இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவானதை தொடர்ந்து அடுத்தடுத்து பல மேற்கத்திய நாடுகளில் இருந்து ஆதரவும் வாழ்த்துக்களும் கிடைத்துக் கொண்டு இருக்கின்றன. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் இலங்கையின் புதிய ஜனாதிபதிபதியுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயாராக உள்ளது என அறிவித்தார்.
இந்த நிலையில் அடுத்த அறிவிப்பாக ஐ.நா ஒரு கருத்தை வெளியிட்டுள்ளது. இதன்படி சர்வதேச நிதி நிறுவனங்கள், தனியார் கடன் வழங்குவோர் மற்றும் ஏனைய நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிக்க முன்வர வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை பிரித்தானியாவும் தன்னுடைய ஆதரவை வெளியிட்டுள்ளது. புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சாரா ஹில்டன் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அத்துடன் புதிய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற பிரித்தானிய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
…….
சில தினங்களுக்கு முன்பு பிரித்தானியாவின் முன்னாள் இராஜதந்திரி பீட்டர் ஹீப் ” 150 வருடங்கள் அடிமைப்படுத்திவிட்டு இன்று ஆபத்தில் உள்ள இலங்கைக்கு பிரித்தானியா உதவாமல் உள்ளது.” என தெரிவித்திருந்தார். கோட்டாபய ராஜபக்ஷ பதவியில் இருந்த போது அமைதிகாத்த பிரித்தானியா ரணில் பதவியேற்றதும் தன்னுடைய மௌனத்தை கலைத்துள்ளது.
https://www.facebook.com/102306228271669/posts/pfbid0a1DdwpZcgeB4juBF5XAivdx1tct6RhvkYXSmvVeQQVy3BQc6gQKhqS93izmuPfFPl/?app=fbl
முன்னதாக நேற்றைய தினம் சர்வதேச நாணய நிதியமும் இலங்கைக்கான கடன் திட்டங்கள் குறித்து பேச தயார் என அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.