“ரணில் நாட்டின் சொத்துகளை விற்பதற்கு கைதேர்ந்தவர்.” என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் சினிசிட்டா மண்டபத்தில் இன்று (22) இடம் பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
ரணிலும், கோட்டவும் ஒரே அணியாக இருப்பது வெளியில் நன்றாக தென்படுகின்றது. ஒருவரை ஒருவர் காப்பாற்றும் செயற்பாடு இதற்கு சான்று. மஹிந்த ராஜபக்ஸ அன்று மக்களின் பணத்தை களவாடியதாலேயே 2015 இல் அவரை தோற்கடித்து மைத்திரி – ரணில் ஆட்சிக்கு மக்கள் வாக்களித்தனர்.
இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையை தீர்க்க தற்போது வெளிநாடுகளில் கடன் வாங்குகின்றனர். அடுத்த வருடத்தில் அவற்றை மீள செலுத்த வேண்டும் இப்படி சென்றால் நெருக்கடியில் இருந்து மீள முடியமா? தற்போதைய நெருக்டிக்கு ரணில் தீர்வை வழங்க போவதில்லை. அவர் நாட்டின் சொத்துகளை விற்பதற்கு கைதேர்ந்தவர்.
ஆகவே தற்போதைய நிலையில் எவருக்கும் அரசியலில் தெளிவில்லை. துரத்த வந்தவர் ஜனாதிபதியாகவும் துரத்தப்பட்டவர் பிரதமராகவும் இருக்கும் நிலை இன்று உருவாகியுள்ளது.
ஆகவே வழமைப்போன்று ஒருவரை ஒருவர் காப்பாற்றுவதே நடக்கும். கோட்டாவை வீட்டுக்கு செல்லுமாறு கூறிய ஹரீன், மனுச ஆகியோர் தற்போது அமைச்சு பதவிகளைப் பெற்றுள்ளனர். இதை எவருக்கும் விளங்கி கொள்வது கடினம் அல்ல.
ஆகவே எமது நாட்டின் போக்கு இப்படிதான். அகவே உருவங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதே தவிர கொள்கையளில் மாற்றம் ஏற்படவில்லை. இப்போது பழக்கப்பட்ட அரசியல் இயந்திரமே இயக்கப்படுகின்றது. இது புதிய கதையல்ல வழமையான கதை மாத்திரமே. ஆகவே இவர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக போராட வேண்டும் என்றார்.