“ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச கடும் அழுத்தங்களை சந்தித்தார். அவர் முன்னர் கடும்போக்குவாதியாக காணப்பட்டார். தற்போது மென்மையானவராக மாறிவிட்டார். ” என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
சண்டே டைம்சிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர்,
நான் அரசியலில் தொடர்ந்தும் நீடிப்பேன். பொருத்தமான தருணத்திலேயே ஓய்வு பெறுவேன். அதுவரை நான் போகமாட்டேன்.
பொதுஜனபெரமுனவின் தலைவராக தொடர்ந்தும் நீடிப்பதா என்பதை கட்சியே தீர்மானிக்கவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டாலும் நான் ஒரு சட்டத்தரணி. என்னால் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக பணிபுரிய முடியும். தேவையென்றால் அதனை செய்ய தயார்.
கோத்தாபய ராஜபக்ச தான் செய்துமுடித்திருக்கவேண்டிய விடயத்தை செய்து முடித்திருக்கவேண்டும். ஆனால் அவர் அரசியல்வாதியில்லை. நாட்டிலிருந்து தப்பியோடுவது குறித்து எனக்கு அவர் தெரிவிக்கவில்லை. கோத்தாபாய ராஜபக்ச சென்றிருக்ககூடாது. இலங்கையிலிருந்து வெளியேற தீர்மானித்ததும் நான் போகின்றேன் . நான் எதனையும் தெரிவிக்கவில்லை.
நான் போகலாமா என கோத்தபாய ராஜபக்ச என்னை கேட்டிருந்தால் வேண்டாம் என்றே சொல்லியிருப்பேன். நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிற்கு கோத்தபாய ராஜபக்ச மாத்திரம் காரணமல்ல. முன்னைய அரசாங்கங்களும் நானும் கூட அதற்கு காரணம் பதில்கூறவேண்டும்.
கோத்தபாய ராஜபக்ச தான் நம்பிய ஆலோசகர்களின் ஆலோசனைப்படி செயற்பட்டார். ஆகவே அவர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தமுடியாது. பாதுகாப்பு செயலாளராக காணப்பட்டவேளை அவர் சிறந்த நிர்வாக திறனை வெளிப்படுத்தினார். ஜனாதிபதியாக அவர் கடும் அழுத்தங்களை சந்தித்தார். அவர் முன்னர் கடும்போக்குவாதியாக காணப்பட்டார். தற்போது மென்மையானவராக மாறிவிட்டார்.
கோத்தபாய ராஜபக்ச தன் முன் காணப்பட்டபணிகளை சரியாக பூர்த்தி செய்திருக்கவேண்டும் எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.