அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இன்று இலங்கை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.
Met with President @RW_UNP at the Presidential Secretariat today. He takes office at a time when Sri Lanka stands at a crossroads. We discussed how it arrived at this point of economic & political crisis, and how we can work together to navigate toward a brighter future for all. pic.twitter.com/qCAS1TGBri
— Ambassador Julie Chung (@USAmbSL) July 27, 2022
இதன் போது, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் இந்த கட்டத்தில் பதவியேற்றமை பற்றியும், பிரகாசமான எதிர்காலத்தை நோக்கிச் செல்ல நாம் எவ்வாறு ஒன்றிணைந்து செயல்படுவது என்பதையும் நாங்கள் விவாதித்தோம் என தெரிவித்துள்ளார்.
மேலும், எமது நாடும் எமது மக்களும் 70 வருடங்களுக்கும் மேலாக நண்பர்களாகவும் பங்காளிகளாகவும் இருந்து வருகின்றனர் என்றும் நல்லாட்சியை அரவணைத்துச் செல்லும், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து, மக்களின் அபிலாஷைகளுக்கு செவிசாய்க்கும் உறவுகள் இலங்கையில் மலரும் எனவும் தெரிவித்துள்ளார்.