2019 ஆம் ஆண்டு இருந்த பொருட்களின் விலைகளை திரும்ப கொண்டு வருவது சாத்தியமில்லாத நிலையி்ல், மக்களின் வருமானத்தை படிப்படியாக அதிகரிப்பதே தற்போது செய்யக்கூடிய காரியம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சூம் (zoom) தொழிநுட்பத்தின் ஊடாக இளம் தொழில் வல்லுநர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுடனான கலந்துரையாடலின் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இளைஞர்கள் நம்பிக்கை வைக்க கூடிய நாட்டைக் கட்டியெழுப்ப, தாம் முன்னெடுத்துள்ள சவாலை நிறைவேற்ற தயாராக இருப்பதாக தெரிவித்த பிரதமர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த வருடம் அது சாத்தியமில்லையென்றாலும் 2024ஆம் ஆண்டிலிருந்து நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்ல முடியும் என தெரிவித்துள்ளார்.
“நாம் சரியான பாதையில் சென்றால், இந்த ஆண்டு கடினமாக இருக்கும், ஆனால் 2024 ஆ ம் ஆண்டு முதல் நம்பிக்கையுடன் முன்னேறலாம். 2023ஆம் ஆண்டு ஒரு சிறிய முன்னேற்றத்தை காணலாம். என தெரிவித்துள்ளார்.
Mohamed SR Nisthar
Before the “Aragalaya” participants start shouting “Ranil Go Home”, can you please clean up your seat an hold a fresh election for the people to decide as to their next able government.