நாட்டின் சட்ட முறைமை பற்றிய அறிவை பாடசாலை மாணவர்களுக்கு வழங்கும் வேலைத்திட்டம் நடைமறைப்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும், சாதாரண மாணவர்களுக்கு சட்ட அறிவை வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“தற்போது 7-8 ஆண்டுகளாக, நாட்டின் அடிப்படை சட்ட முறைகள் பற்றிய கல்வியை சாதாரண தர மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைத்துள்ளோம்.
இது தொடர்பாக அமைச்சர்கள் குழு முடிவுவெடுத்துள்ளதுடன் அதை தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான கல்விப் பாடத்திட்டம், சாதாரண தர மாணவர்களுக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
2023ல் நடைமுறைப்படுத்துவோம் என நம்பினோம். ஆனால் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படுமா..? எனத் தெரியவில்லை.
இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டுக்குள் இந்த பாடத்திட்டம் மாணவர்களிடத்தில் கொண்டு சேர்க்கப்படும். ஏனெனில் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் நாட்டின் அடிப்படை சட்டம் மற்றும் அவர்களின் உரிமைகள் என்ன என்பதைப் பற்றிய புரிதலை கொண்டிருக்க வேண்டும்.
நம் நாட்டில் உள்ள பலருக்கு அவர்களின் உரிமைகள் என்னவென்று தெரியாது. அதனால்தான் சில நேரங்களில் அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகளை சாதகமாக்கிக் கொள்கிறார்கள். அதனால் பல புதிய சட்டங்களை இயற்ற வேண்டியுள்ளது” என தெரிவித்தார்.