காதல் விவகாரம் – தந்தை மற்றும் சிறிய தந்தை தாக்கியதால் சிறுமி மரணம் !

கம்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுன்ட்டெம்பல் பகுதியில் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் 14 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இசம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தையும், சிறியதந்தையும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

“காதல் விவகாரம் காரணமாக சிறுமியின் சிறியதந்தை நேற்றைய தினம்(செவ்வாய்கிழமை) அவரை தாக்கியுள்ளார். அதன்பின்னர் நேற்று காலை சிறுமி உடல்நிலை சரியில்லாமல் புலம்பிய போது, சிறுமியின் தந்தை மீண்டும் தாக்கியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

பின்னர் சிறுமியை அவரது தாயார் அருகில் உள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும், பின்னர் மயக்கமடைந்த சிறுமி கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கம்பளையிலுள்ள பிரபல மகளிர் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் நிபுனி நுவந்திகா பண்டார (வயது – 14) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

கம்பளை நீதிமன்ற நீதவானின் மரண விசாரணைகளின் பின் சடலம் மீதான பிரேத பரிசோதனை இடம்பெற்று சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தை மற்றும் சிறியதந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களை இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *