நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை ஜனாதிபதி வேட்பாளருமான டலஸ் அழகப்பெருமவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கவுள்ளது.
எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில், இன்றைய தினத்திற்குள் அறிவிக்க எதிர்ப்பார்ப்பதாக கூட்டமைப்பு கூயிறிருந்த நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் சற்றுமுன்னர் இதனைத் தெரிவித்தார்.
அதிபர் பதவிக்காக போட்டியிடும், பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, டலஸ் உள்ளிட்டோர் தமது எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் தம்முடன் கலந்துரையாடியுள்ளதாக இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருந்தார்.
இந்த நிலையில், கட்சி உறுப்பினர்களுடன் ஆராய்ந்ததன் படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.