நிறுவனத்தினர், சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமது கட்சிக்காரர் சாா்பில் ஜனாதிபதியிடம் கோாியுள்ளனா்.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி காட்சிகளில் சப்ரகமுவ சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரன்மல் கொடிதுவக்கு சாரதியை வீதியில் தாக்கியமை காண்பிக்கப்பட்டது.

இதையடுத்து அவர், பொலிஸின் மருத்துவ சேவைகள் மற்றும் நலப்பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

எவ்வாறாயினும், நீலகண்டன் மற்றும் நீலகண்டன் சட்டநிறுவனக் கூற்றுப்படி, வீதி சம்பவத்தைத் தொடர்ந்து தமது கட்சிக்காரா், கிாியெல்ல பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு ஒரு அறைக்குள் வைத்து சித்திரவதை செய்யப்பட்டுள்ளாா்.

கிரியெல்ல பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமது கட்சிக்காரர், ஒரு அறைக்குள், நிர்வாணமாக்கப்பட்டு மண்டியிடும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் அப்போது இரண்டு அதிகாரிகள் முன்னிலையில் சாரதியை சிரேஷ்ட டிஐஜி தாக்கியதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமது கட்சிக்காரர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், நிர்வாணமாக புகைப்படம் எடுக்கப்பட்டதாகவும் வழக்கறிஞர், தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *