கீழைத்தேயத்தின் தானியக்களஞ்சியத்தை கடன் தேசமாக மாற்றிய இலங்கையின் தலைவர்கள் !

எதிர்கால நுகர்வுக்காக 100,000 மெட்ரிக் தொன் அரிசியை வழங்குமாறு இலங்கை பங்களாதேஷிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ மற்றும் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகருக்கு இடையில் கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் கைத்தொழில்களுக்கு தேவையான மூலப்பொருட்களை பெற்றுத்தருமாறும் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளதுடன் நட்பு நாடு என்ற ரீதியில் இயன்றளவு உதவிகள் வழங்கப்படும் எனவும் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.
……………………………………..
கீழைத்தேயத்தின் தானியக்களஞ்சியம் என அரசர் காலங்களில் சிறப்பிக்கப்பட்ட தன்னிறைவு தேசமான இலங்கை இன்று ஒரு வேளை சோற்றுக்காக அருகிலுள்ள எல்லா நாடுகளிடமும் கையேந்துகின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இலங்கையில் விவசாயத்துக்கான எல்லா வளங்களுமே உள்ள நிலையில் ஆட்சியாளர்களின் முறையட்ட திட்டங்களாலும் கொள்கைகளாலும் இலங்கை இன்றைய இந்த விவசாய வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளது.
உரப்பயன்பாடு தொடர்பில் தெளிவற்ற கொள்கைகளை மிக விறுவிறுப்பாக நடைமுறைப்படுத்தியமை, விவசாயிகளின் உற்பத்தி தொடர்பில் உத்தரவாத விலை ஒன்று நடைமுறையில் இல்லாமை, விவசாயிகளின் பிரச்சினைகளை கவனத்தில் எடுத்து நிவர்த்தி செய்யாமை என பல காரணங்களால் இன்றைய இந்த உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
விவசாயத்துக்கு ஏற்ற வகையிலான நீர்ப்பாசன கட்டமைப்புக்கள் மன்னர் காலங்களில் அளவுக்கதிகமாகவே உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இதனை முறையாக பயன்படுத்த தவறிவிட்டனர் 2000க்கு பின்னர் பதவிக்கு வந்த ஜனாதிபதிகள்.
இப்போது கூட விவசாயத்தை மீண்டும் மேம்படுத்தி உணவு உற்பத்தியில்  தன்னிறைவை ஏற்படுத்த முயற்சிக்காத இலங்கையின் தலைவர்கள் தொடர்ந்தும் நெல்லை கடனாக பெறுவதிலேயே கவனம் செலுத்தகிகொண்டிருக்கின்றனர். இந்த முட்டாள் தனமான தலைவர்களே இலங்கையின் விவசாயப்பொருளாதாரத்தை அழித்தவர்கள் என்பஃதெ உண்மை.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *